Today’s Cinema News: அமரன் ட்ரெய்லர்.. புது லுக்கில் பிரபாஸ்.. இன்றைய சினிமா செய்திகள்!
பொதுவாக தமிழக மக்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக சின்னத்திரையும் பெரிய திரையும் விளங்கி வருகிறது. ஒவ்வொரு நாளும் பல நிகழ்வுகள் இரு துறைகளிலும் நடைபெற்று வரும் நிலையில் அவற்றில் முக்கியமான நிகழ்வுகளை நாம் இந்த தொகுப்பில் காணலாம். அக்டோபர் 23ஆம் தேதி அன்று அமரன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதைப்போல் மும்பையில் கங்குவா படத்தின் பிரமோஷன் நடைபெற்றுள்ளது.
இன்றைய சினிமா செய்திகள்: பொதுவாக தமிழக மக்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக சின்னத்திரையும் பெரிய திரையும் விளங்கி வருகிறது. ஒவ்வொரு நாளும் பல நிகழ்வுகள் இரு துறைகளிலும் நடைபெற்று வரும் நிலையில் அவற்றில் முக்கியமான நிகழ்வுகளை நாம் இந்த தொகுப்பில் காணலாம். அக்டோபர் 23ஆம் தேதி அன்று அமரன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதைப்போல் மும்பையில் கங்குவா படத்தின் பிரமோஷன் நடைபெற்றுள்ளது. மேலும் பிரபாஸ் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
-
5 பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட அமரன் பட ட்ரெய்லர் – ரசிகர்கள் உற்சாகம்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடத்தில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்தப் படத்தில் சாய் பல்லவி, ராகுல் போஸ், ஸ்ரீகுமார், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படம் தீபாவளி வெளியிடாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லரை தமிழில் கமல், இந்தியில் அமீர்கான், கன்னடத்தில் சிவராஜ்குமார், தெலுங்கில் நானி, மலையாளத்தில் டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் வெளியிட்டனர். இப்படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ரஜினிகாந்தை புகழ்ந்து தள்ளிய சூர்யா – நெகிழ்ச்சியான ரசிகர்கள்
சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான் என கங்குவா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா புகழாரம் சூட்டியுள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஒருவர் சூர்யாவை சூப்பர் ஸ்டார் என அழைத்தார். அப்போது நீங்கள் ஒருவரின் பெயரையும், அடையாளத்தையும் அவரிடம் இருந்து எடுத்துக் கொள்ள முடியாது என நச்சென பதிலளித்தார். சிவா இயக்கத்தில் சூர்யா, கியாரா அத்வானி, கோவை சரளா, யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் பலரின் நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
-
கமலை காப்பியடிக்க சென்ற ஜெயம் ரவி – ஆளவந்தான் ஷூட்டிங்கில் சுவாரஸ்ய சம்பவம்
ஆளவந்தான் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்ற சென்றபோது உண்மையில் படம் இயக்குவது பற்றி தெரிந்து கொள்ள நான் செல்லவில்லை. கமல்ஹாசன் என்ன செய்கிறாரோ அதை அப்படியே காப்பி அடிக்க வேண்டும் என நினைத்துதான் சென்றேன். ஆனால் கமலை ரோல் மாடலாக வைத்து செயல்படுவோமே தவிர அவரை யாரும் காப்பியடிக்க முடியாது என நடிகர் ஜெயம்ரவி தெரிவித்துள்ளார். இதனிடையே ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை ராஜேஷ் இயக்கியுள்ள நிலையில் பிரியங்கா மோகன், நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
-
பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு ராஜாசாப் படத்தின் போஸ்டர் வெளியீடு
நடிகர் பிரபாஸ் இன்று தனது 45 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வித்தியாசமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபாஸ் பிறந்தநாளை சிறப்பிக்கும் பொருட்டு அவர் நடித்து வரும் ராஜாசாப் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. பாகுபலி படத்திற்குப் பிறகு எந்த படமும் பிரபாஸுக்கு பெரிய அளவில் கைக்கொடுக்காத நிலையில் இந்த படத்திற்காக மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்.
-
வசூலில் கலக்கிய லப்பர் பந்து படம் … இந்தியன் 2 படத்தை பின்னுக்கு தள்ளியது!
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற லப்பர் பந்து படத்தின் வசூல், நடிகர் கமல்ஹாசன் நடித்து ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படத்தின் வசூலை முறியடித்துள்ளதாக வெளியாகிய தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் தீபாவளி வெளயீடாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பிரதர் படத்தில் இருந்து வெளியான துள்ளலான பாடல்
இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படத்தில் இருந்து மெதக்குது காலு ரெண்டும் என்ற பாடல் வீடியோ வெளியாகி உள்ளது. இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் நிலையில் பூமிகா, நட்டி ,பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தீபாவளி வெளியீடாக இப்படம் திரைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.