2024-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சிறிய பட்ஜெட் படங்கள் லிஸ்ட் இதோ
2024-ம் ஆண்டு கோலிவுட் சினிமாவில் பல படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பல முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை பல சினிமாவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சிறிய பட்ஜெட் படங்களின் லிஸ்ட் இதோ.
லவ்வர்: ரேடியோவில் ஜாக்கியாக இருந்து திரையுலகில் நடிகராக நடிக்கத் தொடங்கியவர் மணிகண்டன். சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்துக்கொண்டே திரைக்கதை, கதை, வசனம் எழுதுவதிலும் கவனம் செலுத்தி வந்தார். காதலும் கடந்து போகும், 8 தோட்டாக்கள் படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஓரளவிற்கு ஈர்த்தவர் நடிகர் மணிகண்டன். அதனை தொடர்ந்து விக்ரம் வேதா படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களின் கவனத்தை அதிகம் பெற்றார். இந்தப் படத்தில் நடித்தது மட்டும் இன்றி படத்திற்கு வசனம் எழுதி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் மணிகண்டன். அதனை தொடர்ந்து ரஜினியுடன் காலா, சில்லுக்கருப்பட்டி, ஏலே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார் நடிகர் மணிகண்டன். நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படத்தில் ராஜாகண்ணு என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கலங்க வைத்திருப்பார் மணிகண்டன்.
இதனை தொடர்ந்து ‘குட் நைட்’ என்ற படத்தில் எதார்த்தமான நடிப்பினால் கோலிவுட் மட்டும் இன்றி மற்ற மொழி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் மணிகண்டன். இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் மணிகண்டன் நடிப்பில் வெளியானது ‘லவ்வர்’ படம். இந்தப் படத்தை இயக்குநர் பிரபு ராம் இயக்கியுள்ளார்.
இந்தப் படம் வெளியாகி இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போதைய காலக்கட்டத்தில் நிகழும் காதலை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். பாடல் அனைத்தும் ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த ஆண்டு வெளியான சிறிய பட்ஜெட்டில் உருவாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களில் ‘லவ்வர்’ படமும் ஒன்று. இந்தப் படம் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைப்பது குறிப்பிடதக்கது.
மகாராஜா: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 50-வது படமாக உருவான ‘மகாராஜா’ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி திரையரங்குகளில் சூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தை இயக்குநர் நித்திலன் இயக்கியுள்ளார். குரங்கு பொம்மை என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நித்திலன் சாமிநாதன்.
யோகி பாபு நடிப்பில் வெளியான அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து அடுத்து நடிகர் விஜய் சேதுபதியின் 50 – வது படமான ‘மகாராஜா’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர்களுடன் இணைந்து நடிகர்கள் நட்டி, மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, அபிராமி, வினோத் சாகர், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்திருந்தார். படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்றதுபோல ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
கொட்டுக்காளி: நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகர்கள் சூரி, அன்னா பென் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான படம் ‘கொட்டுக்காளி’. இப்படத்தை ‘கூழாங்கல்’ பட இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியிருந்தார். ஃபெஸ்டிவல் படம் என்பதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது.
Also read… மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் வருவது குகை அல்ல, பணக்குழி… இயக்குநர் சிதம்பரம்
திரைப் பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தை பாராட்டினாலும் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும் ஜெர்மனி, கனடா, போர்ச்சுக்கல், ஆர்மீனியா, ரஷ்யா உள்ளிட்ட திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்று சாதனை படைத்தது கொட்டுக்காளி. இந்த நிலையில் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
வாழை: மாமன்னன் படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘வாழை’. கிராமத்து கதையம்சத்துடன் கூடிய கதையோடு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கலையரசன், நிகிலா விமல் ஆகியோர் நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக திவ்யா துரைசாமி நடித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி வழங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.
படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்தன. முன்னதாக ஓடிடியில் வெளியாவதாக இருந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தைப் பார்த்த பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் இயக்குநர் மாரி செல்வராஜிற்கு முத்த மழை பொழிந்தனர். படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
Also read… விறுவிறுப்பாக நடைபெறும் தளபதி 69 படத்தின் ஷூட்டிங் எப்போ முடியும்? இணையத்தை கலக்கும் மாஸ் அப்டேட்
லப்பர் பந்து: கனா, எஃப்ஐஆர் போன்ற படங்களில் இணை இயக்குநராகவும், உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தின் வசனகர்த்தாவுமான தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமான படம் ‘லப்பர் பந்து’. நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் ‘வதந்தி’ சீரிஸ் புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளனர்.
மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.