5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Year Ender 2024: 2024ல் வெளியான டாப் 5 தமிழ் வெப் தொடர்கள் லிஸ்ட்..!

Top 5 Tamil Web Series: கொரோனாவுக்கு பிறகு ஓடிடி மற்றும் வெப் ஸ்டோரி மக்களிடையே பிரபலமானது. வெளிநாடுகளில் மட்டுமே பிரபலமான வெப் சீரிஸ் முறை தமிழிலும் களமிறங்கியது. அந்த வகையில், 2024ம் ஆண்டில் வெளியாகி மக்களிடையே பெரும் வெற்றி பெற்ற டாப் 5 தமிழ் வெப் தொடர்கள் என்னென்ன என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

Cinema Year Ender 2024: 2024ல் வெளியான டாப் 5 தமிழ் வெப் தொடர்கள் லிஸ்ட்..!
டாப் 5 தமிழ் வெப் தொடர்கள்Image Credit source: IMDb
barath-murugan
Barath Murugan | Published: 17 Dec 2024 14:23 PM

பிருந்தா: இந்த பட்டியலில் நாம் முதலில் பார்க்கப்போகும் தொடர் பிருந்தா. தெலுங்கு இயக்குநர் சூர்யா மனோஜ் இயக்கத்தில் உருவான இந்த தொடரில் நடிகை திரிஷா முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார். முற்றிலும் க்ரைம் த்ரில்லர் கதைக்களத்துடன் வெளியாகிய இத்தொடரில் திரிஷா பிருந்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தொடரை சூர்யா மனோஜின் இயக்கத்தில் அட்வெர்ட்டிசிங் எல்.எல்.பி. நிறுவனம் இணைத்துத் தயாரித்துள்ளது. இத்தொடரில் இவருடன் இன்ரஜித் சுகுமார், ரவிசந்திரன், ராகேந்து மௌலி மற்றும் ஆனந்த சாமி எனப் பல பிரபலங்களும் நடித்துள்ளனர். இந்த தொடரில் நடிகை த்ரிஷா இதுவரை நடித்திடாத மாறுபட்ட தோற்றத்தில் நடித்து அசத்தியுள்ளார். இந்த தொடரானது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் பிரபல ஓடிடி நிறுவனமான சோனி லீவ்வில் உள்ளது. ஆக்ஷ்ன் மற்றும் குற்றம் போன்ற கதைக்களத்துடன் அமைந்திருக்கும் இந்த தொடரானது குடும்பத்துடன் பார்ப்பதற்கு அருமையாக இருக்கும்.

இதையும் படிங்க:2024-ல் வசூல் சாதனை படைத்த படங்களை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

வேற மாதிரி ஆபிஸ்:

தமிழ் வெப் தொடரில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற தொடரில் “வேற மாரி ஆபிஸ்” முன்னிலை வகிக்கிறது. முற்றிலும் நகைச்சுவை மற்றும் ஆபிஸில் நடக்கும் கதைகளுடன் சிறப்பாக வெளியாகிய வெப் தொடரில் இதுவும் ஒன்றாகும்.

சத்யா மற்றும் சரவணன் எழுத்திலும் மற்றும் சிதம்பரம் மணிவண்ணன் இயக்கத்திலும் வெளியானது இந்த தொடரின் முதல் சீசன். இந்த தாசனின் வெற்றியைத் தொடர்ந்து சீசன் 2 என இரண்டு சீசன்களில் சுகுமார் 50 எபிசோடுகள் உள்ளனர். இந்த தொடரில் ஆர்.ஜே. விஜய், சௌந்தர்யா நஞ்சுண்டன், ஜனனி, லாவண்யா, விஷ்ணு, ஆர்.ஜே. சரித்திரம், வி.ஜே. பார்வதி மற்றும் ரோபோ சங்கர் எனப் பலரும் நடித்திருந்தனர்.

நகைச்சுவை கதைக்களத்துடன் கூடிய இந்த வெப் தொடரானது கடந்த ஆகாஷ் மாதம் ஆஹா ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்த தொடரை மறக்காமல் பாருங்க.

சட்னி சாம்பார்:

இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் வெளியான வெப் தொடர் சட்னி சாம்பார். இந்த தொடரை ராதா மோகன் இயக்க வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. முற்றிலும் நகைச்சுவை மற்றும் எமோஷன் கலந்த கதைக்களத்துடன் இந்த வெப் தொடர் வெளியாகியுள்ளது.

இதுவரை இதிலிருந்து சுமார் 6 எபிசோடுகள் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் நடிகர் யோகி பாபு, வாணி போஜன், நிதின், மைனா நந்தினி, நிழல்கள் ரவி, மற்றும் தீபா சங்கர் எனப் பலரும் நடித்துள்ளனர். ஐஎம்டிபி ரேட்டிங் படி இந்த தொடர் 10க்கு 8 என்ற கணக்கில் இணையத்தில் ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த தொடரானது டிஸ்னி பிளஸ் ஹாட்சுடரில் உள்ளது.

இதையும் படிங்க:2024-ல் கேரள பாக்ஸ் ஆபீஸை தெரிக்கவிட்ட டாப் 5 தமிழ் படங்கள்!

கோலி சோடா ரைசிங்:

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் கோழி சோடா. இதைத் தொடர்ந்து கோழி சோடா 2 வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இதை வெப் தொடராக இயக்கும் நிலையில், இதற்குக் கோலி சோடா ரைசிங் என்று கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகியது.

இதில் இயக்குநர் சேரன், உதயராஜ், பாண்டி, ஷாம், புகழ், அபிராமி கோபிக்குமார், ரம்யா நம்பீசன், அவந்திகா, அம்மு அபிராமி மற்றும் கிஷோர் எனப் பலரும் நடித்துள்ளனர். திரைப்படத்தின் தொடர்ச்சியான கதை காலத்துடன் வெளியான இந்த வெப் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த தொடரில் இதுவரை சுமார் 50 எபிசோடுகள் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்துடன் இந்த வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் உள்ளது. இந்த தொடரை மிஸ் பண்ணாமல் கண்டிப்பாக பாருங்க.

சினேக் அண்ட் லேடர்ஸ்:

இயக்குநர்கள் பரத் முரளிதரன், அசோக் வீரப்பன் மற்றும் கமலா அல்சேமிஸ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர்கள் பட்டியலில் இந்த சினேக் அண்ட் லடர்ஸ் தொடரும் உள்ளது.

இந்த தொடரில் சம்ரித் சூர்யா, ராஜேஸ்வர் சூர்யா மற்றும் எஸ். சூரியகுமார் எனப் பலரும் நடித்துள்ளனர் . இயக்குநர் கார்த்தி சுப்புராஜால் எழுதப்பட்ட இக்கதையானது குற்றத்தை மறைக்கும் நான்கு குழந்தைகள் சுற்றி நிகழும் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இணையத்தில் 10க்கு 5.3 என்ற கணக்கில் அமேசன் ப்ரைம் வீடியோவில் உள்ளது.

இதையும் படிங்க:2024-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய மொழி படங்களின் லிஸ்ட் இதோ!

Latest News