5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vaazhai Movie Review: ‘வாழை’ படம் திரை விமர்சனம்.. மக்கள் மனதை கவர்ந்ததா? ட்விட்டர் ரிவியூ!

Vaazhai Twitter Review : கிராமத்து கதையம்சத்துடன் கூடிய கதையோடு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கலையரசன் கதாநாயகனாக நடிக்க, நிகிலா விமல் கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக திவ்யா துரைசாமி நடித்துள்ளார்.

Vaazhai Movie Review: ‘வாழை’ படம் திரை விமர்சனம்.. மக்கள் மனதை கவர்ந்ததா? ட்விட்டர் ரிவியூ!
வாழை படம் விமர்சனம்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 23 Aug 2024 09:02 AM

வாழை விமர்சனம்: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள படம் வாழை. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களை போலவும் வாழை படத்திலும் மிகப்பெரிய அரசியலை தனது வாழ்வில் நடந்த துயரச் சம்பவத்துடன் சேர்த்து பேசியிருக்கும் மாரி செல்வராஜின் இந்த படம் எப்படி இருக்கிறது என்பதனை முன்னதாக சிறப்புக் காட்சி பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு வெளியான, மாமன்னன் படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாழை’. கிராமத்து கதையம்சத்துடன் கூடிய கதையோடு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கலையரசன் கதாநாயகனாக நடிக்க, நிகிலா விமல் கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக திவ்யா துரைசாமி நடித்துள்ளார்.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்தன. படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 8, 9 வயது பையனிடம் இருக்கும் நட்பு, காதல், வலி என அனைத்து உணர்வுகளையும், இந்தப் படத்தின் மூலம் மாரி செல்வராஜ் வெளிக்கொண்டுவந்து இருக்கிறார் என படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Latest News