5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தேர்தலில் வென்ற கங்கனா ரனாவத்… மறைமுகமாக கலாய்த்த பிரபல நடிகை!

Kangana Ranaut: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சிகள் வெற்றிப்பெற்றதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிட்டார். தேதல் பிரச்சாரத்தின் போது பல வைரலான கருத்துகளை பேசி சமூக வலைதளத்தில் பேசுபொருளாக கங்கனா மாறியிருந்தாலும் தேர்தல் முடிவில் அவர் மாண்டி தொகுதியில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தேர்தலில் வென்ற கங்கனா ரனாவத்… மறைமுகமாக கலாய்த்த பிரபல நடிகை!
கங்கனா ரனாவத்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Jun 2024 09:39 AM

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கங்கனா ரனாவத் வெற்றியடைந்ததை பிரபல நடிகை மறைமுகமாக கிண்டலடித்துள்ளார். தமிழில் ஜெயம் ரவியின் ‘தாம்தூம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானா கங்கனா ரணாவத். அதனை தொடர்ந்து தலைவி படத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி 2-ம் பாகத்தில் சந்திரமுகியா நடித்தார் கங்கனா. படம் பெரிய அளவில் வெற்றியடையவில்லை என்றாலும் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத் அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும் வெளியிட்டு சமூக வலைதளங்களில் பேசு பொருளாகவே இருந்து வருகிறார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சிகள் வெற்றிப்பெற்றதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிட்டார். தேதல் பிரச்சாரத்தின் போது பல வைரலான கருத்துகளை பேசி சமூக வலைதளத்தில் பேசுபொருளாக கங்கனா மாறியிருந்தாலும் தேர்தல் முடிவில் அவர் மாண்டி தொகுதியில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் கங்கனா ரனாவத் 5,37,022 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விக்ரமாதித்யா சிங் 4,62,267 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 74,755 ஆகும்.

Also read… புஷ்பா பட பாடலுக்கும் விவாகரத்திற்கும் என்ன சம்பந்தம்? – ஓபனாக பேசிய சமந்தா

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டியில் நடிகை கங்கனா ரனாவத் வெற்றி பெற்ற பிறகு, நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுடனான கங்கனா ரனாவத்தின் பகை பற்றி நடிகை சோனாலி தாக்கர் தேசாய் கிண்டலாக பேசியுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “அடுத்த 4 ஆண்டுகளுக்கு இமாச்சலில் ஹ்ரித்திக்கின் எந்தப் படமும் படமாக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவில் ரசிகர்கள் பலர் ஹ்ரித்திக்கின் படம் மட்டுமள்ள எந்த பாலிவுட் நடிகரின் படமும் அங்கு எடுக்கப்படுமா என்பது சந்தேகமே என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.

Latest News