5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விடுதலை 2… டப்பிங் பணியை தொடங்கியது படக்குழு!

படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தெரிவித்து புதிய போஸ்டரையும் படக்குழு ஏற்க்கனவே வெளியிட்டது. இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனமும் ஆர் எஸ் போடெயின்மென்ட் நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

விடுதலை 2… டப்பிங் பணியை தொடங்கியது படக்குழு!
விடுதலை 2
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Oct 2024 14:14 PM

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை பாகம் 2 படத்தின் டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளதாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான  திரைப்படம் ‘விடுதலை’.  நடிகர் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன்,  உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி சச்கைபோடு போட்ட திரைப்படம் விடுதலை. எல்ரெட் குமார் தயாரிப்பில் இளையராஜா இசையில் உருவான இப்படம் காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சினை  மிகவும் வெளிப்படையாக பேசி இருந்தது. நடிகர் சூரி இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் மட்டுமே பயனித்து வந்த நடிகர் சூரி, முதல் முறையாக ஒரு ஆக்சன் ஹீரோவாக உருவான திரைப்படம் இது தான். தொடர்ந்து முதன்மை கதாபாத்திரங்கள் அவருக்கு கிடைத்து வருகின்றன. விடுதலை ஒன்று மற்றும் இரண்டாம் பாகங்களில் கதையின் நாயகனாக நடித்துள்ள சூரி, கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்தின் இரண்டாவது படம் கொட்டுக்காளியிலும் கதையின் நாயகனாக நடித்துள்ளார். அத்துடன், ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நிவின்பாலியுடன் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சூரி நாயகனாக நடித்த கருடன் படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடதக்கது.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது விடுதலை திரைப்படம். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இப்படம் இரு மொழிகளிலுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. 1987ஆம் ஆண்டு பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், பிரிவினைவாதக் குழுவின் தலைவரைக் கைதுசெய்வதற்காக நியமிக்கப்பட்ட கான்ஸ்டபிளை மையமாக வைத்து இருந்தது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

Also read… கோட் VS வேட்டையன்… முதல் நாள் வசூலில் யார் முந்தியது தெரியுமா?

விடுதலைப் படத்தின் முதல் பாக ரிலீசுக்கு பிறகு, உடனே இரண்டாம் பாக பணிகள் தொடங்கியிருந்தாலும், சில காரணங்களால் அந்த படம் உருவாவது தொடர்ந்து தள்ளிப்போனது. இந்நிலையில் இறுதிக்கட்டத்தை அப்படம் எட்டியுள்ளது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். முன்னதாக படத்தின் போஸ்டர்களை கடந்த ஜூலை மாதம் படக்குழு வெளியிட்டது. போஸ்டரில் கையில் ஆயுதத்துடன் ஆக்ரோஷமான தோற்றத்தில் விஜய் சேதுபதி ஓடி வருவது போன்றும், மற்றொரு போஸ்டரில் விஜய் சேதுபதியும், மஞ்சு வாரியரும் இருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ’வீரமும் காதலும்’ என்ற ஹாஸ்டேக் போட்டு படக்குழுவினர் பகிர்ந்தனர்.

Also read… Bigg Boss Tamil Season 8: மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த சாச்சனா… அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

அதன்படி படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தெரிவித்து புதிய போஸ்டரையும் படக்குழு ஏற்க்கனவே வெளியிட்டது. இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனமும் ஆர் எஸ் போடெயின்மென்ட் நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. தயாரிக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், நடிகர் எஸ்.ஜே.சூர்யா விடுதலை – 2 பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்பொழுது விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகிய இருவரும் இணைந்து விடுதலை 2 படத்திற்கான டப்பிங் பணிகளை துவங்கியுள்ளனர். இந்தப் படத்தின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Latest News