Parliament Session: உச்சக்கட்ட எதிர்பார்ப்பு.. கூடியது 18வது மக்களவை கூட்டத்தொடர்!
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநிலங்களவை கூட்டத்தொடரும் ஜூன் 27ஆம் தேதி தொடங்கி ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 27ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவார். குடியரசுத் தலைவர் உரையில் புதிய அரசின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டம் அடிக்கோடிட்டு காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும்.
18வது மக்களவை கூட்டத்தொடர்: நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது. 240 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. இருப்பினும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத போதிலும் தெலுங்கு தேசம் 16 இடங்கள், ஐக்கிய ஜனதா தளம் (12) இடங்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்திய பாஜக ஆட்சியமைத்தது. பிரதமராக மூன்றாவது முறையாக மோடி பதவியேற்றார். இந்த நிலையில், 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநிலங்களவை கூட்டத்தொடரும் ஜூன் 27ஆம் தேதி தொடங்கி ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஜூன் 27ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவார். குடியரசுத் தலைவர் உரையில் புதிய அரசின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டம் அடிக்கோடிட்டு காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் உரைக்கு பிறகு தனது அமைச்சர்களை மோடி நாடாளுமன்றத்திற்கு அறிமுகப்படுத்துவார். இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும். தற்போதைய மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பலம் அதிகரித்துள்ளதால், விவாதத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: பற்றி எரியும் நீட் தேர்வு விவகாரம்.. அதிரடியாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ!
இறுதியாக, விவாதத்துக்கு பிரதமர் மோடி பதலளித்து உரையாற்றுவார் மக்களவைத் கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாட்களில் புதிய எம்.பிக்கள் பதவியேற்பார்கள். மக்களவை இடைக்கால தலைவர் பர்த்ருஹரி மகதாப் முன்னிலையில் எம்.பிக்கள் பதவியேற்பு நடைபெறும். ஜூன் 26ஆம் தேதி மக்களவைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளன.
அடுத்த சபாநாயகர் யார்?
இதற்கிடையில், மக்களவையின் அடுத்த சபாநாயகர் யார் என கேள்வியும் நீடித்து வருகிறது. பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுமே மக்களவைத் சபாநாயகர் பதவியை எதிர்பார்ப்பதாக கூறப்படும் நிலையில், பாஜக அப்பதவியை விட்டுக் கொடுக்காத என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. கடந்த முறை ராஜஸ்தான் எம்.பி. ஓம் பிர்லா மக்களவைத் தலைவராக செயல்பட்டார். அவருக்கே பாஜக மீண்டும் வாய்ப்பளிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், பாஜக மூத்த தலைவர்கள் டி.புரந்தரேஸ்வரி, ராதா மோகன் சிங் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிப்படுகிறது. கடந்த இரு தேர்தல்களைப் போல் இல்லாமல் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பலம் இம்முறை கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி தரப்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது. எனவே, கருத்தொற்றுமை அடிப்படையில் மக்களவைத் தலைவர் தேர்வாவது சிறப்பாக இருக்கும் என அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தார்.
Also Read: நாடாளுமன்றத்தில் காத்திருக்கும் சம்பவம்.. ஜூன் 25ல் பதவியேற்கும் தமிழக எம்.பிக்கள்!