5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அட்டக்கத்தி டூ கெத்து… நடிகர் தினேஷின் வீடியோவை வெளியிட்ட ‘லப்பர் பந்து’ படக்குழு

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்தப் படமும் கிரிக்கெட்டை மையமாக வைத்தே வெளியாகியுள்ளது. முன்னதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோவாக நடித்த லால் சலாம், அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த ஆண்டு வெளியாகி உள்ளன.

அட்டக்கத்தி டூ கெத்து… நடிகர் தினேஷின் வீடியோவை வெளியிட்ட ‘லப்பர் பந்து’ படக்குழு
லப்பர் பந்து’
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Sep 2024 12:27 PM

அட்டக்கத்தி தினேஷில் இருந்து கெத்து தினேஷாக மாறிய வீடியோவை லப்பர் பந்து படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் ரஞ்சித்தின் அட்டக்கத்தி படத்தில் அறிமுகம் ஆனதன் மூலம் நடிகர் தினேஷ் அட்டக்கத்தி தினேஷ் என்ற பெயர் கிடைத்தது. அந்தப் படத்தில் ஜாலியான பையனாக சுற்றி பலரின் நாஸ்டாலஜியை தூண்டியவர் அட்டக்கத்தி தினேஷ். அந்தப் படத்தை தொடர்ந்து குக்கூ, விசாரணை இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் நடித்து, அனைத்து கதாபாத்திரங்களிலும் தனது முழுமையான நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் அட்டக்கத்தி தினேஷ். கடந்த 20-ம் தேதி இவரது நடிப்பில் வெளியான லப்பர் பந்து படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படத்திற்காக இவர் தயாராகும் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

‘கனா’, ‘எஃப்ஐஆர்’ படங்களில் இணை இயக்குநராகவும், ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் வசனகர்த்தாவுமான தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘லப்பர் பந்து’. ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் ‘வதந்தி’ புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்தப் படமும் கிரிக்கெட்டை மையமாக வைத்தே வெளியாகியுள்ளது. முன்னதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோவாக நடித்த லால் சலாம், அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த ஆண்டு வெளியாகி உள்ளன.

விளையாட்டுடன் சரியான கதையும், வசனங்களும் இடம்பெறும் படங்கள் மக்களிடையே விரைவாக சென்றுவிடும். அந்த அடிப்படையில் உருவான ‘லப்பர் பந்து’ படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகின்றது. ல ப்பர் பந்துகள் ரூ. 15-க்கு விற்பனையான ஒரு காலகட்டத்தில் படத்தின் கதை தொடங்குகிறது. கிரிக்கெட் மீது ஈடுபாடு கொண்ட சிறுவனாக அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் இருக்கும் ஹரிஷ் கல்யாண் பள்ளியை கட் அடித்துவிட்டு கிரிக்கெட் ஆட செல்கிறார். ஜாலி ஃப்ரெண்ட்ஸ் டீம் என்ற அணியில் இருக்கும் டிஎஸ்கே, தாழ்த்தப்பட்ட சாதியை காரணம் காட்டி ஹரிஷ் கல்யாணை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று கூறுகிறார். ஆனால் அந்த அணியின் கேப்டனாக இருக்கு காளி வெங்கட் என் அணி ஜெயிக்கனும் அதனால் இவன் விளையாடுவான் என்று ஹரிஷ் கல்யாணை டீமில் சேர்த்துக்கொள்கிறார். வேண்டா வெறுப்பாக இதற்கு ஒத்துக்கொள்கிறார் டிஎஸ்கே.

அப்போது நடைபெறும் போட்டியில் எதிரணியில் பெயர்போன கிரிக்கெட் ப்ளேயராக இருக்கிறார் கெத்து பூமாலை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் அட்டகத்தின் தினேஷ். விஜயகாந்த் பாட்டு பின்னணியில் ஒலிக்க கெத்து மட்டையை கையில் எடுத்தார் என்றால் எல்லா பந்தும் மைதானத்திற்கு வெளியேதான். கெத்து பயப்படும் ஒரே நபர் அவரது மனைவி. வேலைக்கு செல்வதாக சொல்லிக்கொண்டு கிரிக்கெட் விளையாட செல்கிறார் கெத்து. பெரும் பில்டப் உடன் அந்த பகுதியின் சச்சின் போல கொண்டாடப்படும் அட்டகத்தி தினேஷ் பேட்டிங்கில் வெளுத்து வாங்குகிறார். கெத்து என்கிற பூமாலையான அட்டக்கத்தி தினேஷின் பேட்டிங்கில் அவருடைய பலவீனத்தை சரியாக ஹரிஷ் கல்யாண் கணித்தாலும், அவருக்கு பவுலிங் வாய்ப்பு கிடைக்காமல் போகவே அங்கிருந்து விரக்தியுடன் கிளம்பி விடுகிறார்.

Also read… பாலியல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்? இணையத்தில் கசிந்த தகவல்

அதனை தொடர்ந்து லப்பர் பந்து ரூ. 35-க்கு விற்கப்படும் காலத்தில் கதை செல்கிறது. அட்டக்கத்தி தினேஷ் மகள் சஞ்சனாவும் ஹரிஷ் கல்யாணும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். கிரிக்கெட் போட்டி ஒன்றின் போது அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் இடையில் சின்ன  மோதல் ஏற்படுகிறது. இந்த மோதல் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி ஒரு கட்டத்தில் சண்டையில் முடிகிறது. பார்க்கிங் படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் இருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ மோதல் கடைசி வரை படத்தை பார்க்க வைத்தது போல இந்த படத்திலும் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் இடையே அந்த ஈகோ விஷயமும் பக்காவாக க்ளிக் ஆகியிருக்கிறது.

தற்பொழுது நடிகர் அட்டக்கத்தி தினேஷ் எப்படி இந்த கெத்து கதாப்பாத்திரத்திற்காக அவர் பயிற்சி செய்தார் என்பதை படக்குழு வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Latest News