Vettaiyan Movie Release: ரஜினியின் வேட்டையன் படத்தை ஏன் பார்க்க வேண்டும்? – இதைப் படிங்க! - Tamil News | These are the Reasons to watch Rajinikanth's Vettaiyan Movie | TV9 Tamil

Vettaiyan Movie Release: ரஜினியின் வேட்டையன் படத்தை ஏன் பார்க்க வேண்டும்? – இதைப் படிங்க!

Published: 

10 Oct 2024 06:00 AM

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமாக வேட்டையன் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளியாகியுள்ளது. இந்த படத்தைக் காண அனைவரும் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். ஆயுத பூஜை விடுமுறைக்கு வெளியாகியுள்ள வேட்டையன் படத்தின் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லைகா நிறுவனம், அனிருத். அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில் என பலமான கூட்டணியுடன் இப்படம் வெளியாகியுள்ளது.

1 / 6வேட்டையன்

வேட்டையன் படம் நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமாகும். 73 வயதிலும் இளமை துள்ளலுடன் அந்த ஸ்டைல் மாறாமல் திரையை ஆக்கிரமித்திருக்கும் சூப்பர் ஸ்டாரின் பெயருக்காகவே கண்டிப்பாக பார்க்கலாம்.

2 / 6

ஜெய் பீம் படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த த.செ.ஞானவேல் தனது 2வது படத்திலேயே ரஜினியை இயக்குவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ட்ரெய்லர் பார்க்கும்போது இது வழக்கமான ரஜினி படம் இல்லை என்பது தெரிந்திருக்கும்.

3 / 6

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பிரபலங்களும் ஒரு காரணமாகும். அமிதாப்பச்சன், ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ராணா டகுபதி, ரித்திகா சிங் என பான் இந்தியா படத்துக்கான நட்சத்திரங்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளனர்.

4 / 6

சூப்பர் ஸ்டார் படம் என்றாலே திருவிழா கோலம் தான். கண்டிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் படியான படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை என்பதால் தாராளமாக தியேட்டர் செல்லலாம்.

5 / 6

அனைவரையும் தாளம் போட வைத்துள்ள மனசிலாயோ பாடல். கண்டிப்பாக தியேட்டரில் ஒரு கொண்டாட்டம் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. எனவே கண்டிப்பாக தியேட்டர் கொண்டாட்டத்தை மிஸ் பண்ணிராதீங்க!

6 / 6

ஆயுத பூஜை விடுமுறைக்கு வேட்டையன் படம் வெளியாகியுள்ளது. எனவே கண்டிப்பாக விடுமுறை தினத்தை குடும்பத்தோடு வேட்டையன் படத்துக்கு சென்று கொண்டாடுங்கள்

செரிமானத்தை மேம்படுத்த வேண்டுமா ? அப்போ இதை பாலோ பண்ணுங்க
மோகன் லால் உடன் இருக்கும் இந்த சிறுமி யார்?
தங்க நிற உடையில் ஜொலிக்கும் ஜான்வி போட்டோஸ் இதோ
குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வெற்றி படிநிலைகள்!
Exit mobile version