5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விஜயின் ‘கோட்’ படத்தின் 17 நாள் வசூல் எவ்வளவு? வைரலாகும் தகவல்

கோட் படம் முதல் நாளே உலகம் முழுவதும் ரூபாய் 126.32 கோடிகளையும் நான்கு நாட்களில் ரூபாய் 288 கோடிகளையும், 13 நாட்களில் ரூபாய் 413 கோடிகளையும் வசூல் செய்ததாக படக்குழு தெரிவித்தது. இந்த வாரம் தமிழில் மட்டும் 7 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இதனால் கோட் படத்தின் காட்சிகளும் திரையரங்குகளின் எண்ணிக்கையும் தமிழ் நாட்டில் குறைந்துள்ளது.

விஜயின் ‘கோட்’ படத்தின் 17 நாள் வசூல் எவ்வளவு? வைரலாகும் தகவல்
விஜய்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Sep 2024 16:23 PM

நடிகர் விஜயின் நடிப்பில் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் வெளியாகி 17 நாட்கள் ஆன நிலையில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகி திரையரங்குகளில் மூன்றாவது வாரத்தில் ஓடிக்கொண்டு உள்ள படம் தி கோட். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது.. தமிழ் நாட்டில் மட்டும் படம் கிட்டத்தட்ட 1,100 திரையரங்குகளில் சோலோவாக ரிலீஸ் ஆனது. இந்தியா முழுவது, சுமார் 5 ஆயிரம் ஸ்க்ரீன்களில் ரிலீஸ் ஆனது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள தி கோட் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறது.

தீவிர அரசியலில் களம் இறங்க உள்ள விஜய் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருந்ததால் இந்த படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள தி கோட் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறது. விஜய் இந்தப் படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

படத்தில் அப்பா விஜய் ரா ஏஜென்டாக நடித்துள்ளார்.  இதில் மகன் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யின் வயதை குறைத்து காட்டுவதற்காக டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்பா கதாப்பாத்திரத்திற்கு காந்தி என்றும் மகன் கதாப்பாத்திரத்திற்கு ஜீவன் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. படம் பார்த்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுத்துக் கொண்டே இருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. குறிப்பாக தோனி களமிறங்கும் காட்சியெல்லாம் திரையில் காட்டப்பட்டபோது ரசிகர்கள் ஆரவாரத்தால் திரையரங்கமே அதிர்ந்தது.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25வது படமாக இந்தப் படம் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜயுடன், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி அஜ்மல் அமீர், மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தினை ஏ.ஜி.எஸ்., எண்டர்டைமெண்ட் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளது.

விஜயுடன் ரா ஏஜென்ட் அணியில் பிரபுதேவா, பிரஷாந்த் மற்றும் அஜ்மல் அமீர் உள்ளனர். ரா ஏஜென்ட்டாக இருந்த மோகன் நாட்டிற்கு துரேகம் செய்ததால் அவர் நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியா மீது தாக்குதல் நடத்த உள்ள தீவிரவாதிகளை பிடிக்க சென்ற இடத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக மோகனின் குடும்பத்தினர் உயிரிழந்துவிடுகின்றனர். தனது குடும்பத்துடன் பாங்காங்கிற்கு சுற்றுலா செல்லும் காந்திக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகிறது. அதில், தனது மகனையே இழக்கிறார். அந்த அமைப்பே வேண்டாம் என இமிகிரேஷன் அதிகாரியாக வயதான காலத்தில் வாழ்க்கையை நடத்தி வரும் காந்திக்கு மீண்டும் SATS அமைப்பிடம் இருந்து அழைப்பு வர மாஸ்கோவுக்கு செல்லும் காந்திக்கு பேரதிர்ச்சி அவருடைய ரூபத்திலேயே காத்திருக்கிறது.

Also read… Cinema Rewind: சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்க முதல் தேர்வு ஜெய் இல்லை… சசிக்குமார் சொன்ன விஷயம்

விஜையை பழி தீர்க்க முடிவெடுத்த மோகன் விஜயின் மகனை கடத்தி விஜக்கு எதிராக வளர்க்கிறார். வில்லனாக மோகன் செய்யவேண்டிய பழிவாங்கும் விசயத்தை தனது வளர்ப்பு தந்தைக்காக விஜயின் மகனே விஜய்க்கு எதிராக செய்கிறார். இதிலிருந்து விஜய் எப்படி தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கிறார் என்பது கதையாக உள்ளது.

நீண்ட நாட்களாக சீரியஸான ரோல்களில் தோன்றி வந்த விஜய் இந்தப் படத்தில் காதல், காமெடி, கிண்டல், எமோஷன், சைலன்ட், டான்ஸ், டயலாக் டெலிவரி என தெறிக்கவிட்டுள்ளார். டான்ஸ், டயலாக் டெலிவரி என தெறிக்கவிட்டுள்ளார். குறிப்பாக விஜயின் ஸ்கிரீன் பிரசன்ஸ் என அனைத்தும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு கூஸ்பம்சாக இருக்கிறது.

கோட் படம் முதல் நாளே உலகம் முழுவதும் ரூபாய் 126.32 கோடிகளையும் நான்கு நாட்களில் ரூபாய் 288 கோடிகளையும், 13 நாட்களில் ரூபாய் 413 கோடிகளையும் வசூல் செய்ததாக படக்குழு தெரிவித்தது. இந்த வாரம் தமிழில் மட்டும் 7 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இதனால் கோட் படத்தின் காட்சிகளும் திரையரங்குகளின் எண்ணிக்கையும் தமிழ் நாட்டில் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில் சிங்கிள் ஸ்கீர்ன் தியேட்டர்களில் படம் இன்னும் ஒரு வாரத்திற்கு கேரண்டியாக ஓடும். ஆனால் மல்டி ஸ்கீரீன் தியேட்டரில் படத்தின் காட்சிகளும் திரைகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைக்கப்படும். ஆனால் வட இந்தியாவில் படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளதால், வசூலில் மீண்டும் பாக்ஸ் ஆஃபீஸ் நிறையும் என கூறப்படுகின்றது. இப்படியான நிலையில் படம் முதல் 17 நாளில் ரூபாய் 440 கோடிகள் முதல் 445 கோடிகள் வரை வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளது என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் மொத்த வசூல் குறித்து படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Latest News