’தளபதி 69’ படப்பிடிப்பின் இடையே ராணுவ வீரர்களை சந்தித்த விஜய்!

Thalapathy 69: விஜயின் இறுதிப் படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கவுள்ளார். விஜயின் 69-வது படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படமாகும். இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பாபி தியோல், மமிதா பைஜு,  நரேன் உள்ளிட்டோர் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

’தளபதி 69’ படப்பிடிப்பின் இடையே ராணுவ வீரர்களை சந்தித்த விஜய்!

விஜய்

Published: 

09 Nov 2024 17:25 PM

நடிகர் விஜய் ‘தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு இடையே ராணுவ வீரர்களை சந்தித்த நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கோலிவுட்டில் கோடிக்கணக்கான ரசிகர்களோடு உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். முன்னதாக அவருடைய ’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிக மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. கடந்த மாதம் 5-ம் தேதி விஜய் நடிப்பில் அவரது 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. விஜய் இந்தப் படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். பிரபல ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25-வது படமாக கோட் படம் உருவானது. 

தீவிர அரசியலில் களம் இறங்க உள்ள விஜய் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருந்ததால் இந்த படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், வைபவ் , பிரேம்ஜி அஜ்மல் அமீர், மோகன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரிதிருந்தார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நீண்ட நாட்களாக தொடர்ந்து சீரியஸான கேரக்டர்களில் நடித்து வந்த விஜய் இந்தப் படத்தில் காமெடி, காதல், கிண்டல், சைலன்ட், டான்ஸ், எமோஷன், டயலாக் டெலிவரி என மாஸ் காட்டியுள்ளாட். டான்ஸ், டயலாக் டெலிவரி என தெறிக்கவிட்டுள்ளார். குறிப்பாக விஜயின் ஸ்கிரீன் பிரசன்ஸ் என அனைத்தும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு கூஸ்பம்சாக இருந்தது.

நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்த நிலையில் அவரது கடைசி படமான தளபதி 69 படத்துடன் அவர் நடிப்பதில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்துள்ளார்.  இதனால் தளபதி 69 படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Also read… மெழுகு டோலு நீ… நடிகை மாளவிகா மோகனனின் நியூ போட்டோஸ்

விஜயின் கடைசி படமான ‘தளபதி 69’ படம் குறித்த அறிவிப்பு வீடியோ முன்னதாக வெளியாகி ரசிகர்களை எமோஷனல் ஆக்கியது. தளபதிக்கு பிரியா விடை கொடுக்க காத்திருக்கும் அவர்களுடைய திரையுலக ரசிகர்கள் சார்பாக, 5 நிமிடங்கள் ஓடும் ஒரு நெகிழ்ச்சியான காணொளியை அந்த தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அது இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் விஜயின் இறுதிப் படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கவுள்ளார். விஜயின் 69-வது படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படமாகும். இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பாபி தியோல், மமிதா பைஜு,  நரேன் உள்ளிட்டோர் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Also read… ஜெயம் ரவியின் ‘ப்ரதர்’ படத்திலிருந்து வெளியானது ஸ்னீக் பீக்!

கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர் வருகிறார்” என்று குறிப்பிட்டு படத்தை எச்.வினோத் இயக்க உள்ளதையும் இதற்கு அனிருத் இசையமைக்க உள்ளதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்தப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் படப்பிடிப்பிற்கு ப்ரேக் எடுத்துவிட்டு தனது கட்சி மாநாட்டில் கலந்துகொண்டார் விஜய். தற்போது தீபாவளி பண்டிகை விடுமுறையை முடித்துவிட்டு படக்குழு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது சென்னையில் உள்ள ராணுவ வீரர்களின் பயிற்சி அகடமியில் தற்போது படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. அங்கு விஜய் ராணுவ அதிகாரிளை சந்தித்த புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வருகின்றது.

மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்