5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

10 – நாட்களில் இத்தனை கோடிகளா? மகாராஜா கலெக்‌ஷனை வெளியிட்ட படக்குழு

Maharaja Movie Collection: பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்த எங்கேஜிங்கான திரைக்கதையில் பேசிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. கடந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் தமிழில் வெளியாகாத நிலையில், தொடர்ந்து தியேட்டருக்கு ரசிகர்களை மகாராஜா வரவழைத்து வருகிறது. இந்நிலையில், படம் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில் உலகம் முழுவதும் ரூ.81.8 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

10 – நாட்களில் இத்தனை கோடிகளா? மகாராஜா கலெக்‌ஷனை வெளியிட்ட படக்குழு
மகாராஜா
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Jun 2024 11:13 AM

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 14-ம் தேதி வெளியான ‘மகாராஜா’ படத்தின் 10 நாள் வசூல் நிலவரத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ள படம் ‘மகாராஜா’. விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அனுராக் காஷ்யப் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரைத் தவிர்த்து, நட்டி, சிங்கம் புலி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, முனிஷ்காந்த், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திரையரங்கில் வெளியான மகாராஜா திரைப்படம் தற்போது வரை வசூல் ரீதியாக சக்கை போடு போட்டு வருகிறது. இதுவரை எத்தனை கோடிகள் வசூலித்துள்ளது என படக்குழு வெளியிட்டுள்ளது.

சலூன் நடத்திக் கொண்டிருக்கும் விஜய்சேதுபதி, தனது மனைவி விபத்து ஒன்றில் இறந்துவிட, மகள் ஜோதியுடன் வசித்து வருகிறார். மகள் ஜோதி ஒரு நாள் வெளியூர் சென்றுவிட, வீட்டில் தனியாக இருக்கும் விஜய்சேதுபதி, காதில் அடிபட்டு கை கால்களில் வெட்டு காயங்களுடன் போலீஸ் நிலையத்திற்கு வந்து வீட்டில் இருந்த லட்சுமியை காணவில்லை என புகார் கொடுக்கிறார். போலீசார் லட்சுமி யார் என்று கேட்க, அது யார் என்று சொல்லமுடியாமல் விஜய்சேதுபதி திணறினார், ஒரு வழியாக லட்சுமி யார் என்ற உண்மையை சொல்ல, கடுப்பாகும் போலீசார் இதற்கெல்லாம் கேஸ் கொடுக்க முடியாது எனத் தட்டிக் கழிக்கின்றனர். படம் குறித்து மக்கள் நல்ல விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Also read… ‘லிங்கா’ பட நாயகிக்கு டும் டும் டும்… வைரலாகும் போட்டோஸ்!

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்த எங்கேஜிங்கான திரைக்கதையில் பேசிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. கடந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் தமிழில் வெளியாகாத நிலையில், தொடர்ந்து தியேட்டருக்கு ரசிகர்களை மகாராஜா வரவழைத்து வருகிறது. இந்நிலையில், படம் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில் உலகம் முழுவதும் ரூ.81.8 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Latest News