5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilaga Vettri Kazhagam : திருச்சி டார்கெட்.. யாத்திரை பிளான்.. விஜய் போடும் அரசியல் பிளான்.. தீவிரமாகும் தமிழக வெற்றிக் கழகம்!

TVK leader Vijay: 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த சட்டசபைத் தேர்தல் நடைபெறும் 2026ம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார்.  அதனைத் தொடர்ந்து கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, கட்சி செயல்பாடுகள் என தொடர்ந்து வேலை செய்து வருகிறார் விஜய்.

Tamilaga Vettri Kazhagam : திருச்சி டார்கெட்.. யாத்திரை பிளான்.. விஜய் போடும் அரசியல் பிளான்.. தீவிரமாகும் தமிழக வெற்றிக் கழகம்!
விஜய்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 15 Jul 2024 16:41 PM

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகராக உலா வரும் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் தொடங்கியதையடுத்து ஒரு மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் அரசியலில் களமிறங்க உள்ளார் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், அவர் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தனது கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம்(Tamizhaga Vetri kazhagam) என்று அறிவித்தார். கட்சி பெயரில் எழுதுப் பிழை இருப்பதாக பலர் கருத்து தெரிவித்ததும் கட்சியின் பெயரினை, தமிழக வெற்றிக் கழகம் என மாற்றி அறிவித்தார்.  தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. அடுத்ததாக தளபதி 69 படத்தில் ஹெச் வினோத்துடன் விஜய் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த படங்களுடன் விஜய் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால் படங்களில் நடிப்பதை நிறுத்துவதாகவும் விஜய் தரப்பில் இருந்து தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது. விஜய் கட்சி ஆரம்பித்த  கடந்த 4 மாதங்களில் தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளுக்கு தனது எக்ஸ் தளத்தின் மூலம் அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். தொடர்ந்து அறிக்கைகள் மூலமாக மக்களிடம் பேசி வரும் விஜய் களத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும். அறிக்கையில் பேசுபவன் தலைவன் அல்ல, களத்தில் இருந்து மக்களுக்காக பேசுபவனே உண்மையான தலைவன் என்றும் பலர் விமர்சனம் செய்து வந்தனர்.

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த சட்டசபைத் தேர்தல் நடைபெறும் 2026ம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார்.  அதனைத் தொடர்ந்து கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, கட்சி செயல்பாடுகள் என தொடர்ந்து வேலை செய்து வருகிறார் விஜய்.

Also read… Sivakarthikeyan: சிவகார்த்திகேயனின் மகனின் பெயர் என்ன தெரியுமா? வெளியானது பெயர் சூட்டு விழா வீடியோ!

கடந்த ஆண்டு அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னதாகவே பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மற்றும் மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழாவை தொடங்கினார். அதே போல இந்த ஆண்டும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இது கல்வி சார்ந்ததாக உள்ள நிலையில் அடுத்ததாக அரசியல் மாநாடு பிரம்மாண்டமாக நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றி கழகம் சார்பில் ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு மற்றும் 10 மாவட்ட பொதுக் கூட்டம் நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெறலாம் என்றும் அதற்கான பணிகளும் துவங்கிவிட்டது கூறப்படுகிறது. இந்த மாநாடு என்பது வரும் செப்டம்பரில் அல்லது நவம்பரில் நடைபெறலாம் என தெரிகிறது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் 100 சட்டமன்றங்களை இணைக்கும் வகையில் விஜய் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Latest News