வசூலில் கலக்கும் மகாராஜா படம்… ஓடிடி ரிலீஸ் எப்போது?
Maharaja Movie Ott: படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அஜனீஷ் லோகநாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மகாராஜா படம் 10 நாட்களில் பல கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் சேதுபதியின் 50-வது படம் கடந்த 14-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நிதிலன் சாமிநாதன் இயக்யுள்ளார். படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அஜனீஷ் லோகநாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
சலூன் நடத்திக் கொண்டிருக்கும் விஜய்சேதுபதி, தனது மனைவி விபத்து ஒன்றில் இறந்துவிட, மகள் ஜோதியுடன் வசித்து வருகிறார். மகள் ஜோதி ஒரு நாள் வெளியூர் சென்றுவிட, வீட்டில் தனியாக இருக்கும் விஜய்சேதுபதி, காதில் அடிபட்டு கை கால்களில் வெட்டு காயங்களுடன் போலீஸ் நிலையத்திற்கு வந்து வீட்டில் இருந்த லட்சுமியை காணவில்லை என புகார் கொடுக்கிறார். போலீசார் லட்சுமி யார் என்று கேட்க, அது யார் என்று சொல்லமுடியாமல் விஜய்சேதுபதி திணறினார், ஒரு வழியாக லட்சுமி யார் என்ற உண்மையை சொல்ல, கடுப்பாகும் போலீசார் இதற்கெல்லாம் கேஸ் கொடுக்க முடியாது எனத் தட்டிக் கழிக்கின்றனர். படம் குறித்து மக்கள் நல்ல விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மகாராஜா திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து கடந்த வாரம் சென்னையில் சக்சஸ் மீட் நடைபெற்றது. இதில் விஜய்சேதுபதி, மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், , சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Also read… முதியவரை தள்ளிவிட்ட விவகாரம்… மன்னிப்பு கோரிய நாகர்ஜூனா!
உலகம் முழுவதும் 2000 திரையரங்குகளில் வெளியானது மகாராஜா படம். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான இத்திரைப்படம் வெளியாகி 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.55.8 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. விஜய் சேதுபதி நாயகனாக நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில், தற்போது இந்தப் படம் அவரது ‘கம்பேக்’ஆக அமைந்துள்ளது. இப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் நிலையில் இந்த வசூல் மாபெறும் வசூலாக அமைந்துள்ளது.
இந்நிலையில், மகாராஜா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிக்ஸ் வாங்கி உள்ளதால், இப்படம் நெட்ஃபிக்ஸ் தளத்தில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.