கோட் VS வேட்டையன்… முதல் நாள் வசூலில் யார் முந்தியது தெரியுமா? - Tamil News | Vijay goat movie and Rajinikanth Vettaiyan first day collection details viral on social media | TV9 Tamil

கோட் VS வேட்டையன்… முதல் நாள் வசூலில் யார் முந்தியது தெரியுமா?

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினி நடித்துள்ள 'வேட்டையன்' ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று வெளியானது. இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தவறு செய்தால், என்கவுண்டர் தான் ஒரே தீர்ப்பு என்று நினைக்கும் ரஜினி, என்கவுண்டரே இருக்க கூடாது என்று போராடும் அமிதாப் இருவருக்கும் நடக்கும் மோதல் படத்தின் கதை.

கோட் VS வேட்டையன்... முதல் நாள் வசூலில் யார் முந்தியது தெரியுமா?

கோட், வேட்டையன்

Published: 

11 Oct 2024 13:03 PM

நடிகர்கள் விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் ரஜினியின் நடிப்பில் வெளியான வேட்டையன் என இந்த படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் ஆகிய படங்களை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் நேற்று 10-ம் தேதி வெளியான படம் ‘வேட்டையன்’. இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் முதல் நாள் வசூலும் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி வெளியான கோட் படத்தின் முதல் நாள் வசூலிலும் யார் முந்தியது என்பது குறித்து பார்க்கலாம்.

விஜய் தீவிர அரசியலில் களம் இறங்க உள்ள விஜய் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருந்ததால் இந்த படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள தி கோட் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறது. விஜய் இந்தப் படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது.. தமிழ் நாட்டில் மட்டும் படம் கிட்டத்தட்ட 1,100 திரையரங்குகளில் சோலோவாக ரிலீஸ் ஆனது. இந்தியா முழுவது, சுமார் 5 ஆயிரம் ஸ்க்ரீன்களில் ரிலீஸ் ஆனது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள தி கோட் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறது.

Also read… Bigg Boss Tamil Season 8: மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த சாச்சனா… அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

நீண்ட நாட்களாக சீரியஸான ரோல்களில் தோன்றி வந்த விஜய் இந்தப் படத்தில் காதல், காமெடி, கிண்டல், எமோஷன், சைலன்ட், டான்ஸ், டயலாக் டெலிவரி என தெறிக்கவிட்டுள்ளார். டான்ஸ், டயலாக் டெலிவரி என தெறிக்கவிட்டுள்ளார். குறிப்பாக விஜயின் ஸ்கிரீன் பிரசன்ஸ் என அனைத்தும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு கூஸ்பம்சாக இருக்கிறது.

Also read… ’மெய்யழகன்’ படத்திலிருந்து ‘போறேன் நான் போறேன்’ பாடலின் லிரிக்கள் வீடியோ இதோ

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று வெளியானது. இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தவறு செய்தால், என்கவுண்டர் தான் ஒரே தீர்ப்பு என்று நினைக்கும் ரஜினி, என்கவுண்டரே இருக்க கூடாது என்று போராடும் அமிதாப் இருவருக்கும் நடக்கும் மோதல் படத்தின் கதை. துஷாரா விஜயன் சென்னையில் ஒரு வேலை வருகிறார். அப்படி வந்த இடத்தில், அசல் கோளாரால் கொலை செய்யப்பட, ரஜினி, அசல் கோளாரை என்கவுண்டர் செய்யப்படுகிறார். பின் அவன் நல்லவன் என்பது தெரியவர, துஷாராவை கொன்றது யார் என்ற தேடுதலை ரஜினி தொடங்க அதன் பின் என்ன ஆனது என்பது தான் படத்தின் கதை.

இந்த நிலையில் விஜயின் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் உலகளவில் தற்போது வரை ரூ.455 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்தப் படம் வெளியான முதல் நாள் 126 கோடியை வசூலித்ததாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் நேற்று ரஜினியின் நடிப்பில் வெளியான வேட்டையன் படம் முதல் நாள் வசூல் 72 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை ஒப்பிட்டு பார்க்கும் போது விஜயின் கோட் படம் தான் அதிக வசூலித்ததாக இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

மன அழுத்தம் குறைய இதை செய்யுங்கள்!
இரவு உணவை தாமதமாக சாப்பிட்டால் என்னாகும்?
செரிமானத்தை மேம்படுத்த வேண்டுமா ? அப்போ இதை பாலோ பண்ணுங்க
மோகன் லால் உடன் இருக்கும் இந்த சிறுமி யார்?
Exit mobile version