இனி லேட்டா சென்றால் அரை நாள் சம்பளம் கட்.. ஊழியர்களை அலர்ட் செய்த மத்திய அரசு!
மத்திய அரசு ஊழியர்கள் தினமும் காலை 9.15 மணிக்குள் அலுவலகத்திற்கு வர வேண்டும். இல்லையென்றால் அரை நாள் விடுப்பு கணக்கில் சேரும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு அலுவலகங்களில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை அலுவலக நேரமாக உள்ளது. இருப்பினும் அங்கு ஊழியர்கள் தினசரி தாமதமாக அலுவலகத்திற்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அரசு ஊழியர்கள் குறித்த நேரத்தில் அலுவலகத்துக்கு வராமல் தாமதமாக வருவது அவர்களின் தகுதிக்கு ஏற்ற செயலாக இருக்காது என்று மத்திய அரசு ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியது.
அரை நாள் சம்பளம் கட்: மத்திய அரசு ஊழியர்கள் தினமும் காலை 9.15 மணிக்குள் அலுவலகத்திற்கு வர வேண்டும். இல்லையென்றால் அரை நாள் விடுப்பு கணக்கில் சேரும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு அலுவலகங்களில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை அலுவலக நேரமாக உள்ளது. இருப்பினும் அங்கு ஊழியர்கள் தினசரி தாமதமாக அலுவலகத்திற்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அரசு ஊழியர்கள் குறித்த நேரத்தில் அலுவலகத்துக்கு வராமல் தாமதமாக வருவது அவர்களின் தகுதிக்கு ஏற்ற செயலாக இருக்காது என்று மத்திய அரசு ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியது. மத்திய அரசு அலுவலகங்களில் ஆதார் தகவலுடன் கூடிய கைரேகை வைக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு உள்ள போதிலும் கொரோனா காலத்திற்கு பிறகு ஊழியர்கள் அதை கடைப்பிடிப்பதில்லை. இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Also Read: முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.. மத்திய அரசு திடீர் அறிவிப்பு.. காரணம் என்ன?
மத்திய அரசு எச்சரிக்கை:
அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு 15 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக வந்தால் அரை நாள் விடுப்பு கணக்கில் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், ” அரசு ஊழியர்கள் காலை 9.15 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்துவிட வேண்டும். ஒருவேளை விடுமுறை வேண்டும் என்றால் முன்கூட்டியே தெரிவித்து விண்ணப்பிக்க வேண்டும். ஊழியர்களின் தினசரி வருகையை அந்தந்த அலுவலகங்களில் பணியில் உள்ள அதிகாரிகள் கண்காணிப்பர். மேலும், பயோமெட்ரிக் வருகைப்பதிவையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “எங்களுக்கு இதுதான் பணி நேரம் என்று கிடையாது. பல நாட்கள் இரவு 7 மணி வரை அலுவலகத்தில் பணியாற்றி இருக்கிறோம். கொரோன காலத்திற்கு பிறகு பணிகள் அனைத்து கணினி மயமாகி விட்டது. கொரோனா காலத்தில் வீட்டில் பணிபுரிந்தது போலவே, பல நாட்கள் விடுமுறை நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் கூட வீட்டில் அலுவலக வேலைகளை செய்து வருகிறோம். நேரடியாக மக்களை சந்தித்து குறைதீர்க்கும் பணியில் உள்ளவர்கள் உரிய நேரத்திற்கு வருவது கட்டாயமாக இருக்கலாம். ஆனால், கணினி வழியே பணி செய்பவர்கள் தொலைதூரத்தில் இருந்து வரும்போது நேரக் கட்டுப்பாட்டில் தளர்வுகள் அளிக்க வேண்டும்” என்றார்.
Also Read: முதுநிலை நீட் தேர்வு ரத்து… முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!