5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Top 10 Serials: இந்த வாரம் டிஆர்பியில் இடம்பிடித்த டாப் 10 தமிழ் சீரியல்கள் லிஸ்ட் இதோ..!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டிஆர்பியில் டாப் 10 இடங்களைப் பிடித்த சீரியல்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாது உலக அளவில் திரைப்படங்களைக்காட்டிலும், சீரியல், வெப் சீரிஸ் போன்றவற்றிற்கு வெள்ளிதிரைக்கு மக்களிடையே எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ அதே அளவிற்கு சின்னைத்திரைக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

Top 10 Serials: இந்த வாரம் டிஆர்பியில் இடம்பிடித்த டாப் 10 தமிழ் சீரியல்கள் லிஸ்ட் இதோ..!
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 06 Jul 2024 17:18 PM

சீரியல்களில் நடிக்கும் நடிகர்களை தங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் போல அன்பு செலுத்தி வருகிறார்கள் பார்வையாளர்கள். தமிழகத்தின் முன்னணி சேனல்கள் அனைத்திலுமே தவறாமல் ஒளிபரப்பாகி வருகின்றன சீரியல்கள். சினிமா படங்களுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருப்பதைப் போன்று டிவிகளில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதோடு சீரியல்களில் நடிக்கும் நடிகர்களை தங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் போன்றும், தங்களது குடும்ப உறுப்பினர்களை போன்றும் ரசிகர்கள் அன்பு செலுத்தி வருகிறார்கள். பிரபல சேனல்களில் மதிய நேரங்களில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இல்லத்தரசிகளையும், மாலை பிரைம் டைமிங்கில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் கவர்ந்து TRP ரேட்டிங் லிஸிட்டில் இடம்பிடித்து வருகின்றன. சினிமா படங்களுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருப்பதைப் போன்று டிவிகளில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல தொலைக்காட்சிகள் பல விதமான தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. ஆனால் எப்போதும் போட்டி என்னவோ சன் டிவிக்கும், விஜய் டிவிக்கும் தான், இந்த இரண்டு சேனல்களின் தொடர்களுக்கு மவுசு அதிகம் என்றே கூறலாம்.

Also Read: Samantha: நல்ல நோக்கத்தின் அடிப்படையில் சிகிச்சையை மக்களிடம் பரிந்துரைத்தேன் – நடிகை சமந்தா விளக்கம்

பல தொலைக்காட்சிகள் பல விதமான தொடர்கள் ஒளிப்பரப்பானாலும்,  எப்போதும் போட்டி என்னவோ சன் டிவிக்கும், விஜய் டிவிக்கும் தான், இந்த இரண்டு சேனல்களின் தொடர்களுக்கு மவுசு அதிகம் என்றே கூறலாம். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் 26வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த வாரத்தை ஒப்பிடும் போது இந்த வாரத்தில் பல சீரியல்கள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு டிஆர்பியில் சரிவடைந்து காணப்படுகிறது.

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் கடந்த வாரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 9.29 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.  9.29 புள்ளிகளை பெற்று இந்த வாரம் சிங்க பெண்ணே சீரியல் முதலிடத்தில் உள்ளது.  ஒரே பெண்ணை காதலிக்கும் அழகன் மற்றும் மகேஷ் . இருவரில் யாருக்கு ஆனந்தி என்ற  குழப்பத்தில் ரசிகர்கள் காத்திருக்கும் சூழலில் வாரவாரம் ரசிகர்களுக்கு பல்வேறு அதிர்ச்சிகளுடன் கதைக்களம் நகர்கிறது.

Also Read: Hooch Tragedy: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு எப்படி ரூ.10 லட்சம் தர முடியும் ? அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரத்தில் முதல் இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 9.23 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.  எழிலுடன் நிச்சயதார்த்தம் முடித்த கயல், எழிலை கல்யாணம் பண்ண முடியாது என்று தெரிந்ததும் மொத்தமாக நொறுங்கிய கயல், அடுத்த என்ன என்பதை நோக்கி கதைகளம் நகர்கிறது.

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் மருமகள் சீரியல்  புதுவரவாக வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் ஆனாலும் தொடர்ந்து மாறி மாறி டிஆர்பியில் இடம்பிடித்து கடந்த வாரத்தில் 4வது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 3 வது இடத்தில் உள்ளது. மருமகள் சீரியல் 8.12 புள்ளிகளைப் பெற்று 3வது இடத்தை பெற்றிருக்கிறது.

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதைக்களத்தில், புதுமுகங்களுடன், புதிய கதைக்களத்தில் வானத்தைப்போல சீரியல் பயணிக்கிறது.  சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் கடந்த வாரத்தில் 3-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 8புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தை பிடித்திருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரத்தில் 5-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 7.94 புள்ளிகளைப் பெற்று 5-வது இடத்திலேயே தொடர்கிறது. பாட்டியின் பிறந்த நாள் கொண்டாட்டம். மீண்டும் மீண்டும் பணத்தை இழந்து ஏமாறும் மனோஜ், பொய் சொல்லி தப்பிக்கும் ராகினி, என கதைக்களம் நகர்கிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியல் 6.93 புள்ளிகளை பெற்று 6-வது இடத்திலும், பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரத்தில் 6.78 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்திலும் தொடர்கிறது.  சுந்தரி சீரியல் இந்த வாரத்தில் 6.77 புள்ளிகளை பெற்று 8-வது இடத்தில் உள்ளது.  பாண்டியன் ஸ்டோர் சீரியல் இந்த முறை 6.55 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தை பிடித்திருக்கிறது. ஆஹா கல்யாணம் சீரியல் 5.59 புள்ளிகளை பற்றி 10 வது இடத்தில் இருக்கிறது.

முதல் 5 இடங்களை சன் டிவியும், அடுத்த 5 இடங்களை விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களே தொடர்ந்து இடம்பெறுகின்றன. மீண்டும் அடுத்த வாரம் எந்த சீரியல்கள் முதல் 5 இடத்தை பிடிக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

Latest News