அரசு சொத்தை விலை பேசினேனா? விக்னேஷ் சிவன் விளக்கம்!
விக்னேஷ் சிவன் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். இவருடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகை கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் புதுச்சேரியில் உள்ள அரசுக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றை விலைக்கு கேட்டதாக தகவல்கல் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதுகுறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். நடிகர்கள் சிம்பு மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன். அதனை தொடர்ந்து தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் விக்னேஷ் சிவன். கடந்த 2015-ம் ஆண்டும் தனது இரண்டாவது படமான நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். இந்தப் படத்தில் நாயகனாக விஜய் சேதுபதியும், நாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் தாணா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை இயக்கினார். மேலும் நானும் ரௌடிதான் படத்தினால் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறி இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
Also read… ஆண்டாள் கோவில் கருவறைக்குள் சென்ற இளையராஜாவை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
விக்னேஷ் சிவன் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். இவருடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகை கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் நடிக்கின்றனர். ரௌடி பிக்ஷர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
Also read… அல்லு அர்ஜுனை கைது செய்தது நியாயமே இல்லை – நடிகர் சரத்குமார் காட்டம்
படங்களை இயக்குவது மட்டும் இன்றி பாடல்கள் எழுதுவதிலும், படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. படங்களில் பிசியாக வேலை செய்து வரும் விக்னேஷ் சிவன் குறித்தும் அவரது மனைவி குறித்தும் சமீப காலமா தொடர்ந்து சர்ச்சைகள் உலா வருகின்றது.
இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் புதுச்சேரியில் உள்ள அரசு ஹோட்டல் ஒன்றை விலைக்கு கேட்டதாக செய்தி ஒன்று இணையத்தில் பரவத் தொடங்கியது. இதனை தொடர்ந்து சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பலர் அவரை ட்ரோல் செய்து மீம்ஸ்களை தெரிக்கவிட்டனர்.
View this post on Instagram
இந்த நிலையில் இதுகுறித்து தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றை நான் விலைக்கு கேட்டதாக பரவிவரும் முட்டாள்தனமான செய்திக்கு விளக்கம் கொடுக்க விரும்புகிறேன். எனது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் படப்பிடிப்பிற்காக புதுச்சேரி விமான நிலையத்தை பார்க்க அங்கு சென்றேன்.
அப்போது மரியாதை நிமிர்த்தமாக முதலமைச்சரையும், சுற்றுலாத் துறை அமைச்சரையும் நேரில் சென்று பார்த்தேன். அந்த நேரத்தில் என்னுடன் வந்த மேனேஜர் ஒருவன் ஹோட்டலை விலைக்கு வாங்குவது குறித்து அமைச்சரிடம் பேசினார். அதை நான் பேசியதாக என்னுடன் இணைத்துவிட்டார்கள். இதுதொடர்பாக வெளியான மீம்ஸ்கள் அனைத்தும் நல்லா வேடிக்கையாதான் இருந்தது. ஆனால் அதெல்லாம் தேவையற்றது என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.