5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பிரேம்ஜி கல்யாணம்.. பொண்ணு யார் தெரியுமா, என்ன வேலை பாக்குறாங்க? விவரம்

Actor Premji Wedding: நேற்று இயக்குனர் வெங்கட் பிரபு பிரேம்ஜியின் கல்யாண கோலத்தில் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் ஃபைனலி.... லவ் யூ என்று பதிவிட்டுள்ளார். இந்த போஸ்ட் இணையத்தில் வேகமாக வரவத் தொடங்கியது. பத்திரிகையில் குறிப்பிட்டது போல தற்போது திருமணம் நடந்து முடிந்திருக்கும் விரைவில் திருமண புகைப்படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரேம்ஜி கல்யாணம்.. பொண்ணு யார் தெரியுமா, என்ன வேலை பாக்குறாங்க? விவரம்
பிரேம்ஜி, இந்து
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Jun 2024 10:57 AM

சேலத்தை சேர்ந்த பெண் இந்து உடன் நடிகர் பிரேம்ஜிக்கு இன்று திருமணம் நடைபெறும் நிலையில் நேற்று பொண்ணு மாப்பிள்ளையின் நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் பிரேம்ஜியின் திருமண பத்திரிகை இணையத்தில் வைரலான நிலையில் இயக்குநரும் பிரேம்ஜியின் அண்ணனுமான வெங்கட் பிரபு தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் பிரேம்ஜி திரையுலக வாரிசு நடிகர் என்றாலும் என்றும் இவரது அண்ணன் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் இவருக்கென தனி ரசிகர்கள் இருக்கத்தான் செய்தனர். வெங்கட்பிரபு கதை இல்லாமல் கூட படம் இயக்குவார். ஆனால், அவரது தம்பி இல்லாமல் படம் இயக்க மாட்டார் என்று அனைத்து தரப்பினரும் கிண்டலடித்து வந்தனர். 44 வயதை கடந்த பிரேம்ஜி திருமணம் செய்யாமல் சுற்றித்திரிந்தார். ஆனால், கடந்த ஜனவரியில் ஆங்கில வருடப்பிறப்பில் இந்த ஆண்டு கண்டிப்பாக திருமணம் செய்யப்போகிறேன் என்ற தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

இதனிடையே சில நாட்களுக்கு முன்பு, நடிகர் பிரேம்ஜிக்கும், இந்து என்ற பெண்ணுக்கும் ஜூன் 9 ஆம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் வைத்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் நடக்கவுள்ளதாக பத்திரிக்கை ஒன்று வெளியானது. இதனை உறுதி செய்து இயக்குநர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அதில் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மிகவும் நெருங்கிய வட்டத்தை அழைத்து நடக்கவுள்ளதால் தங்களின் ப்ரைவஸிக்கு மதிப்பளிக்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும், மணமகள் மீடியாவை சேர்ந்தவர் இல்லை என்று தெரிவித்த வெங்கட் பிரபு, மணமக்களை ஆசிர்வதிக்குமாறும் அந்த அறிகையில் கேட்டுக்கொண்டார்.

 

View this post on Instagram

 

A post shared by Venkat Prabhu (@venkat_prabhu)

இந்நிலையில் நேற்று இயக்குனர் வெங்கட் பிரபு பிரேம்ஜியின் கல்யாண கோலத்தில் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் ஃபைனலி…. லவ் யூ என்று பதிவிட்டுள்ளார். இந்த போஸ்ட் இணையத்தில் வேகமாக வரவத் தொடங்கியது. பத்திரிகையில் குறிப்பிட்டது போல தற்போது திருமணம் நடந்து முடிந்திருக்கும் விரைவில் திருமண புகைப்படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also read… நடிகைகளுக்குள் அந்த உணர்வு கண்டிப்பாக இருக்க வேண்டும்… தமன்னா ஓபன் டாக்!

இந்நிலையில் பிரேம்ஜியை திருமணம் செய்துக்கொண்ட பெண் குறித்த தகவலும் இணையத்தில் பரவி வருகிறது. அதில் நடிகர் பிரேம்ஜியை திருமணம் செய்துள்ள பெண்ணின் பெயர் இந்து. அவர் சேலத்தை பூர்விகமாக கொண்டவர். வங்கி தொடர்ன்பான வேலையில் இருக்கும் இந்துவிற்கும் பிரேம்ஜிக்கும் இது காதல் திருமணம் என்று கூறப்படுகிறது. இந்துதான் முதலில் பிரேம்ஜியிடம் தனது காதலைத் தெரிவித்ததாகவும் பின்னர் வீட்டில் பேசி தற்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Latest News