5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Manipur: சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல்.. மணிப்பூரில் 11 ஆயுதக்குழுவினர் சுட்டுக்கொலை

இம்பால் பள்ளத்தாக்கில் வயல்களில் பணிபுரியும் விவசாயிகள் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக மலைப்பகுதியை சார்ந்த ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சிறிது நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மூன்று நாட்களாக மணிப்பூரின் மலை மற்றும் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

Manipur: சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல்.. மணிப்பூரில் 11 ஆயுதக்குழுவினர் சுட்டுக்கொலை
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 11 Nov 2024 19:35 PM

மணிப்பூரில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் ஆயுதக்குழுவைச் சேர்ந்த 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் ஜிரிபாம் மாவட்டத்தில் இன்று இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. அங்கு பாதுகாப்பு படையைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்கியிருந்த முகாம் மீது ஆயுதக்குழுவினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த மோதலில் ஒரு சிஆர்பிஎஃப் வீரர் காயமடைந்தார். அவர் உடனடியாக விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read:Viral Video : அந்தரங்க வீடியோ சர்ச்சை.. இணையத்தில் வைரலாகும் மினாஹில் மாலிக்கின் நடன வீடியோ!

தொடரும் பதற்றம் 

கடந்த ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூரில் உள்ள இம்பாலை தளமாகக் கொண்டு வசித்து வரும் மெய்தி இன மக்கள் மற்றும் அதை ஒட்டிய மலைப்பகுதிகளை சார்ந்த குக்கி இன மக்களுக்கு இடையே நடந்த மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் மக்கள் கொல்லப்பட்டனர். வீடுகள் சூறையாடப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும், உடமைகளையும் இழந்தனர்.அங்கு பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கையை எடுத்தது. இந்த வன்முறை காரணமாக 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்ததாக சொல்லப்படுகிறது.

பின்னர் அங்கு நிலைமை சீராகி வந்த நிலையில்,கடந்த செப்டம்பர் மாதம் மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  முன்னெச்சரிக்கை காரணமாக தொடர்ச்சியாக பலத்த பாதுகாப்பு, ஊரடங்கு ஆகியவை அம்மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான 31 வயது பெண் வன்முறையாளர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டதால் மீண்டும் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

Also Read: Telangana: மாவட்ட ஆட்சியர், தாசில்தாருக்கு சரமாரி அடி.. தெலங்கானா மக்கள் ஆவேசம்!

விவசாயிகள் மீது தாக்குதல்

இதனிடையே இன்று காலை மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள வயல்களில் வேலை பார்த்து வந்த விவசாயி ஒருவர் அருகில் உள்ள மலை உச்சியில் இருந்து ஆயுதக் குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயம் அடைந்தார்.இம்பால் பள்ளத்தாக்கில் வயல்களில் பணிபுரியும் விவசாயிகள் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக மலைப்பகுதியை சார்ந்த ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சிறிது நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த மூன்று நாட்களாக மணிப்பூரின் மலை மற்றும் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் சி.ஆர்.பி.எஃப் வீரர்களால் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் போது பல ஆயுதங்கள், வெடிமருந்துகள்கைப்பற்றியதாக அஸ்ஸாம் ரைபிள்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest News