5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Cinema News: புஷ்பா 2 ரிலீஸ் முதல் கங்குவா பட விமர்சனம் வரை… டாப் சினிமா செய்திகள்!

இன்றைய சினிமா செய்திகள்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அமரன்’ படத்தின் முதல் விமர்சனம் முதல் நடிகை தமன்னாவிடம் அமலாக்கதுறையினர் விசாரணை நடத்தியது வரை இன்று அக்டோபர் மாதம் 24-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சில.

Today’s Cinema News: புஷ்பா 2 ரிலீஸ் முதல் கங்குவா பட விமர்சனம் வரை… டாப் சினிமா செய்திகள்!
டாப் சினிமா செய்திகள்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Oct 2024 18:45 PM

இன்றைய சினிமா செய்திகள்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அமரன்’ படத்தின் முதல் விமர்சனம் முதல் நடிகை தமன்னாவிடம் அமலாக்கதுறையினர் விசாரணை நடத்தியது வரை இன்று அக்டோபர் மாதம் 24-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சில.

டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது புஷ்பா 2!

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’. இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். கூலித் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கும் புஷ்பா கதாபாத்திரம் எப்படி ஒரு கடத்தல் கும்பல் தலைவனாகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதுடன் ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. சமந்தாவின் ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் பட்டி தொட்டி எங்கும் அதிர்ந்தது. சமந்தா, ஓ சொல்றியா பாடலுக்கு மட்டும் வந்து ஓ சொல்லிவிட்டுப் போகிறார். படத்தின் இரண்டாம் பாதியில் பகத் பாஸில் வருகிறார். அது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் துவக்கப் புள்ளியாக அமைகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாக பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் வருகின்ற டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வழக்கில் கைதான ஜானி மாஸ்டருக்கு ஜாமின்!

போக்சோ வழக்கில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு ஜாமின் கிடைத்துள்ளது. 2019ல் இவருடன் பணிப்புரிந்தபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 21 வயது இளம்பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளதார். அதன்பேரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் தெலங்கானா போலீசார் டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது வழக்கு பதிந்துள்ளனர். ஹைதராபாத் ராய்துர்கம் காவல் நிலையத்தில் இவர் ஜானி மாஸ்டர் மீது புகாரளித்துள்ளார். சென்னை , மும்பை , ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு படப்பிடிப்பிற்கு சென்றபோது ஜானி மாஸ்டர் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஜானியை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது ஜானி மாஸ்டருக்கு ஜாமின் கிடைத்துள்ளது.

‘கங்குவா’ படத்தின் முதல் விமர்சனம் இதோ!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படம் குறித்து வெளியான முதல் விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. இந்த படத்தினை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகின்றார். மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படம்தான் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் படம். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் மதன் கார்க்கி தனது ட்விட்டர் பக்கத்தில் கங்குவா படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கங்குவாவின் முழுப் பதிப்பைப் பார்த்தேன். டப்பிங் செய்யும் போது ஒவ்வொரு காட்சியையும் நூறு தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன், ஆனாலும் ஒவ்வொரு பார்வைக்கும் படத்தின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு மிகச்சிறப்பாக உள்ளது என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

சிறிய படங்களின் வெற்றி சினிமா துறையை ஊக்குவிக்கும் – நடிகர் விமல்

இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘சார்’. இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிட்டது. இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிலையில் படத்தின் வெற்றியை படக்குழு சமீபத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. அப்போது பேசிய நடிகர் விமர் இந்த மாதிரி சிறிய படங்களின் வெற்றி சினிமா துறையை மேலும் ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஓடிடியில் வெளியானது சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை’ படம்!

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படம் கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  இயக்குநர் சீனு ராமசாமி முன்னதாக இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய படங்கள் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. மாமனிதன் திரைப்படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று பல விருதுகளை வென்றது. சீனு ராமசாமி இயக்கிய இந்தப் படத்தில் யோகி பாபு, புதுமுகங்கள் ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடித்துள்ளனர். அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். என்.ஆர்.ரகுநந்தன் இந்தப் படத்திற்கு இசை அமைதிருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தியேட்டரில் 50 நாட்களை கடந்தது விஜயின் ‘கோட்’ படம்!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி வெளியான படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்தப் படத்தில் விஜயுடன், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தொடர்ந்து இம்மாதம் 3-ந்தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த நிலையில், ‘தி கோட்’ படம் வெளியாகி 50 நாள் ஆவதை படக்குழு கொண்டாடி வருகின்றது.

’மெய்யழகன்’ படத்திலிருந்து வெளியானது ‘கொலுசு’ வீடியோ பாடல்

நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்தசாமி நடிப்பில் வெளியான ‘மெய்யழகன்’ படத்திலிருந்து ‘கொலுசு’ பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் பிரேம் குமார். இவர் அடுத்ததாக கார்த்தியின் 27-வது படத்தை இயக்கியுள்ளார். மெய்யழகன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்தசாமி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதில் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா மற்றும் தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படம் கடந்த மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் படத்திலிருந்து ‘கொலுசு’ பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

நான் அஜித் ரசிகர்… துல்கர் சல்மானின் ஓப்பன் ஸ்டேட்மென்ட்!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ படத்தை இயக்கியதன் மூலம் கோலிவுட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் இயக்குநர் வெங்கி அட்லுரி. இதனைத் தொடர்ந்து இவர் துல்கர் சல்மானை வைத்து தற்போது ‘லக்கி பாஸ்கர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். பான் இந்தியன் படமாக உருவாகும் இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து படக்குழுவினர் தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் படம் வருகின்ற 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அப்போது துல்கர் சல்மானிடம் அவருக்கு பிடித்த நடிகர் யார் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர் தான் ஒரு அஜித் ரசிகர் என்று வெளிப்படையாக பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

Latest News