5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Cinema News: அமரன் பட முதல் விமர்சனம் முதல் தமன்னாவிடம் விசாரணை வரை… டாப் சினிமா செய்திகள்!

இன்றைய சினிமா செய்திகள்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அமரன்’ படத்தின் முதல் விமர்சனம் முதல் நடிகை தமன்னாவிடம் அமலாக்கதுறையினர் விசாரணை நடத்தியது வரை இன்று அக்டோபர் மாதம் 18-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சில.

Today’s Cinema News: அமரன் பட முதல் விமர்சனம் முதல் தமன்னாவிடம் விசாரணை வரை… டாப் சினிமா செய்திகள்!
டாப் சினிமா செய்திகள்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Oct 2024 18:53 PM

இன்றைய சினிமா செய்திகள்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அமரன்’ படத்தின் முதல் விமர்சனம் முதல் நடிகை தமன்னாவிடம் அமலாக்கதுறையினர் விசாரணை நடத்தியது வரை இன்று அக்டோபர் மாதம் 18-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சில.

ஃபேர்பிளே விவகாரம்.. விசாரணை வளையத்தில் தமன்னா

ஐபிஎல் போட்டிகளை ஃபேர்பிளே செயலியில் சட்ட விரோதமாக ஒளிபரப்பிய வழக்கில், அச்செயலியின் விளம்பர தூதரான நடிகை தமன்னாவிடம் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பாலிவுட் மற்றும் தென்னிந்திய நடிகை தமன்னா பாட்டியாவிடம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குற்றச்சாட்டுகள் குறித்து ED விசாரித்ததாக ED இன் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. ஃபேர்பிளே என்பது மகாதேவ் ஆன்லைன் கேமிங் செயலியின் துணை செயலியாகும். இது கிரிக்கெட் போன்ற பல்வேறு நேரடி விளையாட்டுகளில் சட்டவிரோதமாக பெட்டிங் செய்வதற்கான செயலியாகும். இந்த செயலி மீது கடந்த ஆண்டு பண மோசடி வழக்கு பதியப்பட்டது. அதனை தொடர்ந்து ஓராண்டாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

‘லெவன்’ படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் பாடிய பாடல் வெளியானது!

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லரான ‘லெவன்’ திரைப்படத்தை தங்களது மூன்றாவது படைப்பாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர். இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி இருக்கும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் திரைப்படம் தான் ‘லெவன்’. இப்படத்தின் முதல் பாடலை உலக நாயகன் கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார். டி. இமான் இசையமைத்துள்ள இப்பாடலை கமல்ஹாசனின் மகள் ஷ்ருதி ஹாசன் பாடியுள்ளார். ‘தி டெவில் இஸ் வெயிட்டிங்’ எனும் இப்பாடலின் வரிகளை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார் அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ்.

புகார் கொடுத்த ஓவியா.. சர்ச்சை வீடியோவை நீக்கிய போலீஸ்!

நடிகை ஓவியா புகார் அளித்த பிறகு சர்ச்சைக்குரிய வீடியோவை கேரள போலீஸ் நீக்கியுள்ளது. கடந்த ஒரு வாரமாக இணையதளம் முழுவதும் நடிகை ஓவியா குறித்த பதிவுகள் அதிகம் காணப்படுகின்றன. பெண் ஒருவரின் தனிப்பட்ட வீடியோ இணையத்தில் லீக்கானது. அந்த வீடியோவை பலரும் நடிகை ஓவியாவுடன் ஒப்பிட்டு இணையத்தில் பரப்பினர். சிலர், ஓவியாவின் சமூக வலைதள போட்டோக்களில் “வீடியோ இன்னும் கொஞ்சம் நீளமாக இருந்திருக்கலாம்” என்று கூற, அதற்கு அவரும் “அடுத்த முறை செய்து விடலாம்” என்பது போல கூலாக பதிலளித்தார். இந்தநிலையில் தன்னை குறிப்பிட்டு பரவும் ஆபாச வீடியோவை நீக்கக் கோரி திருச்சூர் போலீஸ் கமிஷனர் இளங்கோவுக்கு நடிகை ஓவியா இமெயில் மூலம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் எக்ஸ் மற்றும் சில ஆபாச இணையதளங்களில் தனது பெயரில் பரப்பப்பட்டு வரும் வீடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து இந்த வீடியோக்களை நீக்க வேண்டும் என்று கூறி எக்ஸ் இணையதளத்திற்கு திருச்சூர் கமிஷனர் இளங்கோ கடிதம் அனுப்பினார். அதன்படி தற்போது 3 ஆபாச வீடியோக்கள் எக்ஸ் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ பட முதல் விமர்சனம்!

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அவரது 21-வது படமான இதை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது. இதில் அவர் ராணுவ வீரராக நடிக்கிறார். அவர் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் இது. பிற மாநிலங்களில் உள்ள தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்கள், காஷ்மீரி வீரர்கள், ‘விஸ்வரூபம்’ வில்லன் ராகுல் போஸ், புவன் அரோரா எனப் பலரும் நடித்துள்ளனர். தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அமரன் படத்தை ராணுவ உயரதிகாரிகள் சிலரிடம் படக்குழு போட்டு காண்பித்ததாகவும்; அது அவர்களை ரொம்பவே கவர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவியின் ‘பிரதர்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!

‘சைரன்’ படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘பிரதர்’. இந்தப் படத்தை எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். அவரைத் தவிர்த்து, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, ‘கேஜிஎஃப்’ புகழ் ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகியுள்ளது. ‘பிரதர்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழை வழங்கியுள்ளது தணிக்கை வாரியம்.

தயாரிப்பாளராகும் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா!

`உறுமீன்’, `பயணிகள் கவனிக்கவும்’ போன்ற திரைப்படங்களின் இயக்குநரான எஸ்.பி. சக்திவேல் இயக்கத்தில் உருவாகி ரிலீஸுக்கு தயாராகி வரும் திரைப்படம் `அலங்கு’. இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கதாநாயகனாக குணாநிதி நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. கேரளாவை சேர்ந்த அரசியல்வாதி குழுவுக்கும் தமிழக பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் தான் திரைப்படத்தின் மையம், அதன் பின்னணி என்ன என்பதை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையாக வடிவமைத்துள்ளனராம். அன்புமணி ராமதாஸுக்கு சங்கமித்ரா, சம்யுக்தா, சஞ்சுத்ரா என மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இவர்களில் சங்கமித்ரா திரைப்பட தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கிறார்.

‘சூர்யா 44’ ஆக்சன் கலந்த காதல் படம் – கார்த்திக் சுப்புராஜ்

சூர்யா தனது 44-வது படத்திற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர். நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கார்த்திக் சுப்பராஜ் அப்டேட் கொடுத்திருக்கிறார். மேலும் இந்த படமானது கேங்ஸ்டர் படம் இல்லை எனவும் இது ஆக்சன் கலந்த காதல் படம் என்பதையும் தெரிவித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

Latest News