5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

OTT Movies: மகாராஜா முதல் ஹிட் லிஸ்ட் வரை.. இந்த வார ஓடிடி படங்கள் என்னென்ன?

This Week OTT Movies: தியேட்டரில் வெளியாகும் புதுப்படங்கள் குறைந்தது 4 முதல் 6 வாரங்களிலேயே ஓடிடி தளங்களில் வெளியாகிறது.இதில் சில படங்களுக்கு ஓடிடி தளங்களில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இதனால் தியேட்டரில் படத்தை வெளியிட முடியாதவர்கள் ஓடிடி தளங்களை நாடி செல்கின்றனர்.

OTT Movies: மகாராஜா முதல் ஹிட் லிஸ்ட் வரை.. இந்த வார ஓடிடி படங்கள் என்னென்ன?
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 11 Jul 2024 17:48 PM

இந்தியாவில் கொரோனா காலகட்டத்துக்குப் பின் ஓடிடி தளங்களின் வளர்ச்சி என்பது அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு படம் எந்த தியேட்டரில் வெளியாகிறது என்று கேட்ட காலக்கட்டம் போய் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்ற நிலைக்கு வந்து விட்டோம். இந்தியாவை பொறுத்தவரை அமேசான், சோனி லைவ், நெட்பிளிக்ஸ், ஆஹா, ஹாட் ஸ்டார், ஜீ5, ஜியோ சினிமாஸ் என பல ஓடிடி தளங்கள் செயல்பட்டு வருகின்றன.ஒவ்வொன்றும் போட்டி போட்டுக்கொண்டு சந்தாதாரர்களை இழுக்கும் வண்ணம் பட பூஜை போட்ட அன்றே ஓடிடி உரிமைகள் கைப்பற்றப்படுகின்றன. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பது பற்றி காணலாம்.

Also Read: Indian 2: இந்தியன் 2 படம் ஏன் பார்க்க வேண்டும்? – இதை கொஞ்சம் படிங்க!

மகாராஜா

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன் தாஸ், சிங்கம் புலி, நட்டி, அருள்தாஸ் உளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் மகாராஜா. இந்த படம் விஜய் சேதுபதியின் 50வது படமாகும். கடந்த ஜூன் 14 ஆம் தேதி தியேட்டரில் வெளியான இப்படம் மாறுபட்ட கதைக்களத்துக்காக ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகிறது.

ஹிட் லிஸ்ட்

சூரிய கதிர் காக்கல்லர், கே கார்த்திகேயன் ஆகியோர் இயக்கத்தில் விஜய் கனிஷ்கா,கௌதம் வாசுதேவ் மேனன் , ஸ்ம்ருதி வெங்கட் , முனிஷ்காந்த், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்த படம் “ஹிட் லிஸ்ட்”. சி.சத்யா இசையமைத்த இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இயக்குனர் விக்ரமனின் மகனான விஜய் கனிஷ்கா அறிமுக நாயகனாக பாராட்டைப் பெற்றார். இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகிறது.

Also Read: AIDS : எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 828 மாணவர்கள்.. 47 பேர் உயிரிழந்த சோகம்.. திரிபுராவில் என்ன நடக்கிறது?

பகலறியான்

8 தோட்டாக்கள், ஜீவி ஆகிய படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த வெற்றி ஹீரோவாக நடித்த படம் பகலறியான். முருகன் எழுதி இயக்கிய இந்த படத்தில் அக்ஷயா கந்தமுதன் ஹீரோயினாக நடித்திருந்தார். கடந்த மே மாதம் 24 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் ஜூலை 12 ரிலீசாகிறது.

எலக்ஷன்

தமிழ் இயக்கத்தில் உறியடி விஜயகுமார், பிரீத்தி அஸ்ரானி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி வெளியான படம் ‘எலக்சன்’. இந்த படம் அமேசான் ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து தமிழில் ஏற்கனவே அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான நடிகர் மோகன் நடித்த ஹரா படம் இந்த வாரம் ஆஹா ஓடிடி தளத்திலும் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News