5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸாகும் சூப்பர் ஹிட் படம்!

நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற ஜூன் 21-ம் தேதி விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘துப்பாக்கி’ படத்தை மீண்டும் திரையிடப்படவுள்ளது. தமிழகத்தில் சமீக காலமாக 90-களில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்ற திரைப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்படுவது ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், ஏ.எம். ரத்னம் தயாரிப்பில், தரணி இயக்கத்தில், இளைய தளபதி விஜய்-த்ரிஷா நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்கில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த […]

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸாகும் சூப்பர் ஹிட் படம்!
விஜய்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Jun 2024 15:40 PM

நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற ஜூன் 21-ம் தேதி விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘துப்பாக்கி’ படத்தை மீண்டும் திரையிடப்படவுள்ளது. தமிழகத்தில் சமீக காலமாக 90-களில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்ற திரைப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்படுவது ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், ஏ.எம். ரத்னம் தயாரிப்பில், தரணி இயக்கத்தில், இளைய தளபதி விஜய்-த்ரிஷா நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்கில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி, தாமு, மயில்சாமி, மோனிஷா, நாகேந்திர பிரசாத், பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழகம் முழுவதும் விஜய் நடித்துள்ள கில்லி திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தற்போது 20 ஆண்டுகள் கழித்தும் இந்த திரைப்படத்திற்கு அதே வரவேற்பு கிடைத்துள்ளது.மற்ற திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு சில நாட்களுக்கு பிறகு திரையிடப்படுவது நிறுத்தப்பட்ட நிலையில், கில்லி திரைப்படத்திற்கு வரவேற்பு இன்னும் குறையவில்லை. குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் கில்லி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற ஜூன் 21-ம் தேதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படங்களில் ஓன்று துப்பாக்கி. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றதோடு வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார்.

Also read… புஷ்பா பட பாடலுக்கும் விவாகரத்திற்கும் என்ன சம்பந்தம்? – ஓபனாக பேசிய சமந்தா

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. ஸ்லீப்பர் செல் என்ற வார்த்தை இந்த படத்தில் இருந்துதான் தமிழகத்தில் பிரபலமானது. இன்று வரை விஜய் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக துப்பாக்கி உள்ளது. படத்தின் இடைவேளை காட்சி அனைவருக்கும் பிடித்தமான காட்சியாக இன்று வரை உள்ளது.

Latest News