5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Baakiyalakshmi: பாக்கியலட்சுமி சீரியலில் பரபர.. ராதிகா வீட்டில் அதிரடி காட்டும் ஈஸ்வரி… வைரல் வீடியோ!

Serial Update: கோபி இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று எழில் கூறுகிறார். தான் ஏன் வெளியேற வேண்டும், உன் அம்மா சொல்லிக் கொடுத்தாளா என்று கோபி பேச, இது என்னுடைய அம்மாவின் வீடு இதில் நாங்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் மனைவியுடன் வெளியேற வேண்டும் என்று கோபிக்கு எழிலுடன் செழியனும் சேர்ந்து கூற கோபியுடன் ஈஸ்வரியும் வீட்டை விட்டு ராதிகாவின் வீட்டிற்கு செல்கின்றனர்.

Baakiyalakshmi: பாக்கியலட்சுமி சீரியலில் பரபர.. ராதிகா வீட்டில் அதிரடி காட்டும் ஈஸ்வரி… வைரல் வீடியோ!
பாக்கியலட்சுமி
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 19 May 2024 20:21 PM

விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி, மூத்த மகன் செழியனாக விகாஷ் சம்பத், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன், மருமகள் ஜெனியாக திவ்யா கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 3 பிள்ளைகளுக்கு அப்பாவான கோபி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். ராதிகாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கோபியின் மகன் செழியனுக்கு குழந்தை பிறந்து கோபி தாத்தா ஆகிவிட்டார்.

Also read… பிரதமர் மோடியின் பயோ பிக் படத்தில் நடிக்கிறேனா? நடிகர் சத்யராஜ் விளக்கம்!

இந்த நிலையில் தற்போது ராதிகா கர்ப்பமாக இருக்கிறார். இது ராதிகாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் கோபி வீட்டில் உள்ள அனைவரிடமும் எப்படி சொல்வது என்று குழப்பமாக உள்ளார். அதனை தொடர்ந்து வீட்டில் உள்ள அனைவரிடம் பாக்கிய இந்த விசயத்தை போட்டு உடைக்க, கோபி இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று எழில் கூறுகிறார். தான் ஏன் வெளியேற வேண்டும், உன் அம்மா சொல்லிக் கொடுத்தாளா என்று கோபி பேச, இது என்னுடைய அம்மாவின் வீடு இதில் நாங்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் மனைவியுடன் வெளியேற வேண்டும் என்று கோபிக்கு எழிலுடன் செழியனும் சேர்ந்து கூற கோபியுடன் ஈஸ்வரியும் வீட்டை விட்டு ராதிகாவின் வீட்டிற்கு செல்கின்றனர்.

ஈஸ்வரியை இரு தினங்களில் வீட்டை விட்டு துரத்துவதாக ராதிகாவின் அம்மா சபதமிடுகிறார். ஆனால் ஈஸ்வரியின் அதிரடி செயல்களால் அவர் வீட்டை விட்டு வெளியேறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வாரத்திற்கான புரோமோ வீடியோவை சீரியல் குழு வெளியிட்ட நிலையில் அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Latest News