5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Movies List: இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள் இதோ!

Theater Release Movies: கோலிவுட் முதல் மோலிவுட் வரை திரையரங்குகளில் இன்று ஜூன் 27-ம் தேதி மற்றும் நாளை ஜூன் 28-ம் தேதி வெளியாகும் படங்களின் தொகுப்பு இதோ. இன்று பிரபாஸின் கல்கி படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளதால் புதிய படங்கள் பெரிய அளவில் வெளியாகவில்லை இந்த வாரம். கல்கி படத்துடன் போட்டிப் போடுவதை தவிர்க்கும் விதமாக பல படங்கள் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்துள்ளது. இதனால் இந்த வாரம் குறைவான படங்கள் மட்டுமே திரையரங்கிற்கு வந்துள்ளது. அது என்ன என்ன படங்கள் என்பதைப் பார்க்கலாம்.

Movies List: இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள் இதோ!
படங்கள்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Jun 2024 14:27 PM

பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கல்கி 2898 ஏடி. இதில் பிரபாஸுடன் கமல் ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்போடு படமானது இன்று வெளியாகியிருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் அமிதாப்பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கல்கி 2898 ஏடி’. இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருக்கிறார். பான் இந்திய படமாக இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அறிவியல் புனைவு திரைப்படமான இந்த கதை 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை பேசுவதாக இயக்குநர் நாக் அஸ்வின் கூறியிருந்தார். படம் ரூ.600 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவானது. ஒரே நேரத்தில் இந்தியிலும், தெலுங்கிலும் படமாக்கப்பட்ட இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் தீபிகா படுகோனே, பசுபதி, திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா ஹீரோவாக வளர்ந்த பிரபாஸுக்கு கடைசியாக வந்த சலார், ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்கள் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பெற்று தரவில்லை. இதனால் பாகுபலி கொடுத்த வைபை அவர் தவறவிட்டுவிட்டாரே என்று அவரது ரசிகர்கள் நொந்துபோயிருக்கின்றனர். அதுமட்டுமின்றி ஒரு பிரமாண்ட ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திலும் பிரபாஸ் கடுமையாக உழைத்து வருகிறார்.

புகழ்பெற்ற இலங்கை இயக்குநரான பிரசன்ன விதானகேயின் இயக்கிய படம் பாரடைஸ். பூசன் சர்வதேச திரைப்பட விழா 2023 இல் வெளியிடப்பட்ட இது சிறந்த திரைப்படத்திற்கான மதிப்புமிக்க கிம் ஜிசோக் விருதை வென்றது. இந்த திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பல பாராட்டுகளைப் பெற்றது. மேலும் FIPRESCI இந்தியா கிராண்ட் பிரிக்ஸ் 2023 இல் முதல் 10 படங்களில் இடம்பிடித்தது. பாரடைஸ் நியூட்டன் சினிமா தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இந்தப் படத்தை வெளியிடுகின்றது. இலங்கையில் படமாக்கப்பட்டது இந்த பாரடைஸ் படம் ஒரு சுற்றுலா தம்பதியின் விடுமுறை நாட்களில் நடக்கும் சம்பவங்கள் குறித்து பேசியுள்ளது. இத்திரைப்படத்தில் ரோஷன் மேத்யூ மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷ்யாம் பெர்னாண்டோ மற்றும் மகேந்திர பெரேரா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படம் நாளை ஜூன் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Also read… ரஜினியின் ‘கூலி’ படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த லோகேஷ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

எ கொய்ட் ப்லேஸ் (A Quiet Place) படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மூன்றாவது பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படம் வேற்றுகிரக உயிரினங்கள் பூமியில் முதன்முதலில் தரையிறங்கியபோது அவை எவ்வாறு தோன்றின என்பதை தெரிவிக்கிறது. முதல் இரண்டு படங்களில் எமிலி பிளண்ட், ஜான் க்ராசின்ஸ்கி மற்றும் சிலியன் மர்பி போன்றவர்கள் நடித்தனர். இந்நிலையில் இந்த 3-ம் பாகத்தில் புது நடிகர்கள் பலர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். நாளை ஜூன் 28 -ம் தேதி ஐ மேக்ஸ் திரையரங்குகள் உட்பட சுமார் 3700 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

Latest News