Parliment Session: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் நாடாளுமன்ற கூட்டம்.. எப்போது தொடங்குகிறது?

18வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டம் வரும் ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜூ அறிவித்துள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் 2 நாட்கள் பதவியேற்க உள்ளனர். பதவியேற்கும் மக்களவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். அதைத் தொடர்ந்து, ஜூன் 26ஆம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளதாகவும், ஜூன் 27ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை இடம்பெறும் என மத்திய அமைச்சர் கிரிண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

Parliment Session: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் நாடாளுமன்ற கூட்டம்.. எப்போது தொடங்குகிறது?

நாடாளுமன்றம்

Updated On: 

22 Nov 2024 11:23 AM

18வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டம் வரும் ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜூ அறிவித்துள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் 2 நாட்கள் பதவியேற்க உள்ளனர். பதவியேற்கும் மக்களவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். அதைத் தொடர்ந்து, ஜூன் 26ஆம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளதாகவும், ஜூன் 27ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை இடம்பெறும் என மத்திய அமைச்சர் கிரிண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். பின்னர், விவாதங்கள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 27ஆம் தேதி தொடங்கும் மாநிலங்களவை கூட்டத்தொடர் ஜூலை 3ஆம் தேதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஒடிசா முதல்வராக இன்று பதவியேற்கும் மோகன் மாஜி.. பிரதமர் மோடி பங்கேற்பு!

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாஜக 2024 தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெறும் 293 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகவே பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எதிர்க்கட்சிகள் அசுர பலத்துடன் இருக்கின்றன. அதாவது, இந்தியா கூட்டணி 234 இடங்களை கைப்பற்றியது. இந்த நிலையில், வரும் 24ஆம் தேதி நாடாளுமன்ற கூடடத்தொடர் தொடங்க உள்ளது. இதில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 எம்.பிக்கள் உள்ளனர். இந்தியா கூட்டணிக்கு 234 எம்.பிக்கள் உள்ளன.

இதில், காங்கிரஸ் கட்சிக்கு 99 எம்.பிக்கள் உள்ளனர். அதேபோல, என்டிஏ கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்.பிக்களும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 12 எம்.பிக்களும் உள்ளனர். மேலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு 7 எம்.பிக்களும், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி பரிஷத் கட்சிக்கு 5 எம்.பிகளும் உள்னர். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு 234 எம்.பிக்களும் உள்ளனர். அதில், காங்கிரஸ் கட்சிக்கு 99 எம்.பிக்களும், சமாஜ்வாதி கட்சிக்கு 37 எம்.பிகளும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 22 எம்.பிகளும், திமுகவுக்கு 9 எம்.பிகளும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசோனா 8 எம்.பிகளும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு உள்ளன. இப்படியான சூழலில், வரும் 27ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது.

 

சரும வறட்சிக்கு சிகிச்சை அளிக்கும் கற்றாழை ஜெல்..!
மனித உடலில் உள்ள இரத்தம் ஏன் உப்பாக இருக்கிறது..?
குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!
இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!