Today’s Cinema News: வேட்டையன் வசூல் முதல் விடுதலை 2 அப்டேட் வரை… டாப் சினிமா செய்திகள்! - Tamil News | top cinema news headlines for october 11th 2024 | TV9 Tamil

Today’s Cinema News: வேட்டையன் வசூல் முதல் விடுதலை 2 அப்டேட் வரை… டாப் சினிமா செய்திகள்!

இன்றைய சினிமா செய்திகள்: நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் நேற்று வெளியான வேட்டையன் படத்தின் முதல் நாள் வசூல் முதல் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை பாகம் இரண்டு படம் பற்றிய அப்டேட் வரை இன்று அக்டோபர் மாதம் 11-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சில.

Today’s Cinema News: வேட்டையன் வசூல் முதல் விடுதலை 2 அப்டேட் வரை… டாப் சினிமா செய்திகள்!

டாப் சினிமா செய்திகள்

Published: 

11 Oct 2024 18:36 PM

இன்றைய சினிமா செய்திகள்: நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் நேற்று வெளியான வேட்டையன் படத்தின் முதல் நாள் வசூல் முதல் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை பாகம் இரண்டு படம் பற்றிய அப்டேட் வரை இன்று அக்டோபர் மாதம் 11-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சில.

வேட்டையன் படத்தின் முதல் நாள் வசூல்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று வெளியானது. இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தவறு செய்தால், என்கவுண்டர் தான் ஒரே தீர்ப்பு என்று நினைக்கும் ரஜினி, என்கவுண்டரே இருக்க கூடாது என்று போராடும் அமிதாப் இருவருக்கும் நடக்கும் மோதல் படத்தின் கதை. துஷாரா விஜயன் சென்னையில் ஒரு வேலை வருகிறார். அப்படி வந்த இடத்தில், அசல் கோளாரால் கொலை செய்யப்பட, ரஜினி, அசல் கோளாரை என்கவுண்டர் செய்யப்படுகிறார். பின் அவன் நல்லவன் என்பது தெரியவர, துஷாராவை கொன்றது யார் என்ற தேடுதலை ரஜினி தொடங்க அதன் பின் என்ன ஆனது என்பது தான் படத்தின் கதை. முதல் நாள் உலகளவில் ரூ. 72 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

டப்பிங் பணியை தொடங்கியது விடுதலை 2 படக்குழு

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை பாகம் 2 படத்தின் டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளதாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான  திரைப்படம் ‘விடுதலை’.  நடிகர் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன்,  உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி சச்கைபோடு போட்ட திரைப்படம் விடுதலை. எல்ரெட் குமார் தயாரிப்பில் இளையராஜா இசையில் உருவான இப்படம் காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சினை  மிகவும் வெளிப்படையாக பேசி இருந்தது. நடிகர் சூரி இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த சாச்சனா…

பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் நாளே வெளியேற்றப்பட்ட சாச்சனா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று வந்துள்ள வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து 100 நாட்கள் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வந்துள்ளனர். கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் அவர் நிகழ்ச்சியை விட்டு விலகிய பிறகு தற்போது விஜய் சேதுபதி இந்த 8-வது சீசனை தொகுத்து வழங்குகிறார். முதல் நாளே வெளியேற்றப்பட்ட சாச்சனா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளது தெரியவந்தது. அவரை பார்த்து போட்டியாளர்கள் அனைவரும் கொண்டாடித் தீர்த்தனர்.

எதிர்நீச்சல் 2 சீரியலின் புதிய கதாநாயகி இவர் தான்

தமிழகத்தின் முன்னணி சேனல்கள் அனைத்திலுமே தவறாமல் ஒளிபரப்பாகி வருகின்றன சீரியல்கள். சினிமா படங்களுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருப்பதைப் போன்று டிவிகளில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல தொலைக்காட்சிகள் பல விதமான தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. ஆனால் எப்போதும் போட்டி என்னவோ சன் டிவிக்கும், விஜய் டிவிக்கும் தான், இந்த இரண்டு சேனல்களின் தொடர்களுக்கு மவுசு அதிகம் என்றே கூறலாம். இயக்குநர் திருச்செல்வம் கடந்த 2022-ம் ஆண்டு எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கத் தொடங்கினார். ஆணாதிக்கம் மிக்க அண்ணன் – தம்பிகள் தங்கள் வீட்டு பெண்களை எவ்வாறு அடிமைப் படுத்துகிறார்கள் என்பதும், அதை அந்தப் பெண்கள் எதிர்கொண்டு எவ்வாறு மீண்டெழுகிறார்கள் என்பதே எதிர்நீச்சல் சீரியலின் கதைகளம்.  விரைவில் எதிர்நீச்சல் 2 சீரியல் வருகிறது என தகவல் வெளிவந்தது. ஆனால், இந்த சீரியலில் கதாநாயகியாக மதுமிதா நடிக்கவில்லை என அவரே தெரிவித்துவிட்டார். இந்த நிலையில், மதுமிதாவுக்கு பதிலாக ஜனனி கதாபாத்திரத்தில் நடிக்கப்போகும் நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, எதிர்நீச்சல் 2 சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடிகை பார்வதி நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

237-வது படத்துக்கு தயாராகும் நடிகர் கமல்

கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் ‘தக்லைப்’ படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்தியன் 3-ம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. இந்த நிலையில் அடுத்து பிரபல சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவு சகோதரர்கள் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இந்த படம் குறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையிலும் பட வேலைகள் தொடங்காமல் இருந்தது. இந்த நிலையில் கமல்ஹாசன் நடிக்கும் 237-வது படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கும் என்று தெரிவித்து உள்ளனர்.

வெளியானது ஃபகத் பாசிலின் பொகெயின்வில்லா படத்தின் ட்ரெய்லர்!

வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் என தமிழில் வெறும் 4 படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் தனது அசாத்தியமான நடிப்பு திறமையால் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார் ஃபகத் பாசில். குறிப்பாக எதிர்மறை கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை கையாண்ட விதத்தால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். நேற்று ரஜினியின் நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் ஃபகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள ரசிகர்களால் ஃபாஃபா என்று அன்புடன் அழைக்கப்படுபவர் ஃபகத் ஃபாசில். மலையாள சினிமா மட்டுமன்றி, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் பொகெயின்வில்லா திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஃபகத்தின் நெருங்கிய நண்பரான அமல் நீரட் இயக்குகிறார். இப்படத்தில் ஃபஹத் ஃபாசிலுடன் , குஞ்சாக்கோ போபன், வீணா நந்த குமார், ஜோதிர்மயி, ஸ்ரீண்டா, முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

அசோக் செல்வனின் எமக்கு தொழில் ரொமான்ஸ் ரிலீஸ் அப்டேட்!

அசோக் செல்வன் நடிப்பில் அண்மையில் வெளியான‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ளா. அவந்திகா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என ரொமான்ஸ் காமெடி திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது என ட்ரெய்லரை பார்க்கும் போது தெரிந்தது. இந்நிலையில் இந்தப் படம் வரும் நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பேட்டை படத்தை விட வேட்டையன் படம் நல்லா இருக்கு – கார்த்திக் சுப்புராஜ்!

ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியானது வேட்டையன் திரைப்படம். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா, ரித்திகா சிங், விருமாண்டி அபிராமி, துஷாரா விஜயன் என பலர் நடித்திருக்கிறார்கள். முதன்முறையாக் ரஜினிகாந்த் ஞானவேலுவுடன் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்நிலையில் ரஜினிகாந்த்தின் வெறித்தனமான ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் வேட்டையன் படத்தை திரையரங்கில் சென்று பார்த்தார். அதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தலைவர் படம் என்பதால் நான் ரொம்பவே ஆர்வமாக இருந்தேன். நான் அவரை வைத்து இயக்கிய பேட்ட படத்துக்கு பிறகு அவரது நடிப்பில் நிறைய நல்ல படங்கள் வந்திருக்கின்றன. ஜெயிலர் படம் நன்றாக இருந்தது. தலைவர் ரஜினி குறி வெச்சா தப்பாது” என்றார்.

செரிமானத்தை மேம்படுத்த வேண்டுமா ? அப்போ இதை பாலோ பண்ணுங்க
மோகன் லால் உடன் இருக்கும் இந்த சிறுமி யார்?
தங்க நிற உடையில் ஜொலிக்கும் ஜான்வி போட்டோஸ் இதோ
குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வெற்றி படிநிலைகள்!
Exit mobile version