5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Cinema News: சார் படத்தின் ட்ரெய்லர் முதல் கவினின் ‘பிளடி பெக்கர் ட்ரெய்லர் வரை… டாப் சினிமா செய்திகள்!

இன்றைய சினிமா செய்திகள்: நடிகர் விமல் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ‘சார்’ படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் முதல் கவினின் ‘பிளடி பெக்கர்’ படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் வரை இன்று அக்டோபர் மாதம் 17-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சில.

Today’s Cinema News: சார் படத்தின் ட்ரெய்லர் முதல் கவினின் ‘பிளடி பெக்கர் ட்ரெய்லர் வரை… டாப் சினிமா செய்திகள்!
சினிமா செய்திகள்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Oct 2024 18:14 PM

இன்றைய சினிமா செய்திகள்: நடிகர் விமல் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ‘சார்’ படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் முதல் கவினின் ‘பிளடி பெக்கர்’ படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் வரை இன்று அக்டோபர் மாதம் 17-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சில.

லப்பர் பந்து படத்தின் ஓடிடி வெளியீடு ஒத்திவைப்பு

விளையாட்டுடன் சரியான கதையும், வசனங்களும் இடம்பெறும் படங்கள் மக்களிடையே விரைவாக சென்றுவிடும். அந்த அடிப்படையில் உருவான ‘லப்பர் பந்து’ படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகின்றது. வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண்.பியார் பிரேமா காதல் , தாராள பிரபு , இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்  உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு இவர் நடித்து வெளியான பார்க்கிங் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது லப்பர் பந்து படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் , வதந்தி சஞ்சனா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இவர்கள் தவிர்த்து காலி வெங்கட் , தேவதர்ஷினி, பால சரவணன் , கீதா கைலாசம் உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் உள்ளார்கள். படம் தற்போதும் திரையரங்குகளில் சிறப்பாக ஓடிவரும் நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி வெளியீட்டை தள்ளி வைப்பதாக சிம்ப்ளி சவுத் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சார்’ படத்தின் 2-வது ட்ரெய்லர் இதோ!

இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சார்’. இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் முன்னதாக வெளியாகி கவனத்தைப் பெற்றது. கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் உருவாகி உள்ள ‘சார்’ படத்தின் டீசர் கடந்த ஜூன் மாதம் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இந்தநிலையில் முன்னதாக இப்படத்தின் முதல் ட்ரெய்லரை கடந்த செப்டம்பர் மாதம் படக்குழு வெளியிட்டது. அந்த ட்ரெய்லரைப் பார்க்கும் போது கல்வி மறுக்கப்படும் மக்களின் கல்விக்காக போராடும் நபராக சரவணனும் விமலும் நடித்துள்ளது தெரிந்தது.அந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இந்த நிலையில் படம் நாளை 18-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இரண்டாவது ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநராக மாறும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா!

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இயக்குநராக அவதராம் எடுக்கப்போவதாக இணையத்தில் தகவல்கள் உலாவருகின்றது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது மட்டுமல்லாமல் பல படங்களையும் தயாரித்த வருகிறார். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ மற்றும் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மாமனிதன்’ திரைப்படங்களை அவர் தயாரித்துள்ளார். இந்தநிலையில், தற்போது யுவன் சங்கர் ராஜா இயக்குனர் அவதாரம் எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த யுவன் சங்கர் ராஜா, “தான் புதிதாக இயக்கப்போகும் படத்தில் கதாநாயகனாக சிம்புவை நடிக்க வைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

‘அமரன்’ படத்திலிருந்து “வெண்ணிலவு சாரல்” பாடல்!

பிரபல இயக்குநர் ராஜ்குமார் இயக்கத்தில் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகிவரும் திரைப்படம் அமரன். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி என இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அமரன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது படத்தின் பிரமோஷன் வேலைகள் நடந்துவருகிறது.  இந்நிலையில் படக்குழு அடுத்த லிரிக்கல் பாடல் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். “வெண்ணிலவு சாரல்” என்ற இந்த லிரிக்கல் பாடலை கபில் கபிலன் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் என இரு பாடகர்களும் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் வெளியாகி இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

நடிகர் கவினின் ‘பிளடி பெக்கர்’ படத்தின் டிரெய்லர் அப்டேட்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் நெல்சன் திலிப்குமார் முக்கியமானவர். சமீபத்தில் நெல்சன் அவரது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதற்கு பிலமண்ட் பிக்சர்ஸ் என பெயரிட்டுள்ளார். நெல்சன் தயாரிப்பில் கவின் ’பிளடி பெக்கர்’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்குகிறார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். கவின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ‘பிளடி பெக்கர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ‘பிளடி பெக்கர்’ படம் வரும் 31 ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தநிலையில், இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளது. இது குறித்த பதிவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மீண்டும் இயக்குநராகும் நடிகர் அர்ஜூன்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர் அர்ஜூன். பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக குணச்சித்ரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடிக்கிறார். நடிப்பை தாண்டி இயக்குனராகவும் பயணிக்கும் இவர், ‛ஜெய்ஹிந்த், எழுமலை’ உள்ளிட்ட பல வெற்றி படங்களையும் இயக்கி உள்ளார். கடைசியாக 2018ல் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து ‘சொல்லிவிடவா’ படத்தை இயக்கினார். இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பின் இப்போது ‘சீதா பயணம்’ என்ற படத்தை இயக்கி, தயாரிப்பதாக அறிவித்துள்ளார்.

அமரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் ‘முகுந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். உண்மை சம்பவத்தின் தழுவலை கொண்டுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைப்பெறவுள்ளது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி, சாய் பல்லவி மற்றும் படத்தில் நடித்தவர்களும் படக்குழுவும் கலந்துக்கொள்வார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘சூர்யா 45’ படத்தின் கதாநாயகி இவரா?

நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிக் கட்டிப் பறப்பவர் நடிகர் சூர்யா. தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சூர்யா தற்போது ஹிந்தி சினிமா பக்கமும் கவனத்தை திருப்பியிருக்கிறார். விரைவில் அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தோல்வியையே சந்தித்தது. அதனையடுத்து வணங்கான், கங்குவா, வாடிவாசல், புறநானூறு ஆகிய படங்களில் கமிட்டானார். இவற்றில் வணங்கானிலிருந்து வெளியேறிய அவர் வாடிவாசலில் நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் காஷ்மிரா பர்தேசி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

Latest News