Actor Dhanush: தனுஷ் மூலம் வெடித்த பிரச்னை.. மோதிக்கொள்ளும் நடிகர் சங்கம் – தயாரிப்பாளர் சங்கம்.. என்னதான் சிக்கல்? முழு விவரம்!
நடிகர்- நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம், மற்றும் இதர செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருப்பதால், அதை முறைப்படுத்த பல்வேறு முயற்சி செய்து தமிழ் திரைத்துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டியுள்ளது. அதனால், வருகின்ற 01.11.2024 முதல் படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான வேலைகளையும் நிறுத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கத்தின் கூட்டம் சென்னையில் பெற்றது. அதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தலைமையில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் தனுஷ் குறித்த அறிவிப்பு சர்ச்சையை கிளப்பியுளது.
இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியீட்டு இருக்கும் அறிக்கையில், முன்னனி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 ஆவாரங்களுக்கு பிறகே OTT- தளங்களில் வெளியிட வேண்டும் என்று கூட்டத்தில் ஏகமனதாக திமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சில நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள், குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து முன்பணம் பெற்று, மற்ற தயாரிப்பு நிறுவனங்களுக்கு பணிபுரிகின்றனர். இதனால் பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது. எனவே, முன்னோக்கிச் செல்லும்போது, எந்தவொரு நடிகரோ அல்லது தொழில்நுட்ப வல்லுனரோ அத்தகைய பிரச்சனகைளை தவிர்க்க, வேறு படங்களுக்கு செல்வதற்கு முன் ஒப்புக்கொண்ட திரைப்படங்களை முடிக்க வேண்டும்.
நடிகர் தனுஷ் அவர்கள் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் நடிகர்- நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம், மற்றும் இதர செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருப்பதால், அதை முறைப்படுத்த பல்வேறு முயற்சி செய்து தமிழ் திரைத்துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டியுள்ளது. அதனால், வருகின்ற 01.11.2024 முதல் படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான வேலைகளையும் நிறுத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
Also read… இவ்வளவு சீக்கிரமே வருதா? இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ் அப்டேட்
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் தீர்மானங்களுக்கு நடிகர் கார்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, திரைத்துறையில் தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் நல்ல உடன்பாட்டுடன் தொடர்ந்து நல்ல முறையில் பணியாற்றி வருகிறோம். நடிகர்கள் சார்ந்த பிரச்சினைகளும், தயாரிப்பாளர்கள் சார்ந்த பிரச்சினைகளும் இருதரப்பும் கலந்து பேசி குழுக்கள் அமைத்துதான் நிர்வாக முடிவுகள் எடுக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் தயாரிப்பாளர் சங்கம் எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். புகார் மற்றும் வேலைநிறுத்தம் தொடர்பாக அவர்களாகவே ஒரு முடிவை எடுத்துள்ளனர். இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக நடிகர் சங்க தலைவரிடமும் செயலாளர் விஷாலிடமும் வீடியோ கான்பரன்ஸில் பேசி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தனுஷ் தொடர்பாக இதுவரை எங்களுக்கு எழுத்துபூர்வமாக எந்தவொரு புகாரும் வராத நிலையில் தயாரிப்பாளர் சங்கம் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. தொடர்ந்து பணியாற்ற முடியாது என்று அவர்கள் கூறியிருப்பது மிக தவறானது என்றும் கார்த்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்து இது தொடர்பான அடுத்த தீர்மானங்களை அடுத்த செயற்குழுவில் நிச்சயமாக முடிவெடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.