சத்தீஸ்கரில் வேன் கவிழ்ந்து விபத்து.. 18 பேர் உயிரிழப்பு.. சத்தீஸ்கரில் சோகம்!
சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 25 முதல் 30 தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. அப்போது, சம்பவ இடத்திலேயே 18 பேர் உயிரிழந்தனர். 17 பெண்கள், ஒரு ஆண் என உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த நான்கு பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சையில் அளிக்கப்பட்டு வருகிறது.
வாகனம் கவிழ்ந்து விபத்து: சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குக்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஹ்பானி கிராமத்திற்கு அருகே மதியம் 1.45 மணியளவில் விபத்து ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் டெண்டு இலைகளைப் பறித்துவிட்டு காட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, வாகனம் கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. அப்போது, சம்பவ இடத்திலேயே 18 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
18 பேர் உயிரிழப்பு:
அங்கு, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்த நிலையில், நான்கு பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து போலீசார் கூறுகையில், “தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 17 பெண்கள், ஒரு ஆண் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர். நான்கு பேர் காயம் அடைந்துள்ளனர்.
Also Read : ”இங்க யாரும் ஸ்பெஷல் கிடையாது” இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி கருத்து!
இந்த வாகனத்தில் 25 முதல் 30 பேர் இருந்ததாக தெரிகிறது” என்றார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து எப்படி நடந்தது? விபத்துக்கான காரணம் என்ன? அதிகளவிலான நபர்களை ஏற்றியதால் விபத்து ஏற்பட்டதா? என பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
#UPDATE | Chhattisgarh | 17 people died after a pick-up vehicle overturned near the Kawardha area: Abhishek Pallav, Kawardha SP.
— ANI (@ANI) May 20, 2024
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் விஷ்ணு தியோ சாய் இரங்கல் தெரிவித்ததோடு, காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியை வழங்க மாவட்ட நிர்வாகத்தில் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் விஷ்ணு தியோ சாய், ”பீர்தாம் மாவட்டத்தில் உள்ள பஹ்பானி கிராமம் அருகே பிக்கப் வாகனம் கவிழ்ந்ததில் 18 கிராம மக்கள் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
“சத்தீஸ்கரின் கவர்தாவில் நடந்த சாலை விபத்து மிகவும் வேதனையானது. இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய விரும்புகிறேன். மாநில அரசு, உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவும்” என்று தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
Also Read : ஒடிசாவில் தமிழரை மையப்படுத்தி பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி.. என்ன மேட்டர்