33 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல இயக்குநருடன் இணையும் நடிகர் ரஜினி?

New Movie Update :தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கம் கூலி திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவரும் நிலையில் இப்படத்தினை அடுத்து முக்கிய இயக்குநருடன் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது

33 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல இயக்குநருடன் இணையும் நடிகர் ரஜினி?

நடிகர் ரஜினிகாந்த்

Updated On: 

02 Dec 2024 15:18 PM

தமிழ் சினிமாவில் தனது தனிப்பட்ட நடிப்பின் மூலமாகவும், ஸ்டைல் மூலமாகவும் பல ரசிகர்களினை கவர்ந்துவருபவர் நடிக ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வேட்டையன். இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் பயங்கர வெற்றித்திரைப்படமாக இவருக்கு அமைந்தது. தற்போது இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன் பிரபல நடிகர்களான நாகார்ஜுனா , உபேந்திரா , சௌபின் ஷாஹிர் , ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் எனப் பலரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படமானது தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பிலிருந்து வருகிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படம் வருகின்ற 2025ம் ஆண்டு இடைப்பட்ட மாதத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்தினை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் இணையவுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தினை தொடர்ந்து அடுத்தாக இயக்குநர் மணிரத்னம் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நடிகர் ரஜினி நடிக்கும் திரைப்படங்கள்..

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்துவருகின்ற நிலையில் இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகின்றது. இப்படத்தில் நடிகர் ரஜினியுடன் நாகார்ஜுனா , உபேந்திரா , சௌபின் ஷாஹிர் , ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் எனப் பிரபல நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் முக்கியமான படப்பிடிப்புகள் ஹைதராபாத் ராமோஜி பிலிம்ஸ் சிட்டி பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. ஆக்ஷ்ன் த்ரில்லர் கதைக்களத்துடன் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பமான நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணியிலிருந்து வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது திரைப்படமான ‘கூலி’ வருகின்ற 2025ம் ஆண்டு இடைப்பட்ட மாதத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் இணைய உள்ளார்.

இதையும் படிங்க :புறநானூறு ஷூட்டிங் .. சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு வெளியான இனிப்பான செய்தி!

நடிகர் ரஜினியின் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகி மிகவும் பிரம்மாண்ட வெற்றி திரைப்படமாக அமைந்தது தான் ஜெயிலர். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் நடிகர்கள் விநாயகன் , ரம்யா கிருஷ்ணன் , தமன்னா பாட்டியா , வசந்த் ரவி , மிர்னா மேனன் , யோகி பாபு மற்றும் சுனில் எனப் பல பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர்.

நடிகர் ரஜினியின் மாறுபட்ட திரைக்கதையில் வெளியான இப்படம் இவருக்கு பிளாக் பஸ்டர் வெற்றியாக அமைந்த நிலையில் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கான அப்டேட்டை ரஜினியின் ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ தகவலை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது சமூக வலைதளபக்கத்தில் அறிவித்திருந்தார்.இதையடுத்து ரஜினியின் ரசிகர்களுக்கு பெரும் சர்ப்ரைஸாக இருந்த நிலையில் குஷியாக இருந்து வருகின்றன.

இயக்குநர் மணிரத்னத்தின் படத்தில் இணையும் ரஜினி?

இந்நிலையில் தற்போது ரஜினியின் அடுத்த திரைப்படத்தினை பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த திரைப்படத்தைப் பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்க உள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது.

இயக்குநர் மணிரத்தினம் தற்போது “தக் லைப்” என்ற திரைப்படத்தினை இயக்கிவரும் நிலையில், இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் உருவாகிவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி போன்ற நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : விறுவிறுப்பாக நடைபெறும் தளபதி 69 படத்தின் ஷூட்டிங் எப்போ முடியும்? இணையத்தை கலக்கும் மாஸ் அப்டேட்

இந்த திரைப்படமானது தற்போது இறுதிக்கட்ட பணியில் இருந்துவரும் நிலையில் வருகின்ற 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் உலகமெங்கும் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தினை அடுத்தாக மணிரத்னம், நடிகர் ரஜினியின் திரைப்படத்தினை இயக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் காமினேஷனில் கடைசியாக வெளியான திரைப்படம் 1991ம் ஆண்டு வெளியான “தளபதி” பிரம்மாண்ட வெற்றி திரைப்படமாக அமைந்த இப்படத்தினை அடுத்தாக சுமார் 33 ஆண்டுகளுக்குப் பிறகு இணைய உள்ள திரைப்படமாக இந்த திரைப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் இந்த திரைப்படத்தினை பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ‘தக் லைப்’ படத்தினை அடுத்து ரஜினியின் படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என்று கூறப்படும் நிலையில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க :மூன்று வார முடிவில் கங்குவா வசூலித்தது எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ

குளிர் காலத்தில் பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல வேண்டுமா?
எந்த மாதிரி பார்ட்னர் கிடைத்தால் ஓகே சொல்லலாம்?
40 வயதிற்கு பிறகு கைவிட வேண்டிய பழக்கங்கள்..!
பூண்டு சாப்பிடுவது யாருக்கு நல்லதல்ல..?