Vaazhai: ’இன்னும் வெளியே வர முடியல’ – வாழை படம் பார்த்து கலங்கிய விஜய் சேதுபதி!

Vijay Sethupathi: வாழை என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம், இயக்குநர் மாரி செல்வராஜின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது என்று கூறப்படுகிறது. வாழை திரைப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நவ்வி ஸ்டுடியோஸ் மற்றும் ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன் தயாரித்துள்ளது. திரைப்படம் வெளியானது முதலே வாழை திரைப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

Vaazhai: ’இன்னும் வெளியே வர முடியல’ - வாழை படம் பார்த்து கலங்கிய விஜய் சேதுபதி!

வாழை - விஜய் சேதுபதி

Updated On: 

29 Oct 2024 15:12 PM

விஜய் சேதுபதி பாராட்டு: பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரின் அடுத்த திரைப்படமான வாழை, கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாகி தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாழை என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம், இயக்குநர் மாரி செல்வராஜின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது என்று கூறப்படுகிறது. வாழை திரைப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நவ்வி ஸ்டுடியோஸ் மற்றும் ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன் தயாரித்துள்ளது. திரைப்படம் வெளியானது முதலே வாழை திரைப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

ALSO READ: IPL 2025: பயிற்சியாளராக யுவராஜ் சிங்! ஒப்பந்தம் போட்ட டெல்லி..? வெளியான தகவல்!

இந்தநிலையில், ’மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வாழை திரைப்படம் பார்த்துவிட்டு உணர்ச்சிகரமாக பேசிய வீடியோவை மாரி செல்வராஜ் தனது (ட்விட்டர்) எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “ எல்லாருக்கும் வணக்கம்! இப்போதுதான் மாரி செல்வராஜ் சார் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்தை பார்த்தேன். மிகவும் அற்புதமான படைப்பு. படம் முடிந்து வெளியே வந்தபிறகும், அந்த படம் முடிந்த மாதிரியே எனக்கு தோன்றவில்லை. அந்த படத்திற்குள்ளே இன்னும் இருக்கிறேன். படத்தில் பேசிய அரசியல் ஆக இருக்கட்டும், வசனமாக இருக்கட்டும், நடித்த எல்லாரும் ஆகட்டும் சிறப்பாக அமைந்திருக்கு. அந்த ஊரில் அவர்களது வாழ்க்கை முறையையில் இருந்து இன்னும் வெளியே வர முடியவில்லை.

மாரி செல்வராஜ் சார் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி. இதுமாதிரியான ஒரு வாழ்க்கையை பதிவு செய்ததற்கு.. செய்திகளில் கேட்கும்போதும், செய்தித்தாள்களில் பார்க்கும்போதும் சாதாரணமாக கடந்து போகிறோம். அதற்கு பின்னாடி இருக்கும் வாழ்க்கையை இவ்வளவு அழுத்தம் திருத்தமாக புரிய வைத்ததற்கு ரொம்ப நன்றி. எல்லாரும் தியேட்டரில் வந்து பாருங்கள், மிகவும் அற்புதமாக அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். அப்படியான ஒரு வாழ்க்கை தெரிந்து கொள்வதற்கும், நம்முடைய வாழ்க்கையின் மீது நமக்கே சில கேள்விகள் எழும் என்பதை நம்புகிறேன். படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள். நன்றி” என பேசியிருந்தார்.

ALSO READ: Vijayakanth Birthday: மறைவுக்குபின் முதல் பிறந்தநாள்..! விஜயகாந்தின் கல்வி முதல் மறைவு வரை.. முழு விவரம் இங்கே!

‘பரியேறும் பெருமாள்’ மற்றும் ‘கர்ணன்’ ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு மாரி செல்வராஜ் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் இது. இப்படத்தில் சிவனைந்தனாக பொன்வேல் எம்.சேகராக ரகுல், கனியாக கலையரசன், ஆசிரியராக சதீஷ் குமார், ஆசிரியையாக நிகிலா விமல், வேம்புவாக திவ்யா துரைசாமி, சிவனைந்தனின் தாயாக ஜானகி, பிரியங்கா நாயர், நிவேதிதா ராஜப்பன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் மற்றும் படத்தொகுப்பாளராக சூரிய பிரதமன் ஆகியோர் பணியாற்றினர். படத்தின் முழு இசை மற்றும் பின்னணி இசையை சந்தோஷ் நாராயணன் அமைத்துள்ளார்.

வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா?
தினசரி நெய் சாப்பிட்டால் என்ன ஆகும்? ஏன் சாப்பிட வேண்டும்?
நடிகை டாப்ஸி பன்னுவின் வொண்டர்ஃபுல் ஆல்பம்
டீன் ஏஜில் நடிகை மிருணாள் தாக்கூர்... வைரல் போட்டோ