5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

GOAT Movie 2nd Single: அக்கா பவதாரணி குறித்து யுவன் உருக்கம்… ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

Yuvan Shankar Raja: நேற்று ’சின்ன சின்ன கண்கள்’ எனத் தொடங்கும் இந்தப் பாடல் நடிகர் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரணி குரலில் வெளியானது. பாடகி பவதாரணி சமீபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குரல் ஏஐ மூலம் இந்த பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இசையமைப்பாளரும் பவதாரணியின் தமியுமான யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

GOAT Movie 2nd Single: அக்கா பவதாரணி குறித்து யுவன் உருக்கம்… ஆறுதல் கூறும் ரசிகர்கள்!
யுவன் – பவதாரணி
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 18 Nov 2024 19:04 PM

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் ஏஐ மூலம் பவதாரணி குரல் பயன்படுத்தப்பட்டது குறித்து இசையமைப்பளர் யுவன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ’கோட்’ படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் வீடியோ மற்றும் கிளிம்ஸ் வீடியோ என அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை ரசிகர்களு கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தது படக்குழு. இந்தப் படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடைசியாக விஜய்யின் புதிய கீதை படத்துக்கு இசையமைத்த யுவன், அதன் பின்னர் சுமார் 21 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய்யுடன் இணைந்திருக்கிறார்.

நேற்று ’சின்ன சின்ன கண்கள்’ எனத் தொடங்கும் இந்தப் பாடல் நடிகர் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரணி குரலில் வெளியானது. பாடகி பவதாரணி சமீபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குரல் ஏஐ மூலம் இந்த பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இசையமைப்பாளரும் பவதாரணியின் தமியுமான யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Also read… விடாமுயற்சி ஷூட்டிங்கில் மீண்டும் இணைந்த அஜித்… நடிகர் ஆரவ் போட்ட போட்டோ!

அதில், “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் இரண்டாவது சிங்கிள் எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பெங்களூருவில் இந்தப் பாடலை நான் இசையமைத்த போது, நானும், வெங்கட்பிரபுவும் இந்தப் பாடலை சகோதரி பாடினால் சரியாக இருக்கும் என நினைத்தோம். அவர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வந்ததும் அவருடைய குரலில் பாடலை பதிவு செய்யலாம் என நினைத்திருந்தேன்.

ஆனால், ஒரு மணிநேரம் கழித்து அவர் மறைந்த செய்தி கிடைத்தது. அவருடைய குரலை இப்படி பயன்படுத்துவேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. எனது இசைக்குழுவினருக்கும், இந்த சாத்தியப்படுத்தியதில் பங்காற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு விவரிக்க முடியாத இனிப்பும், கசப்பும் கலந்த தருணம்” என தெரிவித்துள்ளார். இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள் யுவன் சங்கர் ராஜவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Latest News