5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Thangalaan Movie : தங்கலான் ஆடியோ ரிலீஸ் விழா.. பார்வதி முதல் பா.ரஞ்சித் வரை பேசிய முக்கிய விஷயங்கள்!

படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பா ரஞ்சித் செதுக்கியுள்ளார் என ட்ரெய்லரைப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். பீரியட் படமான இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது. கடந்த 2022ம் ஆண்டு முதல் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை , ஹைதராபாத் , மதுரை மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வருகின்ற 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.

Thangalaan Movie : தங்கலான் ஆடியோ ரிலீஸ் விழா.. பார்வதி முதல் பா.ரஞ்சித் வரை பேசிய முக்கிய விஷயங்கள்!
பார்வதி, பா.ரஞ்சித், விக்ரம்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Aug 2024 12:53 PM

நேற்று நடைபெற்ற தங்கலான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகை பார்வதி முதல் இயக்குநர் ரஞ்சித் வரை அவர்கள் பேசிய முக்கிய விஷயங்கள் ஒரு தொக்ப்பு. நடிகர் விக்ரமின் தங்கலான் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. இதில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. பழங்குடியினரை மையமாக வைத்தும் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பா ரஞ்சித் செதுக்கியுள்ளார் என ட்ரெய்லரைப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். பீரியட் படமான இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது. கடந்த 2022ம் ஆண்டு முதல் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை , ஹைதராபாத் , மதுரை மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வருகின்ற 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த விழாவில் கலந்துகொண்டு படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டனர்.

விக்ரம் பேச்சு:

‘தங்கலான்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்துப் பேசியிருக்கும் நடிகர் விக்ரம், ரஞ்சித் படமே ஓவியம் மாதிரிதான் பண்ணியிருக்காரு. ‘சேது’, ‘பிதாமகன்’, ‘ராவணன்’, ‘ஐ’ படத்தோட கஷ்டங்களை இந்த படத்தோட ஒப்பிடும்போது 8 சதவிகிதம்கூட கிடையாது. சின்ன வயசுல சினிமா தான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணினதுக்குப் பிறகு சரியா படிக்கல. நாடகத்துலகூட சவாலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்துதான் நடிப்பேன். கல்லூரி காலத்துல ஒரு நாடகத்துல நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. அந்த நாடகத்துல நடிச்சதும் பாராட்டுக்கள் கிடைச்சது. அன்னைக்கு என்னுடைய கால் உடைஞ்சுருச்சு என்னால நடக்க முடியாதுனு சொல்லிட்டாங்க. ஆனால் எனக்குள்ள நடிக்கணும்னு வெறி இருந்துச்சு. அப்போ இரு கைல குச்சி வச்சுக்கிட்டே மூணு வருஷம் நடந்தேன். எனக்கு நடிக்கணும் வெறி இருந்துட்டே இருந்தது. கனவை நோக்கி ஓடினால் கண்டிப்பாக அது நிறைவேறும். இன்னைக்கு நான் நடிகனாகலைன்னாலும், நடிக்கிறதுக்குதான் முயற்சி பண்ணிட்டு இருந்துருப்பேன்” என்று பேசியிருக்கிறார்.

பார்வதி பேச்சு:

”இதுவரை நான் 30 படங்களில் நடித்துள்ளேன். நிறைய நடிகர்களுடன் நடித்துள்ளேன். ஒரு நடிகருக்கு இரக்க குணம் இருக்க வேண்டும். இதெல்லாம் ஒரு குழுவின் உழைப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான மிகப் பெரிய எடுத்துக்காட்டு விக்ரம் தான் என்று சொல்வேன். கங்கம்மாளின் தங்கலானாக இருந்ததற்கு நன்றி விக்ரம். சினிமா என்பது பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால், இங்கே எல்லாமே அரசியல்தான். அரசியலற்றது என்று எதுவுமே கிடையாது. கலை என்பது அரசியல். அதை வழிநடத்தும் ராணுவத் தளபதி பா.ரஞ்சித் என்றால், அவரது படையில் நானும் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். தங்கலான் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாவது எதார்த்தமாக நடந்தது அல்ல. சமத்துவமின்மை ஏன் நிலவுகிறது என்பதை நாம் தொடர்ந்து படித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அதில் உங்களுக்கு அசவுகரியத்தை கொடுத்தாலும் நீங்கள் அதை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Also read… தெலுங்கில் ரீமேக்காகும் ‘ஆவேசம்’… ரங்காவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

பா.ரஞ்சித் பேச்சு:

”சினிமா நமது வாழ்க்கையில் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. நான் கவின் கலைக் கல்லூரியில் சேர்ந்த பின்னர் நான் பார்த்த உலக சினிமாக்கள்தான் என்னை சினிமாவை நோக்கி உந்தியது. சினிமாவில் சொல்லப்படதா விஷயங்களை சொல்ல சினிமாவை நான் தேர்ந்தெடுத்தேன்.  ஏன் இங்கு ஒரு ஒடுக்குமுறை, பாகுபாடு, பிரிவினை இருக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது. இதற்கான பதிலை வரலாற்றில் தேடினால், வரலாறு பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று பேசவேயில்லை. அது ஒருதலைப்பட்சமாக உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் இல்லைவே இல்லை, அவர்கள் குறித்த குறிப்புகள் இல்லை. வரலாற்றில் தொடர்ந்து தேடினால் ஏமாற்றம் தான் மிஞ்சுகின்றது. அதுபோலத்தான் சினிமாக்களும் இருக்கின்றன” என பேசியுள்ளார்.

“விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்த பிறகும் ஒரு சண்டை காட்சியை வைத்தேன். அப்போதெல்லாம் அவரது முகத்தை பார்க்காமல் மானிட்டரில் மட்டும் பார்ப்பேன். ஷாட் முடிந்ததும் எனது உதவி இயக்குநர்களில் யாரையாவது அழைத்து அவருக்கு ஓகேயானு பார்த்துட்டு வாங்க என்று சொல்வேன். அவர்கள் சென்று பார்த்துவிட்டு சார் ஓகே என்று சொல்கிறார் என்பார்கள். ஆனால் அவருக்கு வலித்துக்கொண்டுதான் இருக்கும். நானோ ஓகே சார் இன்னொரு ஒன் மோர் போகலாம் என்று கேட்பேன். அவ்வளவு கொடுமைப்படுத்தினேன். சாரி விக்ரம் சார் என்றும் தெரிவித்துள்ளார்.

Latest News