Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா? வெளியேறப்போவது யார்

இந்த வாரம் முழுவதும் சிறப்பாக பங்கெடுத்துக்கொண்ட நபர்கள் என்று வீட்டில் உள்ள போட்டியாளர்களால் ஆண்கள் அணியில் இருந்து அருண் மற்றும் பெண்கள் அணியில் இருந்து சௌந்தர்யாவும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு இடையே நடைபெற்ற அடுத்த வார தலைவருக்கான போட்டியில் அருண் வெற்றிப்பெற்றார். இதான் 6-வது வாரத்திற்கான பிக்பாஸ் வீட்டின் தலைவராக அருண் தேர்வாகியுள்ளார்.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா? வெளியேறப்போவது யார்

பிக்பாஸ்

Published: 

09 Nov 2024 10:53 AM

பிக்பாஸ் தமிழ் சீசன் 8-ல் கடந்த 4-வது வாரத்தில் எவிக்‌ஷன் எதுவும் இல்லாததால், 5-வது வாரமான இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன் இருக்கலாம் என்று இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது. கடந்த மாதம் 6-ம் தேதி பிக்பாஸ் தமிழ் 8-வது சீசன் தொடங்கியது.இதில், ரவீந்தர் சந்திரசேகர், அருண் பிரசாத், அன்ஷிதா, தீபக்,  தர்ஷிகா, தர்ஷா குப்தா, ஜாக்குலின், முத்துக்குமார்,  ஜெப்ரி, அர்னவ், ரஞ்சித், பவித்ரா ஜனனி, ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா,சுனிதா, செளந்தர்யா, வி.ஜே. விஷால் என 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். முதல் வார நாமினேஷனில் இடம் பிடித்த ரவீந்தர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது வாரம் அர்னவ் மூன்றாவது வாரம் தர்ஷா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தனர். மேலும் மேலும் 6 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர் கடந்த ஞாயிறு அன்று. அதில் ரியா தியாகராஜன், சிவகுமார், ரானவ், மஞ்சரி, ராயன், வர்ஷினி ஆகியவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர். கடந்த வாரம் எவிக்‌ஷன் எதுவும் இல்லாததால் தற்போது பிக்பாஸ் வீட்டில் 21 போட்டியாளர்கள் உள்ளனர்.

மேலும் இந்த வார ஸ்வாப்பில் ஆண்கள் அணியில் இருந்து ரானவ் பெண்கள் அணிக்கும் பெண்கள் அணியில் இருந்து ஜாக்குலின் ஆண்கள் அணிக்கும் இடம் மாறியுள்ளனர். இந்த வாரத்திற்கான பிக்பாஸ் வீட்டில் நடைப்பெற்ற வீட்டுப் பணி டாஸ்கில் ஆண்கள் அணியினர் வெற்றிப்பெற்றனர். இதனால் இந்த வாரம் முழுவதும் வீட்டுப்  பணிகள் அனைத்தையும் பெண்கள் அணியினர் செய்ய வேண்டும்.

இந்த வாரத்திற்கான பிக்பாஸ் கேப்டனாக சத்யா தேர்வாகியுள்ளார். இந்த சீசனில் இந்த  வாரம் முதல் முறையாக ஓபன் நாமினேஷன் பிக்பாஸில் நடைப்பெற்றது. அதில் புதிதாக வீட்டிற்குள் வந்தவர்களை நாமினேட் செய்ய முடியாது என்று பிக்பாஸ் அறிவித்த பிறகு ஆண்கள் பெண்களையும் பெண்கள் ஆண்களையும் நாமினேட் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

இதில் டைரக்ட் நாமினேஷன் பாஸ் வைத்திருந்த விஷால் பெண்கள் அணியில் இருந்து ஜாக்குலினை நாமினேட் செய்தார். சௌந்தர்யா ஆண்கள் அணியில் இருந்த விஷாலை நாமினேட் செய்தார். அதனைத் தொடர்ந்து நடந்த இந்தவார எவிக்‌ஷன் நாமினேஷனில் இடம் பிடித்தவர்கள் முத்துகுமரன், தீபக், அருண், ரஞ்சித், விஷால் ஆகிய ஐந்து பேர் ஆண்கள் அணியிலிருந்தும் ஜாக்குலின், பவித்ரா ஜனனி, ஆர்.ஜே.ஆனந்தி, அன்ஷிதா, சாச்சனா மற்றும் சுனிதா ஆகிய 6 பேர் பெண்கள் அணியில் இருந்தும் நாமினேட் ஆகியுள்ளனர்.

Also read… கருப்பு நிற உடையில் கலக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் போட்டோஸ்

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ரீ பாஸ்  டாஸ்கில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற ஆண்கள் அணியினர் வென்றனர். இந்த பாஸை வைத்து நாமினேஷனில் உள்ள ரஞ்சித்தை ஆண்கள் அணியினர் காப்பாற்றியுள்ளனர்.

இந்த வாரம் முழுவதும் சிறப்பாக பங்கெடுத்துக்கொண்ட நபர்கள் என்று வீட்டில் உள்ள போட்டியாளர்களால் ஆண்கள் அணியில் இருந்து அருண் மற்றும் பெண்கள் அணியில் இருந்து சௌந்தர்யாவும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு இடையே நடைபெற்ற அடுத்த வார தலைவருக்கான போட்டியில் அருண் வெற்றிப்பெற்றார். இதான் 6-வது வாரத்திற்கான பிக்பாஸ் வீட்டின் தலைவராக அருண் தேர்வாகியுள்ளார்.

Also read… சேலையில வீடு கட்டவா… நடிகை ஜான்வியின் லேட்டஸ்ட் ஆல்பம்!

மேலும் இந்த வாரம் நடைப்பெற்ற டாஸ்கில் தீபக் அடுத்த வாரத்திற்கான நேரடி நாமினேஷனில் இடம் பிடித்த நிலையில் வாரம் முழுவதும் சரியாக தெரியாத நபர்கள் என ஆண்கள் அணியில் இருந்து முத்துகுமரனும் பெண்கள் அணியில் இருந்து வரிஷினியும் தேர்வாகியுள்ள நிலையில் அடுத்த வாரத்திற்கான நேரடி நாமினேஷனில் அவர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என்று தகவல்கள் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷனில் இடம் பிடித்த நபர்களில் சாச்சனா, சுனிதா, ஆனந்தி ஆகியோர் குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். இதில் டவுள் எவிக்‌ஷன் என்றால் சுனிதா மற்றும் ஆனந்தி வெளியேற வாய்ப்பு உள்ளது. இல்லை ஒருவர் மட்டும் என்றால் ஆனந்தி வெளியேற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹிந்தியில் காஜல் அகர்வால் நடித்த முதல் படம் எது தெரியுமா?
மாளவிகாவிற்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா?
குளிர்காலத்தில் சாத்துக்குடி ஜூஸ் குடிக்கலாமா?
பலாப்பழ கொட்டையில் இத்தனை நன்மைகளா?