5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்.. நோட்டீஸ் அனுப்பிய மருத்துவத்துறை!

தனது குழந்தை பிறக்கும் போது எடுத்த வீடியோவை இர்ஃபான் தனது யூடியூபில் பதிவிட்டிருந்தார். பிரசவத்தின்போது தனது மனைவியின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டும் இந்த வீடியோவை பலர் சமூக வலைதளங்களில் உணர்ச்சிவசப்பட்டு பகிர்ந்து வந்தார்கள். ஆனால் மருத்துவர்களிடம் இந்த வீடியோ பெரும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இது  இந்திய மருத்துவ சட்டத்தின் படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்.. நோட்டீஸ் அனுப்பிய மருத்துவத்துறை!
இர்ஃபான்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Oct 2024 16:30 PM

பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது மனைவி ஆலியாவிற்கு குழந்தை பிறக்கும்போது தொப்புள்கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்ட நிலையில் விளக்கம் கேட்க உள்ளதாக ஊரக நலப்பணி இயக்குநர் மருத்துவர் ஜே ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார். 2018ம் ஆண்டு முதல் யூடியூபராக இருந்து வரும் இர்ஃபானுக்கு  மில்லியன் கணக்கான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.  பல வகையான உணவுகள் குறித்து அவர் வெளியிடும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய அளவில் மட்டுமின்றி உலக நாடுகளில் இருக்கும் பிரபலமான ஹோட்டல்களுக்கு சென்று அங்கு இருக்கும் ஸ்பெஷல் உணவுகளை பற்றி வீடியோ எடுப்பது நல்ல வரவேற்பை பெற்றது. இர்ஃபான் விஜய் டிவியில் இறுதியாக ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிலையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் இர்ஃபான்.

இர்ஃபானுக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், அவரது மனைவி ஆலியா கர்ப்பமாக இருந்த போது அந்த குழந்தை ஆணா? பெண்ணா? என்பது குறித்து வெளியிட்ட வீடியோ முன்னதாக சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் குழந்தை பிறப்பதற்கு முன்னர் அந்தக் குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் சென்டரில் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தால் அந்த ஸ்கேன் சென்டரை இழுத்து மூடி சீல் வைத்து விடுவார்கள். அந்த மருத்துவருக்கும் மிகப்பெரிய தண்டனை உண்டு. இந்தியாவில் தண்டனைக்குறிய குற்றமான இந்த செயலை இர்ஃபான் மட்டும் எப்படி செய்தார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்த நிலையில் இர்ஃபான் துபாய்க்கு குடும்பத்துடன் சென்று, அங்கு ஸ்கேன் செய்து தனது மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தை பற்றிய தகவலை வெளியிட்டு இருக்கிறார். அங்கு இதற்கு அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Also read… OTT Movies: இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் கோலிவுட் படங்களின் லிஸ்ட் இதோ!

இந்த வீடியோ வைரலான நிலையில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை வீடியோவாக வெளியிட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது. தன்னை தொடர்பு கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரினார் இர்ஃபான். அதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

Also read… ’கூலி’ படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு தயாராகும் ரஜினி… அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அப்டேட் இதோ!

இந்த நிலையில் தனது குழந்தை பிறக்கும் போது எடுத்த வீடியோவை இர்ஃபான் தனது யூடியூபில் பதிவிட்டிருந்தார். பிரசவத்தின்போது தனது மனைவியின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டும் இந்த வீடியோவை பலர் சமூக வலைதளங்களில் உணர்ச்சிவசப்பட்டு பகிர்ந்து வந்தார்கள். ஆனால் மருத்துவர்களிடம் இந்த வீடியோ பெரும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இது  இந்திய மருத்துவ சட்டத்தின் படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

தனது மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரிக்கோலால் வெட்டும் வீடியோவை வெளியிட்ட  யூடியூபர் இர்ஃபானிடம் விளக்கம் கேட்க உள்ளதாக ஊரக நலப்பணி இயக்குனர்‌ மருத்துவர்ஜெ.ராஜமூர்த்தி தகவல்‌ தெரிவித்துள்ளார். இதையடுத்து, சம்மந்தப்பட்ட மருத்துவர்கள்‌ மீது மருத்துவ கவுன்சிலில்‌ புகாரளிக்க உள்ளதாகதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

Latest News