5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vettaiyan Review: ரஜினியின் வேட்டையன் மிரட்டலா? சொதப்பலா? – விமர்சனம் இதோ!

Rajinikanth: கோலிவுட்டின் நம்பர் ஒன் என்ற இடத்துக்கு சொந்தக்காரரான ரஜினி கடந்த சில ஆண்டுகளாக வருடத்துக்கு ஒரு படம் என கொடுத்து வருகிறார். அந்த வகையில் ஜெய் பீம் படம் மூலம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தையும், பாராட்டையும் பெற்ற த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

Vettaiyan Review: ரஜினியின் வேட்டையன் மிரட்டலா? சொதப்பலா? – விமர்சனம் இதோ!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 10 Oct 2024 06:56 AM

வேட்டையன் விமர்சனம்:  நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், அவரின் 170வது படமாக வெளியாகியுள்ள வேட்டையன் படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப 73 வயதிலும் இளமை துள்ளலுடன் ரஜினிகாந்த் திரையில் தன்னுடைய மகத்தான பங்களிப்பை அளித்து வருகிறார். கோலிவுட்டின் நம்பர் ஒன் என்ற இடத்துக்கு சொந்தக்காரரான ரஜினி கடந்த சில ஆண்டுகளாக வருடத்துக்கு ஒரு படம் என கொடுத்து வருகிறார். அந்த வகையில் ஜெய் பீம் படம் மூலம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தையும், பாராட்டையும் பெற்ற த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்தில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ராணா டகுபதி, ஃபஹத் ஃபாசில், ரித்திகா சிங், கிஷோர் குமார், அபிராமி, ரோகிணி, ஜி.எம்.சுந்தர் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர், டீசர் ஆகியவைகளும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படியான நிலையில் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து படத்துக்கான ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ரஜினி படம் வெளியாகிறது என்றாலே அவரது ரசிகர்களுக்கு திருவிழா தான். அப்படியிருக்கும் போது வேட்டையன் என்றால் சும்மாவா இருப்பார்கள்.


வண்ண விளக்குகள், அலங்கார தோரணங்கள், மேள தாளங்கள், போஸ்டர், பேனர், கட் அவுட்கள் என தியேட்டர் மட்டுமல்ல மக்களின் மனநிலை அதிரும் அளவுக்கு மிரட்டியுள்ளனர். பல ஊர்களிலும் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு படம் வெளியாகியுள்ளதால் அடுத்த 4 நாட்களுக்கு வசூலை வாரிக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில் வேட்டையன் படம் தமிழ்நாட்டில் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் திரையிடப்படுகிறது. அதேசமயம் கர்நாடகாவில் அதிகாலை 4  மணிக்கும், கேரளாவில் 7 மணிக்கும் முதல் காட்சி திரையிடப்பட்டது. இதனால் மாநில எல்லையில் உள்ள ரசிகர்கள் கேரளா, கர்நாடகாவில் உள்ள தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அதிகாலை 4 மணி காட்சி பார்த்தவர்கள் தங்களுடைய விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் சில பதிவுகள் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

Latest News