5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Maharaja Movie BTS : மகாராஜாவாக விஜய் சேதுபதி மாறியது இப்படித்தான்.. வீடியோ வெளியிட்ட படக்குழு!

Vijay Sethupathi: பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்த எங்கேஜிங்கான திரைக்கதையில் பேசிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. கடந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் தமிழில் வெளியாகாத நிலையில், தொடர்ந்து தியேட்டருக்கு ரசிகர்களை மகாராஜா வரவழைத்து வருகிறது. இந்நிலையில், படம் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில் உலகம் முழுவதும் ரூ.81.8 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Maharaja Movie BTS : மகாராஜாவாக விஜய் சேதுபதி மாறியது இப்படித்தான்.. வீடியோ வெளியிட்ட படக்குழு!
‘மகாராஜா’ படம்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 27 Jun 2024 11:20 AM

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் உருவான விதம் குறித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்த எங்கேஜிங்கான திரைக்கதையில் பேசிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. கடந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் தமிழில் வெளியாகாத நிலையில், தொடர்ந்து தியேட்டருக்கு ரசிகர்களை மகாராஜா வரவழைத்து வருகிறது. இந்நிலையில், படம் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில் உலகம் முழுவதும் ரூ.81.8 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. விஜய் சேதுபதியின் 50-வது படம் கடந்த  14-ம் தேதி அன்று  திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நிதிலன் சாமிநாதன் இயக்யுள்ளார். படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர்.

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அஜனீஷ் லோகநாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படம் விமர்சன ரீதியாக வெற்றியைப் பெற்றது மட்டும் இல்லாமல், வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆஃபீசில் கலக்கிக் கொண்டு உள்ளது. உலகம் முழுவதும் 2000 திரையரங்குகளில் வெளியானது மகாராஜா படம். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான இத்திரைப்படம் வெளியாகி 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.55.8 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. விஜய் சேதுபதி நாயகனாக நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில், தற்போது இந்தப் படம் அவரது ‘கம்பேக்’ஆக அமைந்துள்ளது. இப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் நிலையில் இந்த வசூல் மாபெறும் வசூலாக அமைந்துள்ளது.

சலூன் நடத்திக் கொண்டிருக்கும் விஜய்சேதுபதி, தனது மனைவி விபத்து ஒன்றில் இறந்துவிட, மகள் ஜோதியுடன் வசித்து வருகிறார். மகள் ஜோதி ஒரு நாள் வெளியூர் சென்றுவிட, வீட்டில் தனியாக இருக்கும் விஜய்சேதுபதி, காதில் அடிபட்டு கை கால்களில் வெட்டு காயங்களுடன் போலீஸ் நிலையத்திற்கு வந்து வீட்டில் இருந்த லட்சுமியை காணவில்லை என புகார் கொடுக்கிறார். போலீசார் லட்சுமி யார் என்று கேட்க, அது யார் என்று சொல்லமுடியாமல் விஜய்சேதுபதி திணறினார், ஒரு வழியாக லட்சுமி யார் என்ற உண்மையை சொல்ல, கடுப்பாகும் போலீசார் இதற்கெல்லாம் கேஸ் கொடுக்க முடியாது எனத் தட்டிக் கழிக்கின்றனர். படம் குறித்து மக்கள் நல்ல விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Also read… பிரபாஸின் ’கல்கி 2898 AD’ படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

இந்நிலையில், மகாராஜா திரைப்படம் உருவான விதம் குறித்து படக்குழுவினர் பிடிஎஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest News