Cinema Year Ender: 2024ம் ஆண்டில் அதிகம் வசூல் ஈட்டிய டாப் 5 கோலிவுட் படங்கள் லிஸ்ட்!
2024-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகரக்ளின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த ஆண்டில் வெளியாகி அதிக வசூலை ஈட்டிய டாப் 5 படங்களின் தொகுப்பை தற்போது பார்கலாம்.
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்: கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி விஜய் நடிப்பில் அவரது 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. விஜய் இந்தப் படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். பிரபல ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25-வது படமாக கோட் படம் உருவானது. நீண்ட நாட்களாக தொடர்ந்து சீரியஸான கேரக்டர்களில் நடித்து வந்த விஜய் இந்தப் படத்தில் காமெடி, காதல், கிண்டல், சைலன்ட், டான்ஸ், எமோஷன், டயலாக் டெலிவரி என மாஸ் காட்டியுள்ளார். டான்ஸ், டயலாக் டெலிவரி என தெறிக்கவிட்டுள்ளார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரிதிருந்தார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து சினேகா, மீனாக்ஷி செளதரி, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், வைபவ் , பிரேம்ஜி அஜ்மல் அமீர், மோகன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். படம் உலக அளவில் 460 கோடிகள் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸை கலக்கியுள்ளது.
அமரன்: நடிகர் சிவகார்த்திகேயன் தனது 21-வது படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்திற்கு ‘அமரன்’ என்று பெயர் வைத்தனர். சோனி பிக்சர்ஸுடன் இணைந்து இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்தது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவானது.
தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படமாக உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ம் தேதி வெளியானது. இந்தப் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் உலக அளவில் ரூபாய் 302 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
வேட்டையன்: ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. வேட்டையன் திரைப்படம், கடந்த மாதம் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் வெளியானது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனம் பெற்ற இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூபாய் 250 கோடி வரை வசூலித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Also read… கடல் பாறையில் அமர்ந்து யோகா செய்த போது விபத்து.. உயிரிழந்த இளம் நடிகை!
இந்தியன் 2: நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது இந்தியன் 2 படம். இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் சங்கரே இதையும் இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, டெல்லி கணேஷ், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது. முதல் பாகத்தின் எதிர்பார்ப்பில் சென்ற ரசிகர்கள் படம் சுமாராக இருந்ததாகவே கருத்து தெரிவித்தனர். இந்தப் படம் உலக அளவில் சுமார் 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் வெளியானது.
Also read… ஹிந்தியில் காஜல் அகர்வால் அறிமுகமான படம் ’சிங்கம்’ இல்லையாம்… வைரலாகும் தகவல்
ராயன்: நடிகர் தனுஷ் அவரின் 50-வது படமான ‘ராயன்’ படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி என பலர் நடித்திருந்தனர். படம் வட சென்னையை மையமாக கொண்டு உருவாகியிருந்தது.
மேலும் இந்த படத்தில் தனுஷ் இதற்க்கு முன்பு எந்த படத்திலும், நடித்திராத கெட்டப்பான மொட்டை தலையுடன் நடித்திருந்தார். தனுஷின் 50-வது படமாக உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது.
படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.