Movies List: தியேட்டரில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் லிஸ்ட்! - Tamil News | theatre release movies on july 5th on this week | TV9 Tamil

Movies List: தியேட்டரில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் லிஸ்ட்!

Published: 

04 Jul 2024 10:40 AM

Theater Release Movies: கோலிவுட் முதல் மோலிவுட் வரை திரையரங்குகளில் நாளை ஜூலை 5-ம் தேதி வெளியாகும் படங்களின் தொகுப்பு இதோ. இந்த வாரம் படங்களின் வெளியீடு சற்று குறைவாகவே உள்ளது. கோலிவுட்டில் இரண்டு படங்களும் பாலிவுட்டில் ஒரு படம் என்று 3 படங்கள் மட்டுமே புதிதாக வெளியாகவுள்ளது.

Movies List: தியேட்டரில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் லிஸ்ட்!

படங்கள்

Follow Us On

கவுண்டம்பாளையம்: பொன்விலங்கு திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரஞ்சித். சிந்து நதி பூ, மைனர் மாப்பிள்ளை, அவதார புருஷன், பாரதி கண்ணம்மா, மறுமலர்ச்சி, நினைத்தேன் வந்தாய், நட்புக்காக, தேசிய கீதம், புதுமைப்பித்தன், சேரன் சோழன் பாண்டியன், நினைவிருக்கும் வரை, சபாஷ், பாண்டவர் பூமி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். பின்னர் சில வருடங்களாக சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது இயக்கி நடித்து இருக்கும் கவுண்டம்பாளையம். ஸ்ரீபாசத்தாய் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தில் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளளனர். இந்தப் படம் நாளை ஜூலை 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

7/ஜி: இயக்குநர் என்.ஹாரூன் இயக்கத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘7ஜி’. சித்தார்த் விபின், சினேகா குப்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இந்த படத்தை இயக்குநர் ஹாரூன் தனது ட்ரீம் ஹவுஸ் பேனர் மூலம் தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சோனியா அகர்வாலின் ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் டைட்டிலைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சோனியா அகர்வால் ‘7ஜி’ என்ற தலைப்பிடப்பட்ட படத்தில் நடித்துள்ளார்.  ஹாரர் – த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் நாளை ஜூலை 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Also read… வங்கியில் 3 வீடுகளை அடமானம் வைத்த தமன்னா… என்ன காரணம்?

கில்: இயக்குனர் சாட் ஸ்டாஹெல்ஸ்கி மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனமான 87 இலவன் என்டர்டெயின்மென்ட் இணைந்து ’கில்’ என்ற இந்திய அதிரடி திரைப்படத்தின் ஆங்கில மொழி ரீமேக்கைத் தயாரித்துள்ளது. இப்படம் நாளை ஜூலை 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version