The Goat: விஜயின் ‘தி கோட்’ படத்தின் கதை இதுதானா? – இணையத்தில் வைரலாகும் தகவல்!

The Greatest of All Time: இந்தப் படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடைசியாக விஜய்யின் புதிய கீதை படத்துக்கு இசையமைத்த யுவன், அதன் பின்னர் சுமார் 21 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய்யுடன் இணைந்திருக்கிறார்.

The Goat: விஜயின் ‘தி கோட்’ படத்தின் கதை இதுதானா? - இணையத்தில் வைரலாகும் தகவல்!

‘தி கோட்’

Published: 

20 Jun 2024 13:03 PM

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து வரும் ’தி கோட்’ திரைப்படத்தின் கதை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் தற்போது கூட்டணி அமைத்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தி கோட். இந்தப் படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடைசியாக விஜய்யின் புதிய கீதை படத்துக்கு இசையமைத்த யுவன், அதன் பின்னர் சுமார் 21 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய்யுடன் இணைந்திருக்கிறார்.

இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பதாக கூறப்பட்டாலும், கோட் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி பற்றிய அப்டேட் இதுவரை வெளியாகவில்லை.  சென்னை, ரஷ்யா, திருவனந்தபுரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘விசில் போடு’ கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. இதையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு சினிமாவில் 17 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்ட நிகழ்ச்சியில் 2 -வது சிங்கிள் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22- ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும், செபடம்பர் 5-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் மலேசியாவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read… RJ Balaji Birth Day : +2 தோல்வி.. ரேடியோவில் வேலை.. ஆர்ஜே பாலாஜி குறித்த சுவாரஸ்ய விஷயங்கள்

சமீபத்தில் தான் இப்படத்திற்கான டீ ஏஜிங் வேலைக்காகவிஜய், வெங்கட் பிரபு லாஸ் ஏஞ்சலஸ் சென்று இருந்தனர். அங்கு விஜய்யை வைத்து சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதனை முடித்துவிட்டு விஜய் சென்னை திரும்பினார். சென்னையில் இன்னும் சில நாட்கள் மட்டுமே விஜய்யின் காட்சிகள் படமாக்கப்படும் என கூறப்படுகிறது.

கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக கசிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், கோட் படத்தின் கதையே இணையத்தில் கசிந்துள்ளது. 2004ல் நடந்த ரஷ்யாவின் மாஸ்கோ நகர மெட்ரோவில் ஒரு தீவிரவாதி உடம்பில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு வந்து வெடிக்கவைத்து நடத்திய தற்கொலை தாக்குதலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்களை பிடிப்பது தான் விஜய்யின் கோட் பட கதை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என்பது படம் வெளியான பின்னறே தெரியவரும்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!