5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

’கோட்’ படத்தின் புதிய அப்டேட் கொடுத்த யுவன்… வைரலாகும் வீடியோ!

The Greatest of All Time: இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘விசில் போடு’ கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. இதையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு சினிமாவில் 17 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்ட நிகழ்ச்சியில் 2 -வது சிங்கிள் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22- ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும், செபடம்பர் 5-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

’கோட்’ படத்தின் புதிய அப்டேட் கொடுத்த யுவன்… வைரலாகும் வீடியோ!
’கோட்’
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 28 May 2024 13:14 PM

லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் தற்போது கூட்டணி அமைத்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தி கோட். இந்தப் படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பதாக கூறப்பட்டாலும், கோட் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி பற்றிய அப்டேட் இதுவரை வெளியாகவில்லை. சென்னை, ரஷ்யா, திருவனந்தபுரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

Also read… கொக்கிகுமாரும்.. புதுப்பேட்டை படமும்… தனுஷ் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தைகள்!

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘விசில் போடு’ கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. இதையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு சினிமாவில் 17 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்ட நிகழ்ச்சியில் 2 -வது சிங்கிள் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22- ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும், செபடம்பர் 5-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் மலேசியாவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தான் இப்படத்திற்கான டீ ஏஜிங் வேலைக்காகவிஜய், வெங்கட் பிரபு லாஸ் ஏஞ்சலஸ் சென்று இருந்தனர். அங்கு விஜய்யை வைத்து சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதனை முடித்துவிட்டு விஜய் சென்னை திரும்பினார். சென்னையில் இன்னும் சில நாட்கள் மட்டுமே விஜய்யின் காட்சிகள் படமாக்கப்படும் என கூறப்படுகிறது.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யுவன் சங்கர் ராஜா ‘கோட்’ படத்தில் நடிகர் விஜய் மொத்தம் இரண்டு பாடல்களை பாடியுள்ளார் என்ற தகவலை தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News