OTT Movies: இந்த வீக் எண்ட் மஜாதான்.. ஓடிடியில் மிஸ் பண்ணாம இந்த படங்களை பாருங்க! - Tamil News | This Week OTT Release Hit Movies List In Tamil goat vazhai kottukkaali and other tamil movies | TV9 Tamil

OTT Movies: இந்த வீக் எண்ட் மஜாதான்.. ஓடிடியில் மிஸ் பண்ணாம இந்த படங்களை பாருங்க!

Published: 

05 Oct 2024 17:20 PM

OTT Top 5 Movie : தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகைகள் மற்றும் நடிகைகளின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகுவதை விட ஓடிடி இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களை மிக எளிதாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகி ஹிட்டான டாப் 5 திரைப்படங்களைப் பார்க்கலாம்.

OTT Movies: இந்த வீக் எண்ட் மஜாதான்.. ஓடிடியில் மிஸ் பண்ணாம இந்த படங்களை பாருங்க!

கோப்பு புகைப்படம்

Follow Us On

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ல் திரையரங்குகளில் வெளியான “தி கோட்”. இந்த திரைப்படத்தில் விஜயுடன், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி அஜ்மல் அமீர், மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மற்றும் ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தினை ஏ.ஜி.எஸ்., எண்டர்டைமெண்ட் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் உருவாக்கியுள்ளது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இந்த “தி கோட்” (தி கிரெடேஸ்ட் ஆப் ஆல் டைம்) என்ற திரைப்படம் கடந்த செப்டம்பரில் வெளியான நிலையில் “நெட்பிளிக்ஸ்” ஓடிடி நிறுவனம் இந்த திரைப்படத்தை வாங்கியுள்ளது. இதையடுத்து அக்டோபர் 3ல் இத்திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. நடிகர் விஜயின் ஆக்ஷன், காதல் மற்றும் வித்தியாசமான நடிப்பில் உருவாக்கி தனது ரசிகர்களை மீள முடியாத இன்பத்தில் ஆழ்த்திய இந்த திரைப்படமானது தற்போது “நெட்பிளிக்ஸ்” ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க :Today’s Cinema News: தளபதி 69 பூஜை முதல் ரஜினி அறிக்கை வரை… டாப் சினிமா செய்திகள்!

 

போட் :

அடுத்ததாக 23ஆம் புலிகேசி மற்றும் விஜயின் புலி போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியான “போட்” திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிகர் யோகிபாபு மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், கௌரி ஜி.கிருஷ்ணன் போன்றவர்களின் நடிப்பில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் கதைக்களமானது உலகபோரிலிருந்து தப்பிக்க படகில் ஏறிக் குண்டுவெடிப்பிலிருந்து தப்பிக்கும் 10 பேர் கொண்ட குழுவைச் சுற்றி வருகிறது.

அவர்களின் பயணம், பாதுகாப்புக்கு, எதிர்பாராத விதமாகப் படகு நின்று மூழ்கத் தொடங்கும் போது பயங்கரமான திருப்பத்தை கொடுத்து நீரின் நடுவில் சிக்கிய பயணிகளின் உயிர்வாழ்வதற்கான சவால்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த போட் திரைப்படமானது “அமேசான்” ஓடிடியில் கடந்த அக்டோபர் 1ல் வெளியாகியுள்ளது. இணையத்தில் 5க்கு 4.1 என்ற ரேட்டிங் கணக்கில் இரண்டாவதாக்க இருக்கிறது. இந்த திரைப்படத்தை அமேசான் பிரேமில் கண்டுகளியுங்கள்.

இதையும் படிங்க :அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு எப்போது?

 

வாழை :

லிஸ்டில் மூன்றாவதாக இருப்பது இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிக் கடந்த ஆகஸ்ட் 23ல் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “வாழை”. மாரி செல்வராஜின் கிராமத்து வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன், நிகிலா விமல் மற்றும் திவ்யா துரைசாமி போன்ற திரைப்பிரலபங்கள் இணைந்து நடித்துள்ளார். இந்த திரைப்படமானது திரையுலகில் விமர்சனங்களுக்கு மத்தியில் பல நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கத்தில் “டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்” தயாரித்துள்ளது. இத்திரைப்படமானது தற்போது வருகின்ற அக்டோபர் 11ல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க :Rajinikanth: ரஜினி வெளியிட்ட திடீர் அறிக்கை.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்!

கொட்டுக் காளி :

நான்காவதாக இருப்பது நடிகர் சூரி மற்றும் அன்னா பென் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்த கொட்டுக் காளி. இப்படத்தை இயக்குநர் பி.எஸ்.வினோத் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே. ப்ரொடெக்ஷன் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தின் கதையானது “மீனா என்ற இளம் பெண்ணின் கதையை மையமாகக் கொண்டு தனது மௌனத்தைத் துஷ்பிரயோகம் மற்றும் தன்னைச் சுற்றியுள்ள ஆணாதிக்க நெறிமுறைகளுக்கு எதிராக எதிர்ப்புகளை பயன்படுத்தி பெண்ணியம், நம்பிக்கை மற்றும் மனித உறவுகளின் கருத்துக்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படமானது உருவாகியுள்ளது.

இந்த திரைப்படமானது “அமேசான் பிரைமில்” வெளியாகியுள்ளது. இத்திரைப்படமானது இணையத்தில் 5க்கு 3.6 என்ற கணக்கில் ரேட்டிங் பெற்று இந்த வாரத்தில் நான்காவது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க :விஜய் விரலில் ‘GOAT’ மோதிரம்… இணையத்தை கலக்கும் போட்டோ!

 

டிமாண்டி காலணி பாகம் 2 :

அடுத்ததாக இருப்பது நடிகர் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் டிமாண்டி காலணி 2. இயக்குநர் ஆர். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பாபி பாலச்சந்திரன், விஜய் சுப்ரமணியன் மற்றும் ஆர்.சி.ராஜ்குமார் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்திற்காக டி.குமரேசன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது 2015ல் வெளியான டிமாண்டி காலணி படத்தின் தொடர்ச்சியாக இந்த “டிமாண்டி காலணி பாகம் 2” வெளியாகியுள்ளது. இப்படத்தில் துணை கதாபாத்திரங்களாக அருள் பாண்டியன், ரெடின் கிங்ஸ்லெ, முனீஷ்காந்த் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் கதைக்களமானது “முதல் பாகத்தில் நிறுவப்பட்ட மர்மமான மற்றும் திகிலூட்டும் உலகத்தை ஆழமாக ஆராய்ச்சி செய்து அமானுஷ்ய பேய் அரண்மனைக்கு மீண்டும் இழுக்கப்பட்டு தனிநபர்களின் குழுவைச் சுற்றி, ஆர்வம் ரகசியங்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணரும் கதையை மையமாகக் கொண்ட ஆக்சன் மற்றும் திரில்லர் திரைப்படமாகும்.

இத்திரைப்படமானது கடந்த செப்டம்பர் 27ல் ஜீ5 ஓடிடி இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்படம் இணையத்தில் 5க்கு 4.6 என்ற கணக்கில் 5வது இடத்தில உள்ளது. இந்த திரில்லர் திரைப்படத்தைக் கண்டிப்பாகப் பாருங்கள்.

இதையும் படிங்க :15 வயதில் சினிமா.. தொடர் வெற்றி.. நடிகை அசின் சினிமா பயணம்!

குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
Exit mobile version