5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Maharaja: விஜய்சேதுபதி படத்துக்கு கிடைத்த அங்கீகாரம்.. கொண்டாடும் ரசிகர்கள்!

Vijay Sethupath: நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய மகாராஜா படம் விஜய் சேதுபதியின் 50வது படமாகும். இந்த படத்தில் அனுராக் காஷ்யப், சிங்கம் புலி, நட்டி, திவ்ய பாரதி, அபிராமி, அருள்தாஸ், முனீஸ்காந்த், பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மகாராஜா படத்தை தி ரூட், திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்தது.

Maharaja: விஜய்சேதுபதி படத்துக்கு கிடைத்த அங்கீகாரம்.. கொண்டாடும் ரசிகர்கள்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 29 Oct 2024 15:12 PM

மகாராஜா படம்: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் மகாராஜா மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளது. கடந்த ஜூன் 14 ஆம் தேதி இப்படம் தியேட்டரில் வெளியானது. நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய மகாராஜா படம் விஜய் சேதுபதியின் 50வது படமாகும். இந்த படத்தில் அனுராக் காஷ்யப், சிங்கம் புலி, நட்டி, திவ்ய பாரதி, அபிராமி, அருள்தாஸ், முனீஸ்காந்த், பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மகாராஜா படத்தை தி ரூட், திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்தது. இதனைத் தொடர்ந்து மகாராஜா படம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஓடிடியில் வெளியானது.

இதையும் படிங்க: Mari Selvaraj: மாரிசெல்வராஜின் சொந்த வாழ்க்கை.. வாழை படம் கதை இதுதான்!

ஓடிடியில் வெளியானது முதல் இப்படம் மிகப்பெரிய அளவில் சாதனைப் படைத்து வருகிறது. உள்ளூர் முதல் உலக நாடுகளில் பல பார்வையாளர்களும் மஹாராஜா படத்தை மற்றவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என பரிந்துரை செய்யும் அளவுக்கு புகழ்பெற்றது. அதுமட்டுமல்லாமல் 2024 ஆம் ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் வரிசையில் தமிழ்  சினிமாவில் இருந்து மகாராஜா மட்டுமே டாப் 10 வரிசையில் அதுவும் முதல் இடத்தில் இடம் பெற்றுள்ளது. இதனை விஜய் சேதுபதி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

அது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என திரையுலகிலும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் மகள் பாதிக்கப்பட, குற்றவாளிகளை அப்பா தண்டிக்கும் செயல் தான் மகாராஜா படத்தின் அடிப்படை கரு என்ற நிலையில் நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு இதுவே சரியான தண்டனை என பலரும் இந்த படத்தின் காட்சிகளை பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Chennai: சுத்தமாகும் நகரம்… சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவானார். ஹீரோ, பாடகர், தயாரிப்பாளர், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் என 14 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்துள்ள அவர், விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Latest News