இணையத்தில் கவனம் பெறும் ‘கங்குவா’ படத்தின் மேக்கிங் வீடியோ!
கங்குவா படம் உலகளவில் வசூலில் ரூ.100 கோடியைத் தற்போது தாண்டி உள்ளது. 350 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து எடுக்கப்பட்ட படம் 100 கோடியை தாணவே திணறியது. இந்த நிலையில் படத்தில் முதலையுடன் சூர்யா சண்டையிடும் காட்சியின் மேக்கிங் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘கங்குவா’ படத்தின் மேக்கிங் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. கங்குவா படம் கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தற்போது கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகின்றது. கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும், ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் சூர்யாவின் கங்குவா படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் எடுக்கப்பட்டது. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும், ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் சூர்யாவின் கங்குவா படத்தை தயாரித்துள்ளது. இயக்குநர் சிறுத்தை சிவா இந்த படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படம் மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது கங்குவா படம். சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து வணங்கான், கங்குவா, வாடிவாசல், புறநானூறு ஆகிய படங்களில் கமிட்டானார். இந்த வரிசையில் முன்னதாக வணங்கானிலிருந்து வெளியேறிய சூர்யா வாடிவாசலில் நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.
படத்தில் ஒலி அதிகமாக இருப்பதாக வந்த விமர்சனத்தை தொடர்ந்து ஒலியின் அளவை 2 பாயிண்ட் குறைத்து படத்தை ஓட்டுமாறு திரையரங்கு உரிமையாளர்களிடம் தயாரிப்பாளர் ஞானவேல் கோரிக்கை வைத்திருந்தார். படம் வெளியானதில் இருந்து பல விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை பெரும் சரிவை ஏற்படுத்துகிறது என்பதே ரசிகர்களின் விமர்சனம்.
படம் கி.பி 1070-ல் தொடங்குவது போன்று காட்டப்படும். அப்போது கடலுக்குள் சுற்றும் ரோமானியர்களின் கப்பல் படை தங்களது வீரர்கள் ஓய்வு பெற ஒரு இடத்தை தேடுகின்றனர். அப்போது கடலை சுற்றி உள்ள 5 தீவுகளில் எந்த தீவை தேர்ந்தெடுப்பது என்று வரும் போது நடிகர் சூர்யா இருக்கும் பெருமாச்சி தீவை ரோமானியர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். அந்த தீவின் இளவரசனாக சூர்யா இருக்கிறார். அந்த தீவை அடைவதற்காக பல சூழ்ச்சிகள் நடக்கிறது.
Also read… ’அமரன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்
போஸ் வெங்கெட் ரோமானியர்களுடன் கூட்டு சேர்ந்து நட்டியை வைத்து சூர்யாவின் பெருமாச்சி தீவை கைப்பற்ற சூழ்ச்சி செய்கிறார். இந்த சூழ்ச்சியில் பெருமாச்சியில் உள்ள 100 பேர் நட்டியால் கொலை செய்வதற்காக அழைத்து செல்லப்படுகின்றனர்.
அந்த கூட்டத்தில் இருந்து கருணாஸ் தப்பித்து பெருமாச்சி இளவரசனான சூர்யாவிடம் தகவலை கூறுகிறார். அதனை தொடர்ந்து நட்டியை பெருமாச்சி இளவரசன் சூர்யா கொலை செய்கிறார். அவருடன் சேர்ந்து அவரது மனைவியும் இறந்துவிடுகிறார். இதனை நேரில் பார்த்த நட்டியின் மகன் சூர்யாவை கொலை செய்ய சூர்யாவுடனே இருந்து திட்டம் தீட்டுகிறான்.
ஆனால் அந்த சிறுவனை சூர்யா தனது மகனாக நினைத்து வளர்க்க நினைக்கிறார். அப்போது மீண்டும் போஸ் வெங்கட் சூர்யாவின் பெருமாட்சி தீவிற்கு எதிரியாக இருக்கும் பாபி தியியோல் மன்னனாக இருக்கு ஆரத்தி தீவிற்கு சென்று அந்த தீவை பெற்றுத் தருமாறு கோரிக்கை வைக்கிறார்.
Also read… எம்.ஜி.ஆர் குறித்து அன்றே கணித்தார் ஜானகி… நூற்றாண்டு விழாவில் ரஜினி சொன்ன சுவாரஸ்ய தகவல்!
எதிரி தீவை அழித்தால் தங்க காசுகள் கிடைக்கிறது என்ற ஆசையில் பாபி தியோல் அதற்கு சம்மதித்து அந்த தீவின் மீது போர் தொடுக்க முடிவு செய்கிறார். எதிரிகளிடம் இருந்து சூர்யா தனது தீவை காப்பாற்றினாறா? நட்டியின் மகன் அந்த சிறுவன் சூர்யாவை என்ன செய்கிறார் என்பது படத்தின் கதை.
The Wild Man vs a Wild Beast! The making of Crocodile fight scene in #Kanguva 🐊
From the World of Kanguva Ep – 3
▶️https://t.co/rXgVpobip6#KanguvaRunningSuccessfully
🔗 https://t.co/aG93NEBPMQ@Suriya_offl @thedeol @directorsiva @DishPatani @ThisIsDSP #StudioGreen… pic.twitter.com/fu3OsdQ47s— Studio Green (@StudioGreen2) November 23, 2024
கங்குவா படம் உலகளவில் வசூலில் ரூ.100 கோடியைத் தற்போது தாண்டி உள்ளது. 350 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து எடுக்கப்பட்ட படம் 100 கோடியை தாணவே திணறியது. இந்த நிலையில் படத்தில் முதலையுடன் சூர்யா சண்டையிடும் காட்சியின் மேக்கிங் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.