5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தமிழ் டாப் நடிகைகள் என்ன படிச்சு இருக்காங்க? சினிமா வாய்ப்பு குறித்து ஒரு பார்வை!

Actress : தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளாக வலம் வரும் டாப் நடிகைகளின் படிப்பு தகுதி மற்றும் அவர்கள் என்ன படித்துள்ளனர், எவ்வாறு திரைப்படத்துறைக்கு உள்ளே வந்தனர் மற்றும் அவர்களின் சினிமா வாழ்க்கையைப் பற்றிய தகவல்களைப் பற்றிய முழு விவரங்களைப் பார்க்கலாம்..!

தமிழ் டாப் நடிகைகள் என்ன படிச்சு இருக்காங்க? சினிமா வாய்ப்பு குறித்து ஒரு பார்வை!
கோப்பு படம் (Photo Credit: Instagram )
Follow Us
barath-murugantv9-com
Barath Murugan | Updated On: 16 Sep 2024 08:58 AM
நயன்தாரா:  நயன்தாரா திருவல்லாவில் உள்ள பாலிகாமடம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். இவரி தந்தை விமானத்துறையில் பணியாற்றிய காரணத்தால் இந்தியாவில் ஜம் நகர், குஜராத் மற்றும் டெல்லி எனப் பல இடங்களில் படித்துள்ளார். பின்னர் தனது கல்லூரிப் படிப்பான ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை திருவல்லாவிலுள்ள மார்த்தோமா கல்லூரியில் படித்துள்ளார். பின் 2003ல்  “மனசினாகாரே” என்ற மலையாளத்திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில்  ”ஐயா” திரைப்படத்தில் நடித்ததின் மூலம் அறிமுகமானார். பின் சந்திரமுகி, கஜினி, வல்லவன் மற்றும் பில்லா போன்ற திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தது. தமிழ் மற்றும் மலையாளம் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் சில படங்கள் நடித்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவனும்  நயன்தாராவும்  காதலித்து  2022 ஜூன் 9ல் திருமணம் செய்து கொண்டனர்.

சமந்தா:

தமிழ் ரசிகர்களின் “க்ரஷ் லிஸ்டில்” இருக்கும் நடிகை சமந்தா ரூத். இவர் சென்னையில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் அன்கலோ் இந்தியன் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். பின் தனது கல்லூரிப் படிப்பைச்  சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். அதன் பிறகுத் தனது இளங்கலை பட்டப்படிப்பின் இறுதியில், அவர் மாடலிங்கில் இறங்கினார். குறிப்பாக நாயுடு ஹாலில் பணிபுரிந்து அதன் பிறகு  முதலில் திரைப்பட இயக்குநர் கௌதம்மேனனின்  இயக்கத்தில் இவர் நடித்த ஏ மாய சேசாவே என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின் தமிழில் ரவி வருமனுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் தெலுங்கு,மலையாளம்  மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடித்த பல படங்கள் இவருக்கு வெற்றியைத் தேடி தந்தது.

அனுஷ்கா:

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நாயகியாக ஜொலித்தவர் நடிகை அனுஷ்கா. இவர் பெங்களூரில் உள்ள மெளண்ட் கார்மேல் என்ற பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்து பின் கணினி பாடத்தில் இளங்கலை பட்டமும் பெற்றார்.பின் தான் கல்வி படித்த  பள்ளியிலேயே ஓராண்டு  ஆசிரியையாகவும் பணியாற்றியுள்ளார் நடிகை அனுஷ்கா. இவர் 2005ல் நடிகர் நாகார்ஜூனா உடன் இணைந்து சூப்பர் என்ற தெலுங்கு திரைப்படம் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். தமிழில் சுந்தர்.சி யின் இயக்கத்தில் வெளியான ரெண்டு என்ற திரைப்படம் தான் தமிழில் இவர் நடித்த முதல் படமாகும். பின் அருந்ததி, வேட்டைக்காரன், சிங்கம் மற்றும் தெய்வத்திருமகள் போன்ற திரைப்படங்கள் இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தன.

சாய் பல்லவி:

தமிழில் பல ரசிகர்களின் கனவு தேவதையாக இருப்பவர் தான் நடிகையும், நடனப்புயலுமான  நடிகை சாய் பல்லவி. இவர் கோயம்புத்தூர் இல் உள்ள ஆவிலா பெண்கள் கான்வென்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பின் சியார்சியாவில் திபிலீசி அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவப் படிப்பை முடித்தார். பின்னர் 2020ல் தன்னுடைய வெளிநாட்டு மருத்துவத் தேர்வைத் திருச்சியில் எழுதி தற்போது MBBS மருத்துவராக உள்ளார். இவர் 2015ல் வெளியாகி  மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய மலையாளத் திரைப்படமான ”பிரேமம்” படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் மூலம்  ரசிகர்களின் கவனத்தை  ஈர்த்தார். பின் மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். பானுமதி,கலி,மிடில் க்லாஸ் அப்பாயி,கரு மற்றும் மாரி 2  போன்ற திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.

ராஷ்மிகா மந்தனா:

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் கூர்க் பொது பள்ளியில் ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்தார். பின் பெங்களூரிலுள்ள எம்.எஸ்.ராமையா கல்லூரியில் உளவியல், இதழியல் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் என மூன்று டிகிரி பட்டங்களைப் பெற்றுள்ளார். ராஷ்மிகா கன்னட திரைப்படமான “கிரிக் பாட்டி” என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின் தமிழில் இயக்கினர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் 2018ல் வெளியான தெலுங்கு மற்றும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படமான “கீதா கோவிந்தம்” இவருக்கு சூப்பர் ஹிட்டை தந்தது. அதன் தொடர்ச்சியாக  பல பட வாய்ப்புகள் குவிந்தன. அதன் பிறகு ”நஷ்னல் க்ரஷ்“ என்ற பெயரும் கிடைத்தது.

Latest News