5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

‘ஹேமா கமிட்டி’ தமிழ் திரைத் துறைக்கு தேவைப்படவில்லை – ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் திரையுலகில் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. கண்டிப்பாக அப்படி எதுவும் இருக்காது என நான் நம்புகிறேன். நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் படம் நடித்துள்ளேன். நான் இதுவரை அப்படியொரு பிரச்சினையை எதிர்கொண்டதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் இதுவரை அப்படி எதுவும் நடக்காததால், ஹேமா கமிட்டி போன்ற ஒரு கமிட்டி இங்கே தேவைப்படவில்லை. நம் திரையுலகம் நன்றாகத்தான் உள்ளது என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

‘ஹேமா கமிட்டி’ தமிழ் திரைத் துறைக்கு தேவைப்படவில்லை – ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 15 Sep 2024 16:40 PM

‘ஹேமா கமிட்டி’ போன்ற ஒரு அமைப்பு தமிழ் திரைத் துறைக்கு தேவைப்படவில்லை என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளது சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தினேஷ் நாயகனாக நடித்த ‘அட்டகத்தி’ படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த படத்தில் அவரது துடுக்குதனமான பேச்சு ரசிகர்களை கவர்ந்தது. ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், கதை திரைக்கதை வசனம் இயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். குறிப்பாக மணிகண்டன் இயக்கத்தில் அவர் நடித்த காக்கா முட்டை படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து அழுத்தமான கதைக்களங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு, முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்தடுத்த படங்களில் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தப் படம் ‘கனா’. விவசாயத்தையும், பெண்கள் கிரிக்கெட்டையும் பேசிய இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களிடம் தனித்துவமிக்க நாயகியாக திகழ்ந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தனக்கு கிடைத்த படங்களில் குறைந்த பட்சம் தனது காதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடித்து வந்தார். விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். குறிப்பாக விஜய் சேதுபதியுடன் ரம்மி, தர்மதுரை ஆகிய படங்களில் நடித்து கிராமங்களில் தனகான ரசிகர்களை அதிகப்படுத்தினார் என்றே கூறலாம். வடசென்னை படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமாக நடித்து நடிப்பு ஜாம்பவான்களுக்கு மத்தியில் ஸ்கோர் செய்தார்.

தொடர்ந்து நாயகிகளை மையப்படுத்திய கதையை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக புலிமடா படம் வெளியானது. அடுத்ததாக கறுப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க போன்ற படங்கள் வெளியாகவிருக்கின்றன.

மலையாள சினிமா துறையில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகள் கேரள திரைத்துறையில் புயலைக் கிளப்பியுள்ளது. கேரளா மட்டுமல்லாமல் மற்ற திரையுலகிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக சில நடிகைகள் அடுத்தடுத்து புகார்களை முன்வைத்து வருகின்றனர். இதுவரை நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக், இயக்குநர் ரஞ்சித் மற்றும் நடிகரும் எம்.எல்.ஏவுமான முகேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல நடிகைகள் தங்களுக்கு பாலியல் தொல்லை நடந்திருப்பதாகவும்; அட்ஜஸ்ட்மெண்ட் என்பது மலையாள திரையுலகில் தவிர்க்கவே முடியாததாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். இதனையடுத்து கேரள திரையுலகின் AMMA அமைப்பிலிருந்து மோகன் லால் உள்ளிட்டோர் கூண்டோடு ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

Also read… HBD Ramya Krishnan: நீலாம்பரி டூ ராஜமாதா… நடிகை ரம்யா கிருஷ்ணன் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்

’மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது போல் தமிழகத்திலும் அமைக்கப்படும் என்றும் பாலியல் தொல்லை கொடுப்பவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். நிச்சயம் யாராவது ஒரு பெண்ணை பயன்படுத்திக்கொள்ள பலர் முயற்சிப்பார்கள். இதை தவிர்க்க வேண்டுமென்றால், அந்த பெண்ணுக்கு மனதில் தைரியம் வேண்டும். அந்த பெண் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என முன்னதாக நடிகர் விஷால் தெரிவித்தார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம் தமிழ் சினிமாவில் ஹேமா கமிட்டி போன்ற ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா என கேட்டதற்கு, தமிழ் திரையுலகில் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. கண்டிப்பாக அப்படி எதுவும் இருக்காது என நான் நம்புகிறேன். நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் படம் நடித்துள்ளேன். நான் இதுவரை அப்படியொரு பிரச்சினையை எதிர்கொண்டதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் இதுவரை அப்படி எதுவும் நடக்காததால், ஹேமா கமிட்டி போன்ற ஒரு கமிட்டி இங்கே தேவைப்படவில்லை. நம் திரையுலகம் நன்றாகத்தான் உள்ளது என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Latest News