சிவப்பு மஞ்சள் நிறம்.. அஜித் கார் ரேஸ்.. ஸ்பெயின் கொடி நிறத்தால் குஷியான விஜய் ரசிகர்கள்!

Vijay - Ajithkumar: அஜித் பயன்படுத்தவுள்ள காரின் புகைப்படம் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியிருந்தது. அதன்படி துபாயில் நடக்கவுள்ள மிச்செலின் 24H பந்தயத்தில் அவர் Porsche 992 GT3 என்ற ரேஸ் காரை பயன்படுத்தவுள்ளார்.

சிவப்பு மஞ்சள் நிறம்.. அஜித் கார் ரேஸ்.. ஸ்பெயின் கொடி நிறத்தால் குஷியான விஜய் ரசிகர்கள்!

அஜித் - விஜய்

Published: 

28 Nov 2024 16:04 PM

கார் ரேஸில் அஜித்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள அஜித்குமார் மீண்டும் கார் பந்தயத்தில் களமிறங்க உள்ள  தகவல் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரையுலகினரையும் ஆச்சரியத்திலும் எதிர்பார்ப்பிலும் ஆழ்த்தியுள்ளது. கார் மற்றும் பைக் பந்தயங்களில் மிகப்பெரிய ஆர்வம் கொண்ட அஜித்குமார் சினிமாவுக்கு வருவதற்கு முன்பும் சரி, வந்த பின்னரும் சரி தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதுதொடர்பாக பல பந்தயங்களில் பங்கேற்றுள்ளார். இதில் கலந்து கொண்டதால் ஏற்பட்ட விபத்துகளில் காயம் ஏற்பட்டு உடலில் பல இடங்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் உடல்நலத்தை கருத்தில் கொண்டு சில ஆண்டு காலமாக  பந்தயங்களில் பங்கேற்பதை அஜித் தவிர்த்து வந்தார். அதே சமயம் படங்களில் அவர் கார்,பைக் ஓட்டுவது போன்ற காட்சிகள் வந்தால் புல்லரிக்கச் செய்யும் அளவுக்கு தன்னுடைய திறமையை அதில் காட்டியிருப்பார்.

Also Read: கார் ரேஸ் பயிற்சியில் நடிகர் அஜித்… இணையத்தை தெறிக்கவிடும் போட்டோஸ்!

விறுவிறுப்பாக வெளியான அப்டேட்

இந்த நிலையில் தான் நடிகர் அஜித் மீண்டும் கார் பந்தயத்தில் கலந்து கொள்ளப் போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் வண்ணம் ஸ்பெயின் நாட்டிலுள்ள சர்க்யூட் டி பார்சிலோனா கேடலூனியாவில் நடைபெற்ற கார் பந்தய பயிற்சியில் அவர் கலந்து கொண்டார். இதனையடுத்து அடுத்ததாக கார் பந்தயத்திற்கு தயாராகி வருவதாக கடந்த மாதம் தெரிவித்தார்.

விரைவில் துபாயில் நடைபெறவுள்ள 24H Dubai 2025 & The European 24H Series Championship கார் ரேஸில் நடிகர் அஜித்குமார் பங்கேற்க உள்ளார். இந்த கார் பந்தயத்திற்கு ரெடியாகும் வகையில் அஜித்குமார் மற்றும் அவரது அணியினர் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த கார் பந்தயத்தில் பயன்படுத்தப்படும் கார், ஹெல்மெட் ஆகியவற்றில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவும் இடம் பெற்றுள்ளது. இதுதொடர்பாக துணை முதலமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அஜித்தைப் பாராட்டியிருந்தார்.

மேலும் கார் அஜித் தான் அணியின் உரிமையாளராகவும், தலைமையும் தாங்குகிறார். இந்நிலையில் அஜித் பயன்படுத்தவுள்ள காரின் புகைப்படம் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியிருந்தது. அதன்படி துபாயில் நடக்கவுள்ள மிச்செலின் 24H பந்தயத்தில் அவர் Porsche 992 GT3 என்ற ரேஸ் காரை பயன்படுத்தவுள்ளார்.இந்த வகை காரானது Porsche ரேஸிங் சீரிஸ் கார் வகைகளில் உயர் ரகத்தைச் சேர்ந்ததாகும். இந்த கார் மீது அஜித்குமார் ரேஸிங் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும் வெள்ளை நிறத்தில் இருக்கும் காரில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

Also Read: Ajith Kumar: அஜித் பங்கேற்கும் கார் ரேஸ் எப்போது? எங்கு பார்க்கலாம்.. தேதி வாரியாக விவரம்!

வரும் டிசம்பர் 17–18 ஆகிய தேதிகளில் நடைபெறும் ட்ராக் டேஸ் துபாய் ஆட்டோட்ரோம், 2025 ஆம் ஆண்டு ஜனவரி 10–12 வரை நடைபெறும் மிச்செலின் 24H துபாய் மற்றும் ஜனவரி 18–19 ஆகிய தேதிகளில் நடைபெறும்
மிச்செலின் 6H அபுதாபி ஆகிய பந்தயங்களிலும் அஜித் பங்கேற்கவுள்ளார். இந்த பந்தயத்தை 24H SERIES YouTube, Servus TV On ஆகிய இணையதள சேனல்கள் வழியாக காணலாம்.

மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்

இந்நிலையில் அஜித் பயன்படுத்த உள்ள காரில் இடம் பெற்றுள்ள மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம் விஜய் ரசிகர்களையும் தமிழக வெற்றிக்கழகத் தொண்டர்களையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. காரணம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் நடிகர் அஜித்தின் நெருங்கிய நண்பருமான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக கட்சி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்தக் கட்சியின் கொடி ஆகஸ்ட் 22ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. கட்சிக் கொடியானது மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது தமிழக வெற்றி கழகத்திற்கான நடிகர் அஜித்தின் மறைமுக ஆதரவு என விஜய்யின் ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழக தொண்டர்களும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஸ்பெயின் நாட்டு கொடி 

ஆனால் நடிகர் விஜய் பயன்படுத்தும் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியின் நிறமானது ஸ்பெயின் நாட்டின் தேசிய கொடியில் உள்ள நிறமாகும். இதனால் தமிழக வெற்றிக் கழகம் கொடி அறிமுகம் செய்யப்பட்ட நாளில் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. ஸ்பெயின் கொடியானது 1785 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டின் 3 ஆம் சார்லஸ் அவர்களால் தேர்வு செய்யப்பட்ட இந்த கொடி கடற்படை அதிகாரியான அந்தோனியா வால்டஸ் ஒய் பசான் என்பவரால் வடிவமைக்கப்பட்டதாகும்.

இந்தக் கொடிதான் 1785 ஆம் ஆண்டு கால கட்டத்தில் கடற்படை கொடியாக இருந்தது. 1931 காலக்கட்டத்தில் கொடியின் வண்ணம் அப்படியே இருக்க நடுவில் இருந்த லோகோ மற்றும் மாற்றப்பட்டது. ஸ்பெயின் கொடியில் மேலும் கீழும் சிவப்பு நிறம் மற்றும் நடுவில் மஞ்சள் நிறம் இருப்பது போல் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியிலும் இடம் பெற்றதுதான் இத்தகைய கலவரங்களுக்கு காரணமாக  அமைந்தது என்பது  குறிப்பிடத்தக்கது.

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லதா?
கொய்யா இலை தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?
பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பர்களாவது எப்படி?
பறக்கும்போது தூங்கும் பறவைகள் என்னென்ன தெரியுமா?