சிறகடிக்க ஆசை சீரியலில் புதிய என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்கள்!
சீரியல்களுக்கு பிரபலமான விஜய் டிவியில் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி முதல் இரவு நேரம் சிறகடிக்க ஆசை எனும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. எதிர்பாராத சூழ்நிலையில் திருமணம் செய்து கொள்ளும் மீனா மற்றும் முத்துக்குமாரை மையப்படுத்தி சிறகடிக்க ஆசை சீரியலின் கதை நகர்கிறது. இந்த சீரியலில் வரும் முத்துவின் கதாப்பாத்திரத்திற்கு இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரைம் டைம் எனப்படும் இரவு 9 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதோடு, இதன் திரைக்கதையும் விறுவிறுப்பாக செல்வதால் இதற்கான ரசிகர் வட்டம் பெரிதாகி வருகிறது
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிரபல நடிகர்கள் பொன்வண்ணன் மற்றும் வனிதா கிருஷ்ணசந்திரன் ஆகியோர் என்ட்ரி கொடுத்துள்ளனர். கடந்த வாரம் முழுவது இந்த சீரியலில் ஒளிபரப்பானது என்னவென்றால்முத்துவின் நண்பன் தன்னுடைய அண்ணனுக்கு கல்யாணம் என்று இன்விடேஷன் கொடுக்க வந்த நிலையில் முத்து ஜாலியாக அவரிடம் பார்த்துடா உன் அண்ணன் ஓடிப்போயிட்டா உன் தலையில அந்த பொண்ணை பிடிச்சு கட்டி வச்சிருவாங்க. அப்புறம் காலம் முழுக்க நீதான் கஷ்டப்படணும் என்று சொல்ல, இதைக்கேட்ட மீனா மிகவும் வருத்தப்பட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிடுகிறார். மீனாவை காணவில்லை என முத்து ஊர் முழுவதும் தேடிக் கொண்டிருக்க இதுதான் முத்துவை பழிவாங்குவதற்கு நல்ல சமயம் என்று முத்து மீது போலீசில் புகார் கொடுக்கச் சொல்லி மீனாவின் தம்பியை டெல்லி தூண்டி விடுகிறான். மீனாவை காணவில்லை என புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் முத்து அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து மீனாவின் தம்பியிடம் சண்டை போடுகிறான்.
சினிமா படங்களுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருப்பதைப் போன்று டிவிகளில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதோடு சீரியல்களில் நடிக்கும் நடிகர்களை தங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் போல அன்பு செலுத்தி வருகிறார்கள் பார்வையாளர்கள்.
Also read… இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா அர்ஜூன் – உமாபதி ராமையா வெட்டிங் போட்டோஸ்
சீரியல்களுக்கு பிரபலமான விஜய் டிவியில் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி முதல் இரவு நேரம் சிறகடிக்க ஆசை எனும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. எதிர்பாராத சூழ்நிலையில் திருமணம் செய்து கொள்ளும் மீனா மற்றும் முத்துக்குமாரை மையப்படுத்தி சிறகடிக்க ஆசை சீரியலின் கதை நகர்கிறது. இந்த சீரியலில் வரும் முத்துவின் கதாப்பாத்திரத்திற்கு இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரைம் டைம் எனப்படும் இரவு 9 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதோடு, இதன் திரைக்கதையும் விறுவிறுப்பாக செல்வதால் இதற்கான ரசிகர் வட்டம் பெரிதாகி வருகிறது.
இந்த நிலையில் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியலில் இரு நடிகர்கள் புதிய என்ட்ரி கொடுத்துள்ளனர். அவர்கள் ஹோட்டல் வைத்திருக்கும் ஜோடிகளாக அறிமுகமாகிறார்கள், முதல் காட்சி முத்துவுடன் தான் அமைந்துள்ளது. அவர்கள் யார் யார் என்றால் தமிழில் பல படங்களில் நாயகனாக, வில்லனாக, குணச்சித்திர நடிகனாவும் கலக்கிய பொன்வண்ணன் மற்றும் வனிதா கிருஷ்ணசந்திரன் ஆகியோர் ஆகும். அவர்கள் இடம்பெறும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.